இன்னும் ஆர்சிபி அணி பிளே ஆப்க்கு தகுதி பெற வாய்ப்பு! எப்படி தெரியுமா?

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு ஐபிஎல் 2024ல் நேற்று குஜராத் டைட்டன்ஸ் அணியை தோற்கடித்ததன் மூலம் இந்த சீசனின் தங்களது நான்காவது வெற்றியை பதிவு செய்துள்ளது.  மேலும் பிளேஆஃப்களுக்கு செல்வதற்கான நம்பிக்கையை இன்னும் உயிரோடு வைத்துள்ளது. பெங்களூரு சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்ற 52வது போட்டியில் குஜராத்தை நான்கு விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடர்ந்து மூன்றாவது வெற்றியை பதிவு செய்துள்ளனர். 148 ரன்கள் என்ற இலக்கை 13.4 ஓவர்களில் அடித்து வெற்றி பெற்றுள்ளது. கேப்டன் டு பிளெஸ்ஸிஸ் 23 பந்துகளில் 10 பவுண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 64 ரன்கள் எடுத்தார், மறுபுறம் விராட் கோலி 27 பந்துகளில் 2 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்களுடன் 42 ரன்கள் அடித்து வெற்றிக்கு உதவினார். 

இதன் மூலம் இந்த சீசனில் அதிக ரன் குவித்தவர்கள் பட்டியலில் மீண்டும் முதல் இடத்தைப் பிடித்தார் விராட் கோலி. பஞ்சாப் அணிக்கு எதிரான போட்டியில் கேப்டன் சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கெய்க்வாட் ஆரஞ்சு தொப்பியை வைத்து இருந்தார். இந்நிலையில், கோலி 11 போட்டிகளில் 67.75 சராசரியில் 542 ரன்கள் எடுத்துள்ளார். புள்ளிப்பட்டியலில் தற்போது 7வது இடத்தில் இருந்தாலும், பிளேஆஃப் சுற்றுக்கு ஆர்சிபி தகுதி பெற இன்னும் வாய்ப்புள்ளது.  இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 8 புள்ளிகளுடன் ஏழாவது இடத்தில் இருக்கும் ஆர்சிபி, மீதமுள்ள அனைத்து போட்டிகளிலும் வெற்றி பெற்றால் அதிகபட்சமாக 14 புள்ளிகளைப் பெறலாம்.

நல்ல ரன் விகிதத்துடன் மீதமுள்ள அனைத்து போட்டிகளில் வெற்றி பெற்றாலும், ஆர்சிபி சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அல்லது லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் சில போட்டிகளில் தோல்வி அடைய வேண்டும். இரு அணிகளும் 10 ஆட்டங்களில் 12 புள்ளிகளை பெற்றுள்ளன. மறுபுறம், தலா 10 புள்ளிகளைப் பெற்றுள்ள சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல்ஸ் ஆகிய இரு அணிகளும் மீதமுள்ள 4 போட்டிகளில் இரண்டு போட்டிகளுக்கு மேல் வெற்றி பெறக்கூடாது. இதேபோல், பஞ்சாப் கிங்ஸ் 10 ஆட்டங்களில் எட்டு புள்ளிகளை பெற்றுள்ளது. அவர்களும் மூன்று ஆட்டங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடாது.

மேலே சொன்ன அனைத்தும் நடந்தால் மொத்தம் ஆறு அணிகள் 14 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும், பின்னர் நிகர ரன் விகிதம் அடிப்படையில் அணிகள் தகுதி பெரும். ஃபாஃப் டு பிளெசிஸ் தலைமையிலான ஆர்சிபி அணி 12 புள்ளிகளுடன் முதல் நான்கு இடங்களுக்குள் தகுதி பெற முடியும், ஆனால் மற்ற அணிகள் 12 புள்ளிகளுக்கு மேல் பெற கூடாது.  குறிப்பிடத்தக்க வகையில், ஆர்சிபி அவர்களின் IPL 2024 பிரச்சாரத்தை நடப்பு சாம்பியனான சென்னை அணிக்கு எதிரான தோல்வியுடன் தொடங்கியது, பின்னர் பஞ்சாப் அணிக்கு எதிராக வெற்றி பெற்றது. அதன் பிறகு தொடர்ந்து ஆறு போட்டிகளில் தோல்வியடைந்து, தற்போது கடைசி மூன்று போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.