சிஎஸ்கேவின் சூப்பர் ஹீரோ, அவரு போடும் ஸ்கெட்ச் மிஸ் ஆகாது! கேமரா முன்னால் அதிகம் வரமாட்டார்

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 15 ஆண்டுகளாக கொடி கட்டி பறக்கும் ஒரு அணியாக இருப்பதற்கு அந்த அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ஒரு காரணம். அவர் ஐபிஎல் தொடங்கிய 2008 ஆம் ஆண்டு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடினார். ஆனால், அடுத்த ஆண்டே அனைத்து விதமான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற ஸ்டீபன் பிளெமிங், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளராகவும் பொறுப்பேற்றார். 2009 ஆம் ஆண்டு முதல் இப்போது வரை சிஎஸ்கே அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் தான். இவருடைய பயிற்சின் கீழ் தான் சென்னூ சூப்பர் கிங்ஸ் அணி முதன்முறையாக 2010 ஆம் ஆண்டு ஐபிஎல் சாம்பியன் கோப்பையை வென்றது.

அதே ஆண்டில் நடைபெற்ற சாம்பியன்ஸ் லீக் தொடருக்கும் தகுதி பெற்ற சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அந்த கோப்பையையும் வெற்றி வாகை சூடியது. அப்போது முதல் இப்போது வரை சிஎஸ்கே அணி ஐபிஎல் தொடரில் ஒரு சாம்பியன் அணியாகவே திகழ்ந்து வருகிறது. கேப்டன்சியில் எம்எஸ் தோனி தல என்றால், ஐபிஎல் தொடரில் சிறந்த பயிற்சியாளர்களில் தல ஸ்டீபன் பிளெமிங் என தாராளமாக சொல்லலாம். ஏனென்னறால் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே மூன்று வெவ்வேறு நாடுகளில் சாம்பியன் பட்டத்தை வென்ற ஒரே அணி.

அப்படி என்றால் அதற்காக ஒரு பயிற்சியாளர் எவ்வளவு உழைத்திருக்க வேண்டும். வீரர்களை தேர்வு செய்வது முதல் அணிக்குள் சரியான பிளேயர் காம்பினேஷனை உருவாக்குவது வரை பயிற்சியாளர், கேப்டன் பொறுப்பு. அதனை ஸ்டீபன் பிளெமிங் – எம்எஸ் தோனி கூட்டணி சரியாகவே செய்திருக்கிறது. இவர்கள் இருவரும் காட்டிய வழியில் தான் இப்போது ருதுராஜ் கெய்வாடும் சிஎஸ்கே கேப்டனாக ஜொலிக்க தொடங்கியிருக்கிறார். அவரை கேப்டனாக்க கடந்த ஆண்டே முடிவு செய்த ஸ்டீபன் பிளெமிங் மற்றும் தோனி இது குறித்து அவரிடமும் தெரிவித்துள்ளனர். கேப்டனாக இக்கட்டான சூழலில் என்ன மாதிரியான முடிவுகளை எடுக்க வேண்டும் என கடந்த ஆண்டு முதலே ஒவ்வொரு போட்டிக்குப் பிறகும் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் ருதுராஜிடம் பேசியிருக்கிறார். 

அதனால் தான் சிஎஸ்கே என மிகப்பெரிய ஐபிஎல் அணியின் கேப்டன் பொறுப்பை ஏற்று இந்த ஆண்டு ருதுராஜ் சிறப்பாக செயல்படுகிறார். இதற்கு பின்னணியில் இருப்பவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சியாளர் ஸ்டீபன் பிளெமிங் என்பதை தாராளமாக சொல்லலாம். ருதுராஜ் கெய்க்வாடும் பேட்டி ஒன்றில் தன்னை கேப்டனாக எப்படி செயல்பட வேண்டும் என பிளெமிங் வழிநடத்தியது குறித்தும் தெரிவித்திருக்கிறார். அந்தளவுக்கு சிஎஸ்கேவின் சூப்பர் ஹீரோவாக திரைமறைவில் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பிளெமிங் இதுவரை அந்த அணிக்காக ஸ்கெட்ச் போட்டதில் பெரிதாக எதுவும் மிஸ் ஆனதே இல்லை. அந்த நம்பிக்கையில் தான் ஐபிஎல் 2024 தொடரிலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி களமிறங்கியிருக்கிறது.

இதில் கவனிக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் சென்னை அணி வெற்றி பெறும் போதெல்லாம் ஸ்டார் பிளேயர்களை பத்திரிக்கையாளர் சந்திப்புக்கு அனுப்புவதும், தோற்கும்போதெல்லாம் தானே பத்திரிக்கையாளர் சந்திப்பில் இருப்பதையும் வழக்கமாக வைத்திருக்கிறார் பிளெமிங். இதனால் தான் அவரை சிஎஸ்கேவின் சூப்பர் ஹீரோ என அழைக்கிறார்கள்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.