டைட்டானிக் கதவு ரூ.5 கோடிக்கு ஏலம்

1912ம் ஆண்டு உலகின் மிகப்பெரிய ஆடம்பரமான பயணிகள் கப்பல் என்று வர்ணிக்கப்பட்ட டைட்டானிக் கப்பல் தனது முதல் பயணத்தின்போதே அட்லாண்டிக் பெருங்கடலில் பனிப்பாறை மீது மோதி மூழ்கிப்போனது. அதில் பயணித்த 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.

இந்த சம்பவத்தை கொண்டு ஹாலிவுட்டில் 1997ம் ஆண்டு ஜேம்ஸ் கேமரூன் இயக்கத்தில் வெளியான 'டைட்டானிக்' படம் இன்றளவும் மிகச்சிறந்த படமாக கொண்டாடப்படுகிறது. இதில் இளம் காதலர்களாக அறிமுகமான லியோனார்டோ டிகாப்ரியோ, கேட் வின்ஸ்லெட் இருவருமே ஹாலிவுட்டில் முன்னணி நடிகர்களாகி ஆஸ்கர் விருதுகளையும் வென்றனர்.

இந்தப் படத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கப்பல் மூழ்கிய பிறகு ஹீரோயினை காப்பாற்றி ஒரு மரக் கதவில் ஏற்றி விடுவார் ஹீரோ. அதில் அவர் படுத்திருப்பார், அந்த கதவை பிடித்து தொங்கியபடி ஹீரோ காதலியுடனான தனது கடைசி உரையாடலை நிகழ்த்துவார். ஒருவர் மட்டுமே அந்த மரக்கதவின் மூலம் உயிர் பிழைக்க முடியும் என்பதால் நாயகன் தண்ணீரில் மூழ்கி உயிர் துறப்பார்.

அமெரிக்காவின் பிரபலமான ஏல நிறுவனம் ஒன்று இந்த மரக்கதவை ஏலத்துக்கு கொண்டு வந்தது. இதை 5 கோடிக்கு ஒருவர் ஏலம் எடுத்துள்ளார். அதோடு, 1980-ல் வெளியான 'தி ஷைனிங்' படத்தில் இடம் பெற்ற ஜாக் நிக்கல்சன் பயன்படுத்திய கோடாரி, 1984-ல் வெளியான 'இண்டியானா ஜோன்ஸ் அண்ட் தி டெம்பிள் ஆப் டூம்' படத்தில் பயன்படுத்தப்பட்ட சாட்டை உள்ளிட்ட பொருட்களும் ஏலத்தில் விடப்பட்டன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.