தற்பொழுது வரை.., மாருதி சுசூகி ஸ்விஃப்ட் 2024 மாடல் பற்றி கசிந்த விபரங்கள்

இந்தியாவின் பிரசத்தி பெற்ற ஹேட்ச்பேக் ரக மாடலான ஸ்விஃப்ட் காரின் 2024 ஆம் ஆண்டிற்கான மேம்பட்ட நான்காம் தலைமுறையை விற்பனைக்கு மே 9 ஆம் தேதி மாருதி சுசூகி விற்பனைக்கு வெளியிட உள்ள நிலையில் முக்கிய தகவல்கள் அனைத்தும் இணையத்தில் கசிந்துள்ளது.

சர்வதேச அளவில் வெளியிடப்பட்ட ஸ்விஃப்டின் அடிப்படையில் விற்பனைக்கு கிடைக்கின்ற 1.2 லிட்டர் Z12E மூன்று சிலிண்டர் பெட்ரோல் என்ஜின் அதிகபட்சமாக 5,700 rpmல் 81.6 ps பவர் மற்றும் 4,300rpmல் 112Nm டார்க் வெளிப்படுத்தும். இதில் 5 வேக மேனுவல் மற்றும் 5 வேக ஏஎம்டி கியர்பாக்ஸ் இடம்பெற்றிருக்கும்.

2024 ஸ்விஃப்ட் பெட்ரோல் மேனுவல் மைலேஜ் லிட்டருக்கு 25.72 கிமீ வெளிப்படுத்தும் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

2024 மாடலில் LXi, VXi, VXi (O), ZXi, மற்றும் ZXi+ என 5 விதமான வேரியண்ட்டை பெற்று புதிதாக நீலம் மற்றும் ஆரஞ்ச் என இரு நிறங்களுடன் முந்தைய 7 நிறங்கள் என ஒட்டுமொத்தமாக 9 நிறங்களை பெற உள்ளது.

‘HEARTECT’ பிளாட்ஃபாரத்தில் பாதுகாப்பு சார்ந்த மேம்பாடுகளில் இந்திய BNCAP விதிமுறைகளுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ள மாடலில் அடிப்படையாக அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள், ஏபிஎஸ் உடன் இபிடி மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார் இடம்பெற்றிருக்கும்.

குறிப்பாக ஸ்விஃப்ட் டாப் வேரியண்டில்  9 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உட்பட கனெக்ட்டிவிட்டி சார்ந்த அம்சங்கள், வயர்லெஸ் ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் பிளே மற்றும் வயர்லெஸ் சார்ஜிங் பேட், ஹெட்அப் டிஸ்பிளே மூலம் வேகம் , டர்ன் பை டர்ன் நேவிகேஷன் பெற உள்ளது.

நடுத்தர VXi, VXi (O) வேரியண்டுகளில் 7 அங்குல இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் ஆனது இடம்பெற்றிருக்கும்.

தோற்ற அமைப்பில் மாறுபட்ட டிசைன் பெற்ற எல்இடி ரன்னிங் விளக்குடன் இணைந்த எல்இடி புராஜெக்டர் ஹெட்லைட் இடம்பெற்றுள்ளது.  கூடுதலாக பக்கவாட்டில் புதுப்பிக்கப்பட்ட அலாய் வீல் பெற்றுள்ளது.

தற்பொழுது ரூ.11,000 கட்டணமாக வசூலிக்கப்பட்டு முன்பதிவு நடைபெற்று வரும் நிலையில், 2024 மாடலும் புதிய மாருதி சுசூகி ஸ்விஃப்ட் விற்பனைக்கு ரூ.6.50 லட்சம் முதல் ரூ.11 லட்சத்துக்குள் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

swift new gen

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.