IndiGo இலங்கையுடனான தொடர்பை வலுப்படுத்துகிறது – இன்று முதல் மும்பை-கொழும்பு நேரடி விமான சேவை

IndiGo ஏப்ரல் 12 முதல் மும்பை-கொழும்பு நேரடி விமானங்களை ஆரம்பிப்பதன் மூலம் இலங்கைக்கான தனது இணைப்பை விரிவுபடுத்தியுள்ளது.

அதன்படி, IndiGo வாரத்தில் மூன்று முறை செவ்வாய், வியாழன் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் விமான சேவைகளை ஆரம்பித்துள்ளது.

IndiGo கொழும்பில் இருந்து இந்தியாவின் மூன்று இடங்களுக்கு பயணிக்கிறது (சென்னை ஒரு நாளைக்கு இரண்டு முறை, பெங்களூர் ஒரு நாள் மற்றும் ஹைதராபாத் வாரத்தில் ஆறு நாட்கள்).

இந்த புதிய பாதை விஸ்தரிப்பின் மூலம், இது நான்கு இடங்களுக்கு பயணங்களை மேற்கொள்ள உள்ளது. இதனூடாக, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான பயணம், வர்த்தகம் மற்றும் சுற்றுலா வளர்ச்சிக்கு பெரும் பங்களிப்பை வழங்கும்.

இந்த புதிய இணைப்புடன் IndiGo இந்தியாவின் நான்கு முக்கிய நகரங்களில் இருந்து கொழும்புக்கு வாராந்தம் 30 விமானப் பயணங்களை மேற்கொள்ள உள்ளது.

மேலும், யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே விமான நடவடிக்கைகளை ஆரம்பிப்பது குறித்து IndiGo வுடன் வெற்றிகரமாக பேச்சுவார்த்தை ஒன்றை அண்மையில் நடத்தியுள்ளதாக விமான நிலையங்கள் மற்றும் விமான சேவைகள் (AASL) தனியார் நிறுவனத்தின் தலைவர் அதுல கல்கெட்டிய கூறினார்.

அதன்படி, 2024 ஜூன் 1 முதல் IndiGo யாழ்ப்பாணத்திற்கும் சென்னைக்கும் இடையே நேரடி விமானச் சேவையைத் ஆரம்பிக்க உள்ளதாகவும், அதனைத் தொடர்ந்து நாளாந்த விமான சேவைகள்  மேற்கொள்ளப்படும் என்றும், இது வட மாகாணத்தில் சுற்றுலா மற்றும் வர்த்தகத்தை மேம்படுத்துவதோடு, இரு நாடுகளுக்கிடையிலான கலாச்சார மற்றும் மத உறவுகளை வலுப்படுத்தும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.