CSK vs GT: முஸ்தாபிசுர்க்கு பதில் பதிரானா? சென்னை அணி எடுத்த முக்கிய முடிவு!

Chennai Super Kings vs Gujarat Titans: இந்தியன் பிரீமியர் லீக் 2024ன் இன்றைய போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் மோதுகிறது.  இந்த போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது.  இந்த இரண்டு அணிகளும் கடைசியாக ஐபிஎல் 2023 பைனலில் நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் விளையாடியது. கடைசி பந்துவரை இருந்த பரபரப்புக்கு மத்தியில் ஜடேஜா சென்னை அணிக்கு 5வது கோப்பையை வெற்றி பெற்று கொடுத்தார். அதற்கு பலி தீர்க்கும் விதமாக சென்னையில் வைத்து சென்னை சூப்பர் கிங்ஸை தோற்கடிக்க குஜராத் தயாராக உள்ளது.  

இந்த இரு அணிகளும் ஐபிஎல் 2024ல் தங்களது தொடக்க ஆட்டத்தில் வெற்றி பெற்றுள்ளனர். சேப்பாக்கத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியை சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. அதே சமயம் கடந்த ஞாயிற்றுக்கிழமை அகமதாபாத்தில் நடைபெற்ற போட்டியில் குஜராத் அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 6 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இதனால் இரு அணிகளும் பாசிட்டிவான மோடில் உள்ளனர்.  மேலும் இரண்டு அணிகளும் தங்களது பிளேயிங் 11ல் மாற்றம் செய்ய வாய்ப்புள்ளது.

CSK vs GT

தொடை தசையில் ஏற்பட்ட காயம் காரணமாக இலங்கை வேகப்பந்து வீச்சாளர் மதீஷா பத்திரனா முதல் போட்டியில் விளையாடவில்லை. அவருக்கு பதில் சென்னை அணியில் விளையாடிய வங்கதேச இடது கை வேகப்பந்து வீச்சாளர் முஸ்தாபிசுர் ரஹ்மான் ஆர்சிபிக்கு எதிராக போட்டியில் சிறப்பாக பந்து வீசினார். மொத்தமாக நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றி சென்னை அணி முதல் போட்டியில் வெற்றி பெற அடித்தளம் அமைத்தார். இதன் காரணமாக தற்போது சென்னை அணியில் பத்திரனா இணைந்து இருந்தாலும், இன்றைய போட்டியில் அவர் களமிறங்க வாய்ப்பு இல்லை.  

குஜராத் அணி முதல் ஆட்டத்தில் வெற்றி பெற்றாலும், இன்று சென்னையில் விளையாட உள்ளதால் அவர்களது ப்ளெயிங் 11ல் சில மாற்றம் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.  கடந்த போட்டியில் ஸ்பென்சர் ஜான்சனின் பந்துவீச்சு எடுபடவில்லை.  இதனால் அவருக்கு பதிலாக சுழற்பந்து வீச்சாளர் நூர் அஹ்மத்க்கு வாய்ப்பு கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சேப்பாக்கம் மைதானம் சுழற்பந்து வீச்சிற்கு சாதகமாக இருக்கும் என்பதால் நிச்சயம் அவர் விளையாடுவார் என்று கூறப்படுகிறது. மேலும், சாய் கிஷோர், ரசித் கான் ஆகியோருடன் குஜராத் அணி களமிறங்க உள்ளது.

சிஎஸ்கே உத்ததேச XI: ருதுராஜ் கெய்க்வாட் (கேப்டன்), ரச்சின் ரவீந்திரா, அஜிங்க்யா ரஹானே, டேரில் மிட்செல், ரவீந்திர ஜடேஜா, சமீர் ரிஸ்வி, எம்எஸ் தோனி (விக்கெட் கீப்பர்), தீபக் சாஹர், மகேஷ் தீக்ஷனா, முஸ்தபிசுர் ரஹ்மான், துஷார் தேஷ்பாண்டே

இம்பாக்ட் பிளேயர் சப்ஸ்: ஷர்துல் தாக்கூர், ஷிவம் துபே, ஷேக் ரஷீத், நிஷாந்த் சிந்து & மொயின் அலி.

குஜராத் உத்ததேச XI: ஷுப்மான் கில் (கேப்டன்), விருத்திமான் சாஹா (விக்கெட் கீப்பர்), சாய் சுதர்சன், விஜய் சங்கர், டேவிட் மில்லர், அஸ்மத்துல்லா ஓமர்சாய், ராகுல் தெவாடியா, ரஷித் கான், உமேஷ் யாதவ், ரவிஸ்ரீனிவாசன் சாய் கிஷோர், நூர் அகமது

இம்பாக்ட் பிளேயர் சப்ஸ்: பிஆர் ஷரத், மோஹித் ஷர்மா, மானவ் சுதர், அபினவ் மனோகர், ஸ்பென்சர் ஜான்சன்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.