டி20 உலக கோப்பையில் சஞ்சு சாம்சன் இல்லை! பந்த், கேஎல் ராகுலை தேர்வு செய்ய முடிவு!

ஐசிசி  2024 டி20 உலகக் கோப்பை ஜூன் மாதம் தொடங்க உள்ளது. இதற்கான இந்திய அணியில் இடம் பெற பலரும் முயற்சி செய்து வருகின்றனர். மே முதல் வாரத்தில் அணியை அறிவிக்க வேண்டும் என்பதால் தேர்வு குழு தீவிர பேச்சு வார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.  பிசிசிஐ தலைமை தேர்வாளர் அஜித் அகர்கர், கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் முக்கிய பிசிசிஐ உறுப்பினர்கள் டெல்லியில் சந்தித்து பேச முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.  மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கும் இடையிலான ஐபிஎல் ஆட்டத்தின் போது இந்த சந்திப்பு நடைபெற உள்ளது.  அருண் ஜெட்லி மைதானத்தில் இரு அணிகளுக்கும் இடையே போட்டி நடைபெறுகிறது. 

முன்பு இந்த ஆண்டு ஐபிஎல்லில் சிறப்பாக செயல்படும் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்க பிசிசிஐ முடிவு செய்து இருந்தது.  இந்நிலையில், இந்திய அணி தேர்வு செய்யப்பட உள்ள 15 பேரில் ஒரு சில இடங்கள் ஏற்கனவே நிரப்பப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள இடங்களுக்கு அதிக போட்டி நிலவி வருகிறது.  குறிப்பாக மிடில் ஆர்டர் மற்றும் விக்கெட் கீப்பிங் இடங்களுக்கு அதிக போட்டி நிலவி வருகிறது.  ஐபிஎல் 2024 சீசன் தொடங்குவதற்கு முன்னதாக இந்த இடங்களுக்கு ரிஷப் பந்த், சஞ்சு சாம்சன், கேஎல் ராகுல், இஷான் கிஷன், ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜூரல் ஆகிய ஆறு வீரர்கள் போட்டியில் இருந்தனர்.  தற்போது இந்த பந்தயத்தில் இருந்து ஜிதேஷ் சர்மா மற்றும் துருவ் ஜூரல் வெளியேறி உள்ளனர்.

இந்த ஆண்டு ஐபிஎல் 2024 சீசனில் 41 போட்டிகளுக்குப் பிறகு, டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் கேப்டன் பந்த் 161.32 ஸ்ட்ரைக் ரேட்டில், 9 போட்டிகளில் 342 ரன்களுடன், மூன்று அரை சதங்கள் அடித்துள்ளார். மேலும் அதிக ரன் குவித்த பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சாம்சன், 8 ஆட்டங்களில் 3 அரைசதங்கள் மற்றும் 314 ரன்களுடன் 152.42 ஸ்ட்ரைக் ரேட்டில் இரண்டாவது இடத்தில் உள்ளார். லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் கேப்டன் கேஎல் ராகுல், 7 ஆட்டங்களில் 140 ஸ்டிரைக் ரேட்டில் 287 ரன்களுடன் மூன்றாவது இடத்திலும், இஷான் கிஷன் 8 போட்டிகளில் 192 ரன்களுடனும் 4வது இடத்திலும் உள்ளனர். இந்த பட்டியலில் தற்போது தினேஷ் கார்த்திக்கும் இணைந்துள்ளார்.

சமீபத்தில் சிறப்பாக விளையாடி வரும் பந்த் கீப்பர்-பேட்டராகவும், ஃபினிஷராகவும், மிடில் ஆர்டரில் விளையாட முடியும் என்பதாலும் அணியில் தனது இடத்தை உறுதி செய்துள்ளார் என்றே கூறப்படுகிறது.  மற்றொரு விக்கெட் கீப்பராக சஞ்சு சாம்சன் இடம் பெறுவார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ஸ்ட்ரைக்ரேட் காரணமாக ராகுல் இடம் பெறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஐபிஎல் 2024ல் ராகுல் மிடில் ஆர்டர் பேட்டராக விளையாடாவிட்டாலும், இந்திய அணியில் கீப்பர்-பேட்டராக இடம் பெறலாம். சமீபத்தில் சஞ்சு சாம்சனுக்கு மேற்கிந்தியத் தீவுகள் சுற்றுப்பயணத்தில் ஒரு வாய்ப்பு வழங்கப்பட்டது, அங்கு அவர் 41 பந்துகளில் 51 ரன்கள் மட்டுமே எடுத்தார். மேலும் தென்னாப்பிரிக்காவிற்கு எதிரான ODI தொடரில் ஒரு அசத்தலான சர்வதேச சதம் அடித்து இருந்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.