மருத்துவ கட்டளைச் சட்டத்தில் திருத்தம் 

சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவப் பட்டப்படிப்பை  இலங்கையில் அங்கீகரிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள்  உள்ளடங்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்கும், மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்கும் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது. 

 குறித்த விதந்துரைகளின் பிரகாரம் மருத்துவக் கட்டளை சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. 
 
இது தொடர்பாக 06.05.2024  நடைபெற்ற அமைச்சரவை கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானம் பின்வருமாறு: 
 
 
03. மருத்துவ கட்டளைச் சட்டத்தை திருத்தம் செய்தல்   
 
சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழகங்களிலுள்ள மருத்துவப் பட்டப்படிப்பை  இலங்கையில் அங்கீகரிப்பதற்காக மேற்கொள்ள வேண்டிய தரநியமங்கள் மற்றும் அளவுகோல்கள்  உள்ளடங்கிய தேசிய கொள்கையை தயாரிப்பதற்கும், சமகால தேவைகளுக்கு பொருத்தமான வகையில் மருத்துவக் கட்டளைச் சட்டத்தின் ஏற்பாடுகளைத் திருத்தம் செய்வதற்காக விதந்துரைகளை சமர்ப்பிப்பதற்கு அமைச்சின் செயலாளரின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள குழு சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளை நடைமுறைப்படுத்துவதற்காக 2023.10.09 அன்று இடம் பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. அதற்கமைய, குறித்த விதந்துரைகளின் பிரகாரம் மருத்துவக் கட்டளை சட்டத்தை திருத்தம் செய்வதற்காக சட்டவரைஞரால் தயாரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்திற்கு சட்டமா அதிபரின் ஒப்புதல் கிடைக்கப் பெற்றுள்ளது. குறித்த சட்டமூலத்தை அரச வர்த்தமானியில் வெளியிடுவதற்கும், பின்னர் பாராளுமன்ற அங்கீகாரத்துக்காக சமர்ப்பிப்பதற்கும் சுகாதார அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.