CWC: `வார இறுதியில் கொஞ்சம் ரிலாக்ஸ்!' – புகைப்படக் காதலர்களின் மீட் அப் சொல்வதென்ன?

காலை 9- மாலை 5 என்ற கடிகாரச் சக்கர வேலை, மன அழுத்தம், குடும்பப் பிரச்னைகள் என ஒரு மேட்ரிக்ஸில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் பலர். இதற்கிடையில், வேலைப்பளுவைத் தூக்கி எறிவதற்காகவும், புகைப்படக் கலையின் மீது கொண்ட ஆர்வத்தினாலும் கேமராவைக் கையிலெடுத்தனர் சிலர்.

நண்பர்களாக சேர்ந்து ஓரிடத்திற்குச் சென்று தங்களது கலை ஆர்வத்தை வளர்த்து, அதை மற்றவர்களுக்கும் கற்றுக் கொடுக்கும் ஒரு கம்யூனிட்டியாக வளர்ந்துள்ளனர் ‘சென்னை வீக்கெண்ட் க்ளிக்ர்ஸ்’

இந்த சென்னை வீக்கெண்ட் க்ளிக்ர்ஸ் 2009 ஆண்டில் நிக்கி ஜாக்சன், தனுஷ், அசோக் சரவணன் ஆகிய மூவரால் ஃபிலிக்கர் கம்யூனிட்டி மூலம் ஒன்றிணைந்த புகைப்பட ஆர்வலர்கள் அனைவரையும் வைத்து நண்பர்களால் தொடங்கப்பட்டது. ஐடி துறையில் பணிபுரிபவர்கள், மாணவர்கள் என 1800க்கும் மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. 900 ற்கும் மேற்பட்ட போட்டோ வாக் (Photowalk) மற்றும் தொடர்ந்து 10 ஆண்டுகளாக புகைப்பட கண்காட்சியும் வெற்றிகரமாக நடத்தி வருகின்றனர். இந்த போட்டோ வாக் மூலம் சென்னையின் பல்வேறு பகுதிகள் மற்றும் தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளுக்குச் சென்று அங்குள்ள மனிதர்கள், தெருக்கள், ஊரின் குறுக்கு வெட்டுத் தோற்றம் என புகைப்படங்கள் எடுக்கின்றனர்.

சென்னை வீக்கெண்ட் க்ளிக்ர்ஸ்

இந்த வருடம் சென்னை வீக்கெண்ட் க்ளிக்ர்ஸ் தங்களது பத்தாவது புகைப்பட கண்காட்சி லலித் கலா அகாடமியில் 14 -21 ஏப்ரல் வரை நடைபெற்றது.

கண்காட்சியில் ஒளிப்பதிவாளர் ரவிவர்மன், வைட் ஆங்கிள் ரவி, மார்ட்டின் டான் ராஜ், யுவ கார்த்திக், இயக்குனர் காயத்ரி புஷ்கர், எழுத்தாளர் பவா செல்லதுரை, பத்திரிக்கையாளர் ஜெயராணி, எழுத்தாளர் தமிழ் பிரபா ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஏப்ரல் 14ஆம் தேதி நடைபெற்ற கண்காட்சி திறப்பு விழாவில் ஒளிப்பதிவாளர் திரு. ரவிவர்மன் சிறப்ப விருந்தினராக பங்கேற்று கண்காட்சியைத் திறந்து வைத்தார்.

தொடக்க விழாவில் பேசிய அவர், “தொழில்நுட்பம் வளர, வளர புகைப்பட கலை அபாரமாக வளர்ந்து கொண்டு போகிறது. இதைப் பார்ப்பதற்கு ஆச்சரியமாக இருக்கிறது. புகைப்படம் என்பது ஒரு கலை. அது பல உணர்ச்சிகளை வெளிப்படுத்தும். புகைப்படத்தை எடுக்கும் போது நாம் ஒரு கண்ணோட்டத்தில் எடுத்திருப்போம், அதைப் பார்ப்பவர்கள் ஒரு விதத்தில் புரிந்து கொள்வார்கள். இப்படி பலரின் உணர்ச்சிகளை வெளிப்படுத்துவது தான் புகைப்படம். ஒளிப்பதிவை விட புகைப்படம் எடுப்பது தான் எனக்கு மிகவும் பிடிக்கும். ஏனென்றால் ஒளிப்பதிவு என்பது ஒரு டீம் ஒர்க். நான் ஒரு திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்து இருக்கிறேன் என்றால், அது முழுமையாக எனது படம் என்று சொல்லிக் கொள்ள முடியாது. ஆனால் புகைப்படம் என்றால் அது முழுமையாக எனது படைப்பு. புகைப்படத்தில் தான் தனித்துவத்தைப் பார்க்க முடியும். அது மட்டுமல்லாமல் ஒரு அழகான தருணத்தை காட்சிப்படுத்தக்கூடிய சக்தி புகைப்படத்திற்கு மட்டுமே இருக்கிறது.” என்றார். பல்வேறு புகைப்பட ஆர்வலர்கள் தங்களது புகைப்படங்களை இந்தக் கண்காட்சியில் காட்சிப்படுத்தியிருந்தனர்.

CWC யின் நிறுவனர்களில் ஒருவரான அசோக் சரவணனிடம் பேசியபோது, “இந்த கம்யூனிட்டிக்கு ஃபவுண்டர்ஸ்னு எல்லாம் எங்கள சொல்லிட முடியாது. இது ஒரு இன்ஃபார்மல் கம்யூனிட்டியா தான் ஆரம்பிச்சோம். இந்த நாளில் வரணும், இன்னைக்கு, இப்படி போட்டோ எடுக்கணும் அப்படின்னு இங்க யாருக்குமே எந்த ஸ்ட்ரெஸ்சுமே கிடையாது. புகைப்பட கலை மேல ஆர்வம் இருக்கிற யார் வேணும்னாலும் வரலாம். ஒரு வாரம் வந்தா இன்னொரு வாரம் கண்டிப்பா வரணும் அப்படின்ற மாதிரி கட்டாயம் எல்லாம் இங்க இல்ல. நான் இங்க வர கலைஞர்களுக்கு சொல்றது எல்லாமே, இந்த ஆர்வத்தை விட்டுடாதீங்க, எங்க எந்த வேலை செஞ்சிட்டு இருந்தாலும் போட்டோகிராபி மேல இருக்கிற இந்த பேஷனை விட்டுடாதீங்கன்னு தான். இங்கிருந்து நிறைய பேர் நல்ல இடத்துக்கு போய் இருக்காங்க. உதாரணத்துக்கு எங்க மெம்பர்ஸ் பிரசாந்த் சுவாமிநாதன், சசிகுமார் ராமச்சந்திரன் இரண்டு பேரும் 2015 மற்றும் 2016 ல் தேசிய புகைப்பட விருது வாங்கி இருக்காங்க” என்கிறார் பெருமிதத்தோடு.

“இது ஒரு ஜாலியான பிளாட்பார்ம். இங்க இந்த லொகேஷனுக்குப் போறோம், இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னு எதுவுமே ப்ரீ பிளான் பண்ணவே மாட்டோம். சனி, ஞாயிறு எங்க போட்டோ வாக் போறோம்னு வெள்ளிக்கிழமை நைட்டு தான் சொல்லுவாங்க. எந்த ஸ்ட்ரெஸும் இல்லாமல் வீக்எண்ட்ல நமக்கு புடிச்ச ஒரு விஷயத்தை நம்மள மாதிரியே சிந்தனையுடையவங்களோட சேர்ந்து செயல்படுறது ஒரு நல்ல அனுபவத்தைக் கொடுத்திருக்கு. இந்த அனுபவம் எங்களை ஒரு நல்ல மனிதனாக மாற்றி இருக்குன்னு தான் சொல்லணும்.

“CWC ஒரு ஜாலியான பிளாட்பார்ம். இங்க இந்த லொகேஷனுக்குப் போறோம், இப்படி பண்ணனும் அப்படி பண்ணனும்னு எதுவுமே ப்ரீ பிளான் பண்ணவே மாட்டோம். சனி, ஞாயிறு எங்க போட்டோ வாக் போகிறோம்னு வெள்ளிக்கிழமை நைட்டு தான் சொல்லுவாங்க. எந்த ஸ்ட்ரெஸும் இல்லாமல் வீக்எண்ட்ல நமக்கு புடிச்ச ஒரு விஷயத்தை நம்மள மாதிரியே சிந்தனையுடையவங்களோட சேர்ந்து செயல்படுறது ஒரு நல்ல அனுபவத்தை கொடுத்திருக்கு. இந்த அனுபவம் எங்களை ஒரு நல்ல மனிதனாக மாற்றி இருக்குன்னு தான் சொல்லணும். காலைல இருந்து ஈவினிங் வரைக்கும் வேலை வீடு குடும்பம்னு ஓடிக்கிட்டே இருக்குற எங்களுக்கு இது ஒரு தெரபி மாதிரி. இதுவரைக்கும் ஏராளமான போட்டோ வாக்ஸ் போயிருக்கோம். நிறைய புதுவிதமான அனுபவங்கள் கிடைச்சிருக்கு.

CWC ல ஒரு படிநிலை கிடையாது. எல்லாமே ஆர்வம் மற்றும் விருப்பத்தின் அடிப்படையில தான். இங்க எதையுமே ஸ்பூன் ஃபீட் பண்றது கிடையாது சீனியர் போட்டோகிராபர் நம்மளுக்கு ஏதாவது சந்தேகம் இருந்தா அதை தீர்த்து வைப்பாங்க. முழுக்க முழுக்க ப்ராக்டிஸ் பண்ணி பெட்டர் ஆகிறதுதான். எங்களுடைய முதல் போட்டோ வாக்குக்கும் போகப் போக இருந்த போட்டோ வாக்குக்கும் நாங்க எடுத்த புகைப்படத்தில் எங்களுக்கே வித்தியாசம் தெரிஞ்சது” என்கிறார்கள் CWC இன் மெம்பர்ஸ் வில்வேஷ் சுவாமிநாதன் மற்றும் ராம்குமார் அழகுமலை.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.