பிளாஷ்பேக்: நம்பியாருக்கு பொருத்தமான ஜோடியாக வலம் வந்த டி.கே.சரஸ்வதி

தில்லானா மோகனாம்பாளின் அம்மா வடிவாம்பாளை யாராலும் மறக்க முடியாது. வெடி பேச்சும், தெனாவெட்டு உடல் மொழியும், அவ்வளவு எளிதில் மறக்ககூடியதுமல்ல. அந்த காலத்திலேயே வில்லி வேடங்களில் கொடி கட்டிப் பறந்தவர்.

1945ல் வெளியான 'என் மகன்' படத்தில் அறிமுகமாகி 1998 வரை 1948ம் ஆண்டு வரை தொடர்ந்து நடித்தார். எம்.என்.நம்பியாருடன் பல படங்களில் ஜோடியாக நடித்துள்ளார். இருவரும் 'மேட் பார் ஈச் அதர்' ஜோடியாக அப்போது திகழ்ந்தார்கள். ஆனால் இருவரும் வில்லத்தனமான ஜோடிகள்.
ராஜகுமாரி, மாங்கல்ய பாக்கியம்,சோப்பு சீப்பு கண்ணாடி , பொன்முடி, திகம்பர சாமியார், எங்க மாமா, தூக்கு தூக்கி, தாய், மகேஸ்வரி, வண்ணக்கிளி, பூலோக ரம்பை, கண்ணே பாப்பா, மங்கள வாத்தியம்,, உழைக்கும் கரங்கள், வாணி ராணி, சிங்காரி,லட்சுமி கல்யாணம், தில்லானா மோகனாம்பாள், பார்த்தால் பசிதீரும், நானும் ஒரு பெண், மன்னிப்பு, இரு கோடுகள், இதோ எந்தன் தெய்வம், கல்யாண ஊர்வலம், தாயே உனக்காக, சௌபாக்கியவதி, படித்தால் மட்டும் போதுமா, உரிமைக்குரல் உள்ளிட்டவை அவர் நடித்த முக்கியமான படங்கள்.

1998ம் ஆண்டு வெளியான 'பொன்மானைத் தேடி' படம்தான் அவர் கடைசியாக நடித்தது. அந்த ஆண்டிலேயே காலமானார். தனது இறுதி காலத்தில் வறுமையில் வாடியதாக சொல்வார்கள். இன்று அவரது 27வது நினைவு தினம்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.