விலை கம்மியா இருக்கும் எலக்டிரிக் கார்! மைலேஜ் எவ்வளவு கொடுக்கும் தெரியுமா?

டாடா மோட்டார்ஸுக்கு அடுத்தபடியாக எம்ஜி மோட்டார் தான் நாட்டில் அதிக மின்சார கார்களை விற்பனை செய்யும் நிலையில், MG மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் மிகவும் மலிவு விலையிலான மின்சார் கார் ஒன்றை கொண்டு வந்திருக்கிறது. அந்த எலக்டிரிக் காரின் பெயர் MG காமெட் ஆகும். சந்தையில் Tata Tiago EV உடன் Comet போட்டியிடுகிறது. Tiago EVக்கான விலைகள் ரூ.7.99 லட்சத்தில் தொடங்கி, டாப் வேரியண்டிற்கு ரூ.11.89 லட்சம் (எக்ஸ்-ஷோரூம் டெல்லி) வரை செல்லும். காமெட் அறிமுகப்படுத்தப்படுவதற்கு முன்பு, அந்த கார் தான் மலிவான மின்சார காராக இருந்தது.

தற்போது, ​​காமெட்டின் ஆரம்ப விலை Tiago EVயை விட ரூ.1 லட்சம் குறைவாக உள்ளது. காமெட் EV இன் விலையை பொறுத்தவரையில் ரூ.6.99 லட்சத்தில் தொடங்கி டாப் வேரியண்டிற்கு ரூ.9.14 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) வரை செல்கிறது. சில காலத்திற்கு முன்பு வரை இது எக்ஸிகியூட்டிவ், எக்சைட் மற்றும் எக்ஸ்க்ளூசிவ் ஆகிய மூன்று வகைகளில் மட்டுமே கிடைத்தது. ஆனால் இப்போது இவை தவிர, இரண்டு புதிய வகைகளும் உள்ளன – எக்ஸைட் எஃப்சி மற்றும் எக்ஸ்க்ளூசிவ் எஃப்சி. இவை 7.4kW AC ஃபாஸ்ட் சார்ஜிங்கை ஆதரிக்கின்றன.

விலை (எக்ஸ்-ஷோரூம், டெல்லி)

* எக்ஸிகியூட்டிவ் வேரியன்ட்- ரூ 6.99 லட்சம்
* எக்ஸைட் மாடல்- ரூ 7.88 லட்சம்
* எக்ஸைட் எஃப்சி வேரியண்ட் – ரூ 8.24 லட்சம்
* எக்ஸ்க்ளூசிவ்மாடல் – ரூ 8.78 லட்சம்
* எக்ஸ்க்ளூசிவ் எஃப்சி வேரியண்ட் – ரூ 9.14 லட்சம்

பேட்டரி மற்றும் மோட்டார்

இது 17.3 kWh பேட்டரி பேக்குடன் வருகிறது. இது ஒரே ஒரு பேட்டரி விருப்பத்துடன் கிடைக்கிறது. அதன் அனுமதிக்கப்பட்ட லிமிட்230 கிலோ மீட்டர்கள் (முழு சார்ஜில்). இருப்பினும், 170-180 வரை செல்கிறது. இதில் பொருத்தப்பட்டுள்ள மின்சார மோட்டார் 42PS பவரையும், 110Nm டார்க்கையும் உருவாக்குகிறது. இது 3.3 kW சார்ஜர் மற்றும் 7.4kW AC ஃபாஸ்ட் சார்ஜர் ஆதரவைக் கொண்டுள்ளது (மாறுபாட்டைப் பொறுத்து).

காமெட் காரின் அம்சங்கள்

MG Comet என்பது GSEV (Global Smart Electric Vehicle) தளத்தை அடிப்படையாகக் கொண்ட 4 இருக்கைகள் கொண்ட சிறிய கார் ஆகும். இந்த இரண்டு கதவு ஹேட்ச்பேக் பல நல்ல அம்சங்களைக் கொண்டுள்ளது. இதில் ஹெட்லேம்ப்கள் மற்றும் டெயில்லேம்ப்கள் எல்லாம் எல்இடி விளக்குகளாக கொடுக்கப்பட்டுள்ளது. வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு, ஒருங்கிணைந்த டூயல் ஸ்கிரீன் அமைப்பு (10.25-இன்ச் இன்ஃபோடெயின்மென்ட் மற்றும் 10.25-இன்ச் இன்ஸ்ட்ரூமென்ட் கிளஸ்டர்), 55க்கும் மேற்பட்ட இணைக்கப்பட்ட கார் அம்சங்கள், கீலெஸ் என்ட்ரி, டூயல் ஏர்பேக்குகள், ஏபிஎஸ் EBD, பின்புற பார்க்கிங் சென்சார் மற்றும் ரிவர்ஸ் பார்க்கிங் கேமரா போன்ற அம்சங்கள் உள்ளன.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.