அமெரிக்க குடியுரிமை பெறுவதில் இந்தியர்களுக்கு 2-வது இடம்

புதுடெல்லி: அமெரிக்க மக்கள் தொகை கணக்கெடுப்பு அறிக்கையின்படி 65,960 இந்தியர்கள் முறையான அனுமதி பெற்று அமெரிக்க குடிமக்களாக மாறியுள்ளனர். அதன்படி மெச்சிகோவுக்கு அடுத்தபடியாக இந்தியர்கள் 2-வது இடத்தில் உள்ளனர்.

இதுகுறித்து மேலும் கூறப்பட்டுள்ளதாவது: கடந்த 2022-ம்ஆண்டு நிலவரப்படி வெளிநாடுகளைச் சேர்ந்த 4.6 கோடி பேர்அமெரிக்காவில் வசித்து வருகின்றனர். இது, அமெரிக்காவின் மொத்த மக்கள் தொகையான 33.33 கோடியில் 14 சதவீதம் ஆகும்.மொத்த வெளிநாட்டவர்களில் 53 சதவீதம் அதாவது 2.45 கோடி பேருக்கு அமெரிக்காவில் குடியுரிமை கிடைத்துள்ளது.

அமெரிக்க குடியுரிமை பெற்றதில் மெக்சிகோ நாட்டவர் (1,28,878 பேர்) முதலிடத்தில் உள்ளனர். அடுத்தபடியாக இந்தியர்கள் (65,960 பேர்) உள்ளனர். இதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸ் (53,413), கியூபா (46,913), டோமினிக் குடியரசு (34,525), வியட்நாம் (33,246), சீனா (27,038) ஆகிய நாடுகள் உள்ளன.அமெரிக்க குடியுரிமை பெற்றதில் இந்தியா இரண்டாவது இடத்தில் இருந்தபோதிலும், இன்னும் 42 சதவீத இந்திய வம்சாவளியினர் அமெரிக்க குடியுரிமை பெற தகுதியற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

2023-ம் ஆண்டு நிலவரத்தின்படி அமெரிக்காவில் பிறந்தவர்கள் வெளிநாடுகளில் வசிப்பதில்மெக்சிகோ முதலிடத்தில் உள்ளது.மெக்சிகோவில் அமெரிக்காவைச் சேர்ந்த 1,06,38,429 பேர் வசிக்கின்றனர். இதற்கு அடுத்தபடியாகஇந்தியாவில் 28,31,330 அமெரிக்கர்கள் உள்ளனர். மூன்றாவது இடம்பிடித்துள்ள சீனாவில் 22,25,447அமெரிக்கர்கள் வசிக்கின்றனர்.

2023 நிதியாண்டு இறுதி நிலவரப்படி அமெரிக்க குடியு ரிமை கோரி நிலுவையில் உள்ள விண்ணப்பங்களின் எண்ணிக்கை 4,08,000-ஆக இருந்தது. இருப்பினும் இது 2022 நிதியாண்டின் எண்ணிக்கையான 5,50,000 மற்றும் 2021 நிதியாண்டின் 8,40,000 மற்றும் 2020 நிதியாண்டின் 9,43,000 நிலுவை விண்ணப்பங்களுடன் ஒப்பிடுகையில் குறைவாகும்.சட்டப்பூர்வ நிரந்தர குடியுரிமை கோரியதில் வியட்நாம், பிலிப் பைன்ஸ், ரஷ்யா, ஜமைக்கா, பாகிஸ்தானைச் சேர்ந்தவர்கள் அதிக அளவில் உள்ளனர்.

குடியுரிமைக்கு தகுதி பெற, விண்ணப்பதாரர்கள் குடிவரவு மற்றும் குடியுரிமைச் சட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள குறிப்பிட்ட தகுதி அளவுகோல்களை பூர்த்தி செய்ய வேண்டும் என்பது குறிப் பிடத்தக்கது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.