நெக்சானை வீழ்த்துமா..? XUV 3XO எஸ்யூவி போட்டியாளர்களுடன் ஒப்பீடு

இந்தியாவின் நான்கு மீட்டருக்கும் குறைவான நீளமுள்ள எஸ்யூவிகளில் புதிதாக வந்துள்ள XUV 3XO மாடலுக்கு போட்டியாக டாடா நெக்சான் உட்பட மற்றும் மாடல்களின் சிறப்புகள் மற்றும் எந்த மாடலை தேர்ந்தெடுக்கலாம் என்பது குறித்தான விரிவான பார்வையை இப்பொழுது அறிந்து கொள்ளலாம்.

முன்பாக எக்ஸ்யூவி 300 என அறியப்பட்ட மாடல் தற்பொழுது பல்வேறு மாற்றங்களை பெற்று மஹிந்திரா நிறுவனம் XUV 3XO என்ற பெயரில் கூடுதல் வசதிகளுடன் இந்தியாவில் கிடைக்கின்ற முதன்மையான டாடா நெக்ஸான் உட்பட மற்ற போட்டியாளர்களான ஹூண்டாய் வெனியூ, கியா சொனெட், மாருதி பிரெஸ்ஸா, நிசான் மேக்னைட், மற்றும் ரெனோ கிகர் உட்பட கூடுதலாக கிராஸ்ஓவர் ரக மாருதி ஃபிரான்க்ஸ், டொயோட்டா டைசோர் என 8 மாடல்களுடன் சப் காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் சந்தையை பகிர்ந்து கொள்ளுகின்றது.

போட்டியாளர்களிடம் இல்லாத எக்ஸ்யூவி 3XO வசதிகள்

  • போட்டியாளர்களிடம் சிறிய சன்ரூஃப் உள்ள நிலையில் XUV3X0 மாடல் மிக அகலமான சன்ரூஃப் வசதியை பெறுகின்றது.
  • மற்ற மாடல்கள் 16 அங்குல வீல் பெற்றுள்ள நிலையில், இந்த பிரிவில் 17 அங்குல அலாய் வீல் பெறுகின்றது.
  • டூயல் ஜோன் கிளைமேட் கண்ட்ரோல்
  • போட்டியாள்களை விட அதிகப்படியான இடவசதியை பயணிகளுக்கு வழங்கும் நோக்கில் 2600 மிமீ வீல்பேஸ் உள்ளது. மற்ற மாடல்கள் 2498-2520மிமீ வரை மட்டுமே உள்ளன.
  • மற்ற மாடல்களில் இல்லாத மிக முக்கிய அம்சங்களில் ஒன்று இலகுவான மற்றும் அதிகம் சிரமமில்லாத ஸ்மார்ட் ஸ்டீயரிங் வசதி உள்ளது.
  • எலக்ட்ரானிக் பவர் பிரேக்குடன் ஆட்டோ ஹோல்ட் பெற்ற முதல் மாடலாக சப்-காம்பேக்ட் எஸ்யூவி பிரிவில் விளங்குகின்றது.
  • ஹூண்டாய் வெனியூ, சோனெட் மாடல்கள் லெவல் 1 ADAS பெற்றுள்ள நிலையில், லெவல் 2 ADAS பெற்று உயர்தரமான பாதுகாப்பினை XUV 3XO மூலம் மஹிந்திரா வழங்குகின்றது.
  • Level 2 ADAS மூலம் பிளைன்ட் ஸ்பாட் மானிட்டர், மோதலை தடுக்கும் வசதி, லேன் அசிஸ்ட், அடாப்டிவ் க்ரூஸ் கன்ட்ரோல், லேன் கீப் அசிஸ்ட், ஆட்டோமேட்டிக் எமர்ஜென்சி பிரேக்கிங் (மிதிவண்டி, பாதசாரிகள், மற்றும் வாகனங்கள்), ஹை பீம் அசிஸ்ட் மற்றும் போக்குவரத்து குறியீடுகளை அறிந்து செயல்படும் அம்சம், மற்றும் ஸ்மார்ட் பைலட் வசதியும் உள்ளது.
  • பாதுகாப்பு சார்ந்த அம்ச்களில் 6 ஏர்பேக்குகள், அனைத்து சக்கரங்களும் டிஸ்க் பிரேக் ஆனது அனைத்து வேரியண்டிலும் உள்ளது.
  • அதிகப்படியான பூட்ஸ்பேஸ் வழங்குவதில் ரெனோ கிகர் (405 litre) உள்ள நிலையில் இரண்டாமிடத்தில் 364 லிட்டர் கொள்ளளவை பெற்றுள்ளது.

xuv 3xo side view

XUV3XO என்ஜினுக்கு எதிராக போட்டியாளர்கள்

போட்டியாளர்களில் அதிகபட்ச பவரை வெளிப்படுத்தும் மாடலாக மஹிந்திரா எக்ஸ்யூவி 3XOவில் உள்ள 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் என்ஜின் 111 hp மற்றும் 131 hp என இருவிதமாக பவரை வெளிப்படுத்துகின்றது. இதில் டார்க் 200NM மற்றும் 230 NM வெளிப்படுத்துகின்றது. பொதுவாக 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் டார்க் கன்வெர்ட்டர் பெற்றுள்ளது.

நெக்ஸான் டர்போ பெட்ரோல் 1.2 லிட்டர் என்ஜின் 120 hp, 170 Nm வெளிப்படுத்துவதுடன் 5 வேக மேனுவல், 6 வேக மேனுவல், 6 வேக ஏஎம்டி மற்றும் 7 வேக DCT என நான்கு கியர்பாக்ஸ் ஆப்ஷனை பெறுகின்றது.

ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா சொனெட் என இரண்டும் 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் பெற்று முறையே 83 hp ,114NM மற்றும் 120 HP, 172 NM டார்க் வெளிப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல், 6 வேக ஐஎம்டி மற்றும் 7 வேக டிசிடி உள்ளது.

மாருதி பிரெஸ்ஸா மாடல் 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜினை கொண்டு 103hp , 137 Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 5 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் உள்ளது. கூடுதலாக சிஎன்ஜி வசதியும் உள்ளது.

ரெனோ கிகர் மற்றும் நிசான் மேக்னைட் என இரண்டு குறைந்த விலை மாடல்களும் 72hp , 96Nm 1.0 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100hp , 160 Nm 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் என இரண்டு என்ஜினை பெற்று மேனுவல் மற்றும் சிவிடி கியர்பாக்ஸ் பெறுகின்றது.

மாருதி ஃபிரான்க்ஸ், டைசோர் என இரண்டிலும் 90hp , 113 Nm 1.2 லிட்டர் பெட்ரோல் மற்றும் 100hp , 148 Nm 1.0 லிட்டர் டர்போ பெற்று 5 வேக மேனுவல், 6 வேக மேனுவல், ஏஎம்டி மற்றும் ஆட்டோமேட்டிக் ஆப்ஷனை பெற்று கூடுதலாக சிஎன்ஜி பயன்முறையிலும் கிடைக்கின்றது.

nexon suv front

டீசல் என்ஜின் ஒப்பீடு

அதிகப்படியான டார்க் வெளிப்படுத்துகின்ற மஹிந்திரா XUV3XO காரில் உள்ள 1.5 லிட்டர் டீசல் என்ஜின் 117 hp பவர் மற்றும் 300Nm டார்க் வெளிப்படுத்துகின்றது. இதில் 6 வேக மேனுவல் மற்றும் 6 வேக ஏஎம்டி உள்ளது.

பிரசத்தி பெற்ற டாடா நெக்சானில் 115hp , 260 Nm டார்க் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வெளிப்படுகின்றது. இதில் 6 வேக மேனுவல் மட்டும் உள்ளது.

ஹூண்டாய் வெனியூ மற்றும் கியா சொனெட் என இரண்டும் 116hp , 250 Nm டார்க் 1.5 லிட்டர் டீசல் என்ஜின் வெளிப்படுகின்றது. இதில் 5 வேக மேனுவல், 6 வேக ஐஎம்டி மற்றும் 6 வேக ஆட்டோமேட்டிக் உள்ளது. ஆட்டோமேட்டிக் மற்றும் ஐஎம்டி ஆப்ஷனை சோனெட் மட்டும் பெறுகின்றது.

Mahindra XUV3XO vs போட்டியாளர்கள் ஆன்ரோடு விலை ஒப்பீடு

கொடுக்கப்பட்டுள்ள விலை ஒப்பீடு தமிழ்நாட்டின் ஆன்ரோடு விலையை அடிப்படையாக கொண்டதாக அமைந்துள்ளது.

  • மஹிந்திரா XUV3XO – ₹ 9.02 லட்சம் – ₹ 19.41 லட்சம் வரை
  • டாடா நெக்ஸான் – ₹ 9.78 லட்சம் – ₹ 19.74 லட்சம் வரை
  • மாருதி பிரெஸ்ஸா – ₹ 9.89 லட்சம் – ₹ 17.46 லட்சம் வரை
  • ஹூண்டாய் வெனியூ – ₹ 9.58 லட்சம் – ₹ 16.83 லட்சம் வரை
  • கியா சொனெட் – ₹ 9.60 லட்சம் – ₹ 19.73 லட்சம் வரை
  • ரெனால்ட் கிகர் – ₹ 7.22 லட்சம் – ₹ 13.98 லட்சம் வரை
  • நிசான் மேக்னைட் – ₹ 7.26 லட்சம் – ₹ 13.87 லட்சம் வரை
  • மாருதி சுசூகி ஃபிரான்க்ஸ் – ₹ 8.95 லட்சம் – ₹ 16.02 லட்சம் வரை
  • டொயோட்டா டைசோர் – ₹ 9.31 லட்சம் – ₹ 16.22 லட்சம் வரை

டொயோட்டா டைசர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.