Exclusive: "இது மாதிரி ரஜினியைப் பார்த்திருக்க மாட்டோம்!" – நம்பிக்கை விருது விழாவில் லோகேஷ் கனகராஜ்

2023-ம் வருடத்துக்கான ஆனந்த விகடன் நம்பிக்கை விருதுகள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் தற்போது நடந்துவருகிறது. இந்த விழாவில் சினிமா ஸ்டன்ட் இயக்குநர்களான அன்பறிவ் சகோதரர்களுக்கு டாப் 10 இளைஞர்களுக்கான விருது வழங்கப்பட்டது. இந்த விருதை வழங்க வந்திருந்தார் இயக்குநர் லோகேஷ் கனகராஜ். மேடையேறிய லோகேஷ், சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த்தின் 171-வது படம் குறித்த அப்டேட்டைப் பகிர்ந்தார். நிகழ்வில் அவர் பேசியதாவது…

Thalaivar 171

“‘இனிமேல்’ பாடல் பண்ணது குருபக்திக்காக! ‘தலைவர் 171’ படத்தின் டைட்டில் டீசர் ஏப்ரல் 22 வெளியாகும். இது மாதிரி ரஜினியை இதற்கு முன்பு பார்த்திருக்க மாட்டோம். அதற்கான முயற்சிகளைத்தான் செய்து வருகிறோம். இது 100 சதவிகிதம் லோகேஷ் படம்தான்!” என்றார்.

ஃபர்ஸ்ட் லுக்கில் கை கடிகாரங்கள் நிறைய இடம்பெற்றதை வைத்து, “டைம் மெஷின் வச்சு இந்தக் கதையை எழுதியிருக்கீங்களா?” என்று கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்குப் பதிலளித்தவர், “எல்லாரும் ஒண்ணு சொல்றாங்க… நாங்க வேற ஒண்ணு எழுதி வெச்சிருக்கோம்” என்றார்.

மேடையில் பேசிய அன்பறிவ் சகோதரர்கள், “நாங்க இந்த நிமிஷம் வரைக்கும் நம்புறது எங்க தொழிலை மட்டும்தான். சினிமா மட்டும்தான் எங்க உலகமாக இருந்துச்சு. இந்த மாதிரியான ஒரு மேடையில எங்களை அடையாளப்படுத்துறது சந்தோஷம். கமல் சார்கூட நாங்க பண்ற படம், லோகேஷ் ரஜினி சார்கூட பண்ற படம் லைவ்வாக இருக்கும். ஒரே டைம்ல ரெண்டு சூப்பர் ஸ்டார்கூட படம் பண்றது பெருசு. எங்களுக்கு இப்போ சிறந்த அவுட்புட் கொடுக்கணும்னுங்கறதுதான் இலக்கா இருக்கு.”

நம்பிக்கை விருது விழாவில் லோகேஷ் கனகராஜ், அன்பறிவ் சகோதரர்கள்

அன்பறிவ் சகோதரர்கள் குறித்துப் பேசிய லோகேஷ் கனகராஜ், “நான் என்னுடைய முதல் படம் பண்ணும்போது இவங்க தமிழ்ல அறிமுகமானாங்க. நான் என்னுடைய ஆரம்பக்கட்டத்துல அன்பறிவ் அண்ணனோட ஆபிஸ்லதான் உட்கார்ந்து கதை எழுதினேன்” என்று நினைவுகூர்ந்தார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.