அதிக மைலேஜ் தரும் பஜாஜ் சிஎன்ஜி பைக்கின் ப்ளூ பிரிண்ட் விபரம்

பஜாஜ் ஆட்டோ தயாரித்து வருகின்ற சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் பற்றி சோதனை ஓட்ட படங்கள் வெளியாகி வந்த நிலையில் தற்போது ப்ளூ பிரிண்ட் வெளியாகி உள்ளது. இந்திய சந்தையில் மிகவும் எதிர்பார்க்கப்படுகின்ற சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் பெட்ரோல் செலவை பாதியாகக் குறைக்கும் என பஜாஜ் ஆட்டோ தலைவர் ராஜீவ் பஜாஜ் தொடர்ந்து தனது பேட்டிகளில் உறுதிப்படுத்தி வருகிறார்.

மிகவும் சுவாரசியமாக எதிர்பார்க்கப்படுகின்ற இந்த பைக்கை பொறுத்தவரை எவ்வாறு சிஎன்ஜி டேங்க் ஆனது பெட்ரோல் டேங்க்குடன் இணைக்க போகின்றது பஜாஜ் என்பதுதான் மிகவும் பெரிய கேள்வியாக இருந்தது அதற்கு உரித்தான வரைபட விளக்கமானது தற்பொழுது கிடைத்துள்ளது.

இதன் மூலம் எவ்வாறு அமைந்திருக்கிறது என்றால் சிஎன்ஜி டேங்க் ஆனது பெட்ரோல் டேங்கின் பின்புறத்திலும் இருக்கைக்கு அடியிலும் கொடுக்கப்பட்டிருக்கின்றது. மேலும், சிஎன்ஜி எரிபொருளை நிரப்ப வேண்டும் என்றால் நாம் ஸ்கூட்டர்களில் உள்ளதை போன்று இருக்கையை திறக்க வேண்டும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அவ்வாறு இருக்கையை திறக்கும் பொழுது அதனை அடிப்பகுதியில் சிஎன்ஜி எரிபொருள் நிரப்பும் வசதி கொடுக்கப்பட்டிருக்கலாம்.

என்ஜின் ஆனது சாய்வாக (ஹீரோ ஸ்பிளெண்டர் போல) பொருத்தப்பட்டு டபுள் கார்டிள் பிரேம் சேஸ் கொண்ட இந்த பைக்கை பொறுத்தவரை இருக்கைக்கு அடிப்பகுதியில் பெட்ரோல் டேங்கிற்கு பின்புறமாக கொடுக்கப்பட்டுள்ள சிஎன்ஜி டேங்க் ஆனது மிகவும் பாதுகாப்பான இடத்தில் வழங்கப்பட்டுள்ளதால் விபத்து காலங்களில் கூட எவ்விதமான அசம்பாவிதமும் ஏற்படாத வகையில் அமைந்திருக்கும். மேலும், சி.என்.ஜி எரிபொருளானது எல்பிஜி போல ஆபத்தானதாக அல்லாமல் மிகவும் இலகுவான வாய்வு  என்பதனால் பெரிதாக ஆபத்து இல்லாமல் இருக்கின்றது.

வரும் ஜூன் 18ஆம் தேதி இந்த புதிய சுவாரசியமான சிஎன்ஜி மோட்டார் சைக்கிள் ஆனது விற்பனைக்கு வெளியிட பஜாஜ் அறிவித்துள்ளது. இது மிக முக்கியமான ஒரு காரணம் இந்த பைக் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்க தற்பொழுது உள்ள பெட்ரோல் மாடல்களை விட எரிபொருள் திறன் 50 முதல் 60% இருக்கும் கூடுதலாக பெட்ரோல் செலவினை குறைக்கும் என குறிப்பிடப்படுகின்றது.

எனவே இது நடுத்தர மற்றும் முதல் முறை பைக் வாங்கும் பல்வேறு செயல்பாடுகளுக்கு ஏற்ற காம்யூட்டர் (Commuter) பைக் சமூகத்திற்கு மிகப்பெரிய ஒரு வரப்பிரசாதமாக இந்த மாடல் விளங்கலாம்.

துவக்கநிலை சந்தை பிரிவில் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைக்க மிகப்பெரிய மாற்றத்தை ஏற்படுத்த பஜாஜ் ஆட்டோ திட்டமிட்டு இருக்கின்றது. இது எவ்வாறு சந்தையில் வெல்லப் போகின்றது என்பதை  நாம் பொறுத்திருந்து அறிந்து கொள்ளலாம்.

image source

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.