பெண்களின் பாதுகாப்பிற்கு Uber கொண்டு வந்திருக்கும் புதிய பாதுகாப்பு அம்சம்! தெரிந்து கொள்ளுங்கள்

உலக முழுவதும் பிரபலமான கால்டாக்சி நிறுவனமான ஊபர் மில்லியன் கணக்கான மக்களால் தினசரி சவாரிக்கு பயன்படுத்தப்படுகிறது. வாகனே இல்லாத இடத்தில் இருக்கும் மக்களுக்கு கூட கால்டாக்சி சேவையை கொடுக்கும் நிறுவனம் தான் இது. ஊபர் அப்ளிகேஷனின் உதவியுடன் நீங்களே சவாரி செய்ய முன்பதிவு செய்யலாம். செயலி மூலம் சவாரிக்கு முன்பதிவு செய்த பிறகு, ஊபர் நிறுவனத்தால் நியமிக்கப்பட்ட டிரைவர் வாடிக்கையாளரை அவர் சேருமிடத்திற்கு அழைத்துச் செல்வார். வாடிக்கையாளர் பாதுகாப்பை மனதில் கொண்டு, ஊபர் நிறுவனம் அவர்களுக்கு பல வசதிகளை வழங்குகிறது. உலகம் முழுவதும் உள்ள பயணிகளுக்கான பாதுகாப்பு அம்சங்களை மேம்படுத்தி வருவதாக உபெர் டெக்னாலஜிஸ் தெரிவித்துள்ளது. குறிப்பாக இரவில் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் புதிய அம்சங்களைச் சேர்த்து வருகிறது. இவற்றைப் பற்றி விரிவாக பார்க்கலாம்.

ஊபர் பாதுகாப்பு புதிய அம்சங்கள்

புதிய வசதிகளின் கீழ், பயணிகள் தங்கள் பயணத்தின் போது நான்கு வகையான பாதுகாப்பு விருப்பங்களைத் தேர்வுசெய்ய முடியும். Encrypted audio recording, ஓட்டுநரின் பேக்கிரவுண்ட் வெரிபிகேஷன் மற்றும்  location sharing ஆகியவை இதில் அடங்கும். Uber கடந்த சில வருடங்களாக பல குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டுள்ளது. பல வாடிக்கையாளர்கள் உபெர் டிரைவர்களால் துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்துள்ளனர். இந்த புகார்களில் முதன்மையானது ஓட்டுனர்களின் பேக்கிரவுண்ட் வெரிபிகேஷன் செய்யாதது முதல் அவர்களுக்கு lack of safety training வரையிலான பிரச்சினைகள் எழுப்பப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பல பெண்களும் உபெர் நிறுவனத்திற்கு எதிராக வழக்குப் பதிவு செய்துள்ளனர். தங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய Uber போதுமான நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று அவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 2019 மற்றும் 2020 ஆம் ஆண்டுகளில், அமெரிக்காவில் கடுமையான பாலியல் துன்புறுத்தல் தொடர்பாக சுமார் 3800 புகார்கள் வந்துள்ளதாக Uber கூறியுள்ளது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக இப்படியான புகார்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது.

பாதுகாப்பு வசதிகள் பயன்படுத்துவது எப்படி?

பயணிகள் மட்டுமின்றி உணவு விநியோகம் செய்யும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்களின் பாதுகாப்பிலும் நிறுவனம் கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு, லண்டனில் உள்ள Uber Eats சாலை விபத்துகளைத் தடுக்கும் விதிமுறைகளில் கையெழுத்திட்டது. தற்போது இந்த புதிய பாதுகாப்பு அம்சங்கள் அமெரிக்கா, கனடா மற்றும் லத்தீன் அமெரிக்காவில் கிடைக்கின்றன. வரும் வாரங்களில் மேலும் பல நாடுகளில் இது செயல்படுத்தப்படும் என்று Uber கூறுகிறது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.