சாவியே இல்லாத ஹை-டெக் ஸ்கூட்டர்… எக்கச்சக்க மைலேஜ் கிடைக்கும் – யமஹாவின் புதிய ஸ்கூட்டர்

Yamaha Aerox S Scooter: நகரமயமாதல் சூழலில் நீண்ட தூரம் பயணிக்கும் போக்கு அதிகரித்துவிட்டது எனலாம். புறநகர் பகுதிகளில் இருந்து நகருக்குள் படிப்புக்காக, பணிக்காக என பல காரணங்களாக மக்கள் தினமும் வந்து செல்கின்றனர். அந்த வகையில், மெட்ரோ, மின்சார ரயில், பேருந்து ஆகிய பொது போக்குவரத்து முக்கியத்துவம் பெறுகிறது. 

இருப்பினும், சிலருக்கு பொது போக்குவரத்து ஏதவாக இருக்காது. பணிக்குச் செல்பவர்கள் எப்போதும் தங்களுக்கு ஏற்ற நேரத்தில் பயணிக்க விரும்புவார்கள் என்பதால் பைக், கார் போன்றவற்றையே அவர்கள் அதிகம் நம்பியிருக்கின்றனர். இதில் மிடில் கிளாஸ் மக்கள் பைக்கைதான் அதிகம் வாங்குவார்கள். 

இரு பாலருக்குமானது…

இன்றைய சூழலில் ஆண், பெண் என இருபாலரும் கார், பைக் போன்றவற்றை இயக்குகின்றனர். இதில் பெண்கள் அமருவதற்கு ஏதுவான அமைப்பு இல்லா காரணங்களுக்காக பைக்குகள் புறக்கணிக்கப்படும். அந்த நேரத்தில்தான் ஸ்கூட்டி அமோகமாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. ஸ்கூட்டியை வீட்டில் ஆண், பெண் என இருபாலருக்கும் ஏதுவான ஒன்று ஸ்கூட்டியாகும்.

இந்தியாவில் ஸ்கூட்டி சந்தை தற்போது அசுர வளர்ச்சி பெற்றுள்ளது. பைக்குக்கு இணையாக மக்கள் ஸ்கூட்டியை வாங்குவதை விரும்புகின்றனர் என கூறப்படுகிறது. ஹோண்டா, யமஹா, டிவிஎஸ் போன்ற நிறுவனங்கள் அதிகளவில் ஸ்கூட்டியை தயாரித்து வருகின்றன.

யமஹாவின் புதிய மாடல்

இந்நிலையில், யமஹா நிறுவனம் சமீபத்தில் Aerox S என்ற புதிய ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியது. இந்த ஸ்கூட்டர் சாவி இல்லாமல் இயக்கக்கூடிய அம்சத்தை கொண்டுள்ளதே சந்தையில் இதனை தனித்து மாடலாக காட்டுகிறது. பெண்கள், ஆண்கள் என இரண்டு பேரும் இயக்கக்கூடிய ஸ்கூட்டரில் யமஹாவின் இந்த மாடல் குறித்து இங்கு முழுமையாக காணலாம்.

யமஹா Aerox S என்ற இந்த ஸ்கூட்டரின் தனித்துவமே சாவில்லாமல் இயங்கக்கூடிய அமைப்புதான். இந்த தொழில்நுட்பம் எப்போதுமே விலை உயர்ந்த வாகனங்களில்தான் இருக்கும். ஆனால், யமஹா இந்த தொழில்நுட்பத்தை ஸ்கூட்டருக்கு கொண்டு வந்துள்ளது பலருக்கும் ஆச்சர்யத்தை அளித்துள்ளது.

சாவிக்கு பதில்…

கையில் கீ-ஃபோப்பை இயக்கி உங்கள் வண்டி அருகில் எங்கிருந்தாலும் கண்டுபிடித்து விடலாம். அதாவது, கார்களில் கொடுக்கப்படும் ரிமோட்டை அழுத்தினால், காரில் சத்தம் மற்றும் ஒலி எழும் அல்லவா அதேபோல்தான். வழக்கமான சாவி போன்ற அமைப்புக்கு பதில் Knob போன்ற அமைப்பு கொடுக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், வண்டியை ஆன் செய்வது, அணைப்பது, பெட்ரோல் டேங்கை திறப்பது அனைத்தையும் வெவ்வேறு பக்கம் திருப்புவதன் மூலம் செய்யலாம்.

Aerox S: விலை என்ன தெரியுமா?

யமஹா Aerox S இரண்டு வேரியண்டில் வருகிறது. ஒன்று, Standard வெர்ஷன் மற்றொன்று Premium வெர்ஷன். Premium மற்றொரு வெர்ஷனை விட ரூ.3000 கூடுதலாகும். இது சிலவர் மற்றும் ப்ளூ நிறத்தில் கிடைக்கிறது. விலை சற்று அதிகம் என்றாலும் Aerox S ஸ்கூட்டர், சந்தையில் உள்ள மற்றொரு ஸ்கூட்டரை விட அதிகளவு நுட்பமும், நவீனமும் கொண்டதாகும். யமஹாவில் தற்போது நிலையில் விலை உயர்ந்த ஸ்கூட்டர் இதுதான். இதன் ஆரம்ப விலை ரூ.1,50,600 ஆகும். 

Aerox S: மைலேஜ்

யமஹாவின் Aerox S சாவியில்லா அமைப்பை தவிர மற்ர அனைத்து அம்சங்களும் Aerox ஸ்கூட்டரை அடிப்படையாக வைத்தே உருவாக்கப்பட்டது. Aerox பைக்கின் அதே லெவல் பெர்மான்மன்ஸ் மற்றும் யமஹாவின் ஈஸியான அணுகுமுறை ஆகியை இதிலும் இருக்கும். மைலேஜ் பரிசோதனையில் நகரத்திற்குள் ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு 50.3 கிலோமீட்டராகவும், நெடுஞ்சாலைகளில் 57.2 கிலோமீட்டராகவும் இருந்துள்ளது. இதன் மூலம், இந்த பைக்கின் வலிமையான எஞ்சினையும், அதன் அதிக மைலேஜையும் புரிந்துகொள்ளலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.