விவோ V30e ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் | விலை, சிறப்பு அம்சங்கள்

சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் விவோ V30e ஸ்மார்ட்போன் அறிமுகமாகி உள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.

சீன தேசத்தின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனமான விவோ, உலகம் முழுவதும் தனது பிராண்டின் கீழ் போன்களை உற்பத்தி செய்து, விற்பனை செய்யும் பணியையும் கவனித்து வருகிறது. அதனால் தனது வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் அந்நிறுவனம் புதிய மாடல் போன்களை சந்தையில் அறிமுகம் செய்வது வழக்கம்.

அந்த வகையில் தற்போது இந்தியாவில் விவோ V30e 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விவோ நிறுவனத்தின் ‘வி’ வரிசையில் இந்த போன் வெளிவந்துள்ளது. வி30 மற்றும் வி30 புரோ மாடல்களை தொடர்ந்து இந்த போன் சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

சிறப்பு அம்சங்கள்

  • 6.78 இன்ச் டிஸ்பிளே
  • குவால்காம் ஸ்னாப்டிராகன் 6 ஜெனரேஷன் 1 ப்ராசஸர்
  • ஆண்ட்ராய்டு 14 இயங்குதளம்
  • 3 ஆண்ட்ராய்டு ஜெனரேஷன் அப்டேட் மற்றும் 4 ஆண்டுகளுக்கு செக்யூரிட்டி அப்டேட்
  • 8ஜிபி ரேம்
  • 128ஜிபி/256ஜிபி ஸ்டோரேஜ்
  • 50 மெகாபிக்சல் சோனி IMX882 சென்சாரை கொண்டுள்ளது பின்பக்கத்தில் இடம்பெற்றுள்ள பிரதான கேமரா
  • இரண்டு வண்ணங்களில் இந்த போன் வெளிவந்துள்ளது
  • யுஎஸ்பி டைப்-சி போர்ட்
  • 5ஜி நெட்வொர்க்
  • 5,500mAh பேட்டரி
  • 44 வாட்ஸ் சார்ஜிங் சப்போர்ட்
  • இந்த போனுடன் சார்ஜர் வழங்கப்படுகிறது
  • இந்த போனின் ஆரம்ப விலை ரூ.27,999 என தெரிவிக்கப்பட்டுள்ளது

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.