மன்னார், பூநகரி 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலைய அபிவிருத்தி

மன்னார்  மற்றும்  பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்வதற்கு 03.07.2022 நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. 

உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி எனவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 
 
20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை A/S Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும் அமைச்சவை அனுமதியளித்துள்ளது. 
 
இது தொடர்பாக  நேற்று (06.05.2024) நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
 
04. மன்னார்  மற்றும்  பூநகரி பிரதேசத்தில் 484 மெகாவற்று காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை அபிவிருத்தி செய்தல்  
 
 
இந்தியாவின் A/S Adani Green Energy Limited  இனால் மன்னார் மற்றும் பூநகரி பிரதேசத்தில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையங்களை அபிவிருத்தி செய்வதற்கான  புரிந்துணர்வு ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்கு 2022.03.07 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  அதற்கமைய, குறித்த கம்பனியால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள கருத்திட்ட முன்மொழிவை மதிப்பீடு செய்வதற்காக அமைச்சரவையால் பேச்சுவார்த்தை உடன்பாட்டுக் குழு  நியமிக்கப்பட்டது.  குறித்த  குழுவின் விதந்துரைகளின் பிரகாரம் உத்தேசக் கருத்திட்டத்தின் கீழ் உற்பத்தி செய்யப்படும் மின்னலகொன்று கிலோவாற்று மணிக்கு 8.26 சதம் அமெரிக்க டொலர் பெறுமதி (உண்மையான வெளிநாட்டு செலாவணி சரிவிகிதத்திற்கமைய இலங்கை ரூபாயில் செலுத்துவதற்கு)  இறுதிக் கட்டணமாக அங்கீகரிப்பதற்கும், 20 வருடங்களுக்கு மின்சாரத்தைக் கொள்வனவு செய்வதற்கான விலை மனுக்கோரலை A/S Adani Green Energy SL Limited இற்கு வழங்குவதற்கும், மின்சக்தி மற்றும் வலுசக்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.