நீதிமன்றத்தில் கூட எனது பிரைவசிக்கு பாதுகாப்பு இல்லை ; பாவனா விரக்தி

தமிழில் சித்திரம் பேசுதடி மூலமாக அறிமுகமாகி தீபாவளி, அசல் உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகை பாவனா. மலையாள திரை உலகில் முன்னணி நடிகையாக வலம் வந்த இவருக்கு கடந்த ஆறு வருடங்களுக்கு முன்னால் படப்பிடிப்பு முடிந்து திரும்பும் போது எதிர்பாராத பலாத்கார நிகழ்வை சந்திக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து நீதிமன்றத்தில் கடந்த ஏழு வருடங்களுக்கு மேலாக இந்த வழக்கு நடைபெற்று வருகிறது. இந்த வழக்கு சில நேரங்களில் திசை மாறி போவது குறித்தும் சில நேரங்களில் மந்தமாக நடப்பது குறித்தும் அவ்வப்போது தனது கருத்துக்களை வெளியிட்டு வந்தார் பாவனா.

இந்த நிலையில் இவருக்கு நடந்த பலாத்கார நிகழ்வு அப்போதைய சமயத்தில் இந்த வழக்கு சம்பந்தமான குற்றவாளிகளால் கேமராவில் படமும் பிடிக்கப்பட்டது. அந்த காட்சிகள் அடங்கிய மெமரி கார்டு நீதிமன்றம் வசம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. அதே சமயம் சமீபத்தில் உயர்நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணை குறித்த ஒரு காப்பியை பாவனாவுக்கு வழங்க செசன்ஸ் கோர்ட்டுக்கு உத்தரவிட்டிருந்தது. ஆனால் அப்படி கிடைத்த அந்த அறிக்கை பாவனாவை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

இதுபற்றி அவர் சமீபத்தில் தன்னுடைய சோசியல் மீடியா பதிவில் கூறும்போது, “ஒவ்வொரு குடிமகனுக்கும் அவர்களது பிரைவசியை பாதுகாக்க அடிப்படை உரிமை உள்ளது. ஆனால் இந்த வழக்கின் முக்கிய ஆதாரமாக கருதப்படும் இந்த காட்சிகள் பலமுறை திருத்தம் செய்யப்பட்டுள்ளதை பார்க்கும்போது அந்த உரிமையை மறுப்பது போன்று இருக்கிறது. அதுமட்டுமல்ல நீதிமன்றத்தில் கூட என்னுடைய பிரைவசிக்கு தற்போது பாதுகாப்பு இல்லை என்பது என்னை அச்சுறுத்துவதாக இருக்கிறது.

அப்படி ஒரு தவறு நீதிமன்றத்தின் பக்கத்தில் இருந்த நிகழும்போது பாதிக்கப்பட்டவர்கள் தங்களது பலத்தை இழந்து விடுவார்கள். அதே சமயம் குற்றவாளிகள் பெருமையுடன் தலை நிமிர்ந்து நம்மை சுற்றி நடந்து வருவார்கள் என்பது இன்னும் வருத்தத்தை தருவதாக இருக்கும். ஆனாலும் எனக்கான நீதியை பெறும் வரை நான் தொடர்ந்து போராடுவேன்” என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.