இந்த வாரமும் இத்தனை படங்களா? எது ஓடும்…?

2024ம் ஆண்டின் மூன்று மாதங்கள் முடிந்துவிட்டது. முக்கியப் படங்கள் எதுவும் இல்லாமல் கடந்த மாதமும் கடந்துவிட்டது. ஏப்ரல் மாதத்திலாவது தமிழ் சினிமாவுக்கு ஏற்றம் தரக் கூடிய படங்கள் ஏதாவது வராதா என பலரும் காத்திருக்கிறார்கள்.

இருப்பினும் இந்த மாதத்தின் முதல் வாரத்திலேயே ஏழு படங்கள் வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. வரும் வியாழனன்று ஏப்ரல் 4ம் தேதி ஜிவி பிரகாஷ்குமார் கதாநாயகனாக நடித்துள்ள 'கள்வன்' படம் வருகிறது. அதற்கடுத்த தினமான வெள்ளியன்று ஏப்ரல் 5ம் தேதி “டபுள் டக்கர், இரவின் கண்கள், கற்பு பூமியில், ஒரு தவறு செய்தால், வல்லவன் வகுத்ததடா, ஒயிட் ரோஸ்” ஆகிய படங்கள் வெளியாக உள்ளன.

கடந்த வாரம் மார்ச் 29ம் தேதி கூட ஏழு படங்கள் வெளியாகின. அவற்றில் எந்த ஒரு படத்திற்கும் ஒரு காட்சி கூட ஹவுஸ்புல் ஆகவில்லை. சில படங்களின் காட்சிகள் ரத்து செய்யப்பட்ட தகவலும் வந்துள்ளது.

ஐபிஎல், தேர்தல், தேர்வு ஆகியவற்றுடன் சேர்த்து இப்போது வெயிலும் அதிகரிக்க ஆரம்பித்துவிட்டது. அந்த இன்னல் காரணமாகவும் மக்கள் பகலில் கூட அதிகம் வெளிவருவதைத் தவிர்க்க ஆரம்பித்துவிட்டார்கள். இத்தனை சிக்கல்களுக்கு மத்தியலும் வாரம் இத்தனை படங்கள் வெளியாகிறது. இவற்றில் எது ஓடும் என்பது கூட மாபெரும் கேள்வியாகவே தொடர்கிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.