ஆலங்கட்டி மழையால் வெளியேறுகிறதா ஆர்சிபி…? ஐபிஎல் தொடரில் திடீர் ட்விஸ்ட்!

PBKS vs RCB IPL 2024: ஐபிஎல் தொடரின் 58வது லீக் சுற்று போட்டி தரம்சாலாவில் இன்று நடைபெறுகிறது. இப்போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் அணி, ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியுடன் மோதுகிறது. இந்த போட்டி இரு அணிகளும் மிக முக்கியமானதாகும். இதில் யார் தோல்வியடைந்தாலும் அவர்கள் தொடரில் இருந்து வெளியேறுவார்கள். 

போட்டியின் டாஸை வென்ற பஞ்சாப் கிங்ஸ் அணி கேப்டன் சாம் கரன் பந்துவீச்சை தேர்வு செய்தார். இதில் வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள், மேக்ஸ்வெல் ஆகியோருக்கு பதில் ஆர்சிபி அணி லோக்கி பெர்குசன், மஹிபால் லோம்ரோர் ஆகியோரை எடுத்துள்ளது. பந்துவீச்சின்போது வைஷாக் விஜயகுமார், யாஷ் தயாள் ஆகியோரில் ஒருவர் இம்பாக்ட் பிளேயராக களமிறங்கலாம். பஞ்சாப் கிங்ஸ் அணியில் ஹர்பிரீத் ப்ரர் மற்றும் ரபாடாவுக்கு பதில் லியம் விலிங்ஸ்டன், வித்வத் கவேரப்பா ஆகியோர் சேர்க்கப்பட்டனர். 

கவேரப்பா முதல் ஓவரிலேயே விராட் கோலியின் கேட்ச்சை அஷூடோஷ் சர்மா தவறவிட்டார். விராட் கோலி – டூ பிளெசிஸ் ஜோடி அதிரடியாகவே பேட்டிங்கை தொடங்கியது. எனினும், டூ பிளேசிஸ் 9(7), வில் ஜாக்ஸ் 12(7) ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். மேலும், விராட் கோலியின் மற்றொரு கேட்சை ரூசோவும், ரஜத் பட்டிதாரின் ஒரு கேட்சை ஹர்ஷல் பட்டேலும் தவறவிட்டனர். மொத்தமாக 10 ஓவர்களில் 5 கேட்ச்களை பஞ்சாப் தவறவிட்டது. பவர்பிளேவில் ஆர்சிபி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 56 ரன்களை அடித்தது. 

இதற்கு பின் அதிரடியாக விளையாடிய ரஜத் பட்டிதார் 21 பந்துகளிலேயே அரைசதம் அடித்து மிரட்டினார். அரைசதம் அடித்த 10வது ஓவரின் கடைசி பந்தில் பட்டிதார் ஆட்டமிழந்தார். அவர் 23 பந்துகளில் 6 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகள் உள்பட 55 ரன்களை சேர்த்திருந்தார். அவர் அவுட்டான உடனே தரம்சாலாவில் மழை பெய்ய தொடங்கியது. ஆட்டம் மழையால் நிறுத்தப்பட்டது. 10 ஓவர்களில் 3 விக்கெட்டுகள் இழப்பிற்கு 119 ரன்களை எடுத்திருந்தது. விராட் கோலி 23 பந்துகளில் 2 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் 42 ரன்களுடன் களத்தில் உள்ளார். 

Rain stops play in Dharamsala#RCB 119/3 at the halfway mark

Stay tuned for further updates

Scorecard https://t.co/49nk5rrUlp#TATAIPL | #PBKSvRCB pic.twitter.com/4bWfTbvf3D

— IndianPremierLeague (@IPL) May 9, 2024

8.22 மணிக்கு ஆட்டம் நிறுத்தப்பட்ட நிலையில், 8.55 மணிக்கு போட்டி தொடங்கியது. இருப்பினும் இடையே மைதானத்தில் ஆலங்கட்டி மழை பெய்தது. ஆடுகளத்தை தார்ப்பாயால் மறைத்தாலும் அவுட்பீல்டில் ஆலங்கட்டி மழை பெய்திருப்பது பந்துவீச்சுக்கு சாதமாக இருக்காது. அவுட்பீல் சற்று மந்தமாக இருக்கும் எனவும் கூறப்படுகிறது. இந்நிலையில், மழை பெய்தால் இரண்டாவது பேட்டிங் செய்யும் அணிக்கே சாதகம் என்பதால் ஆர்சிபி அணி பெரிய ஸ்கோரை அடிக்க வேண்டும். 

Hailstorm at dharamsala!!
If this match gets abandoned both teams will be officially out of the IPL 2024.#PBKSvsRCB pic.twitter.com/fwa3vULTif

— Giriraj Dhaker (@cricket24_) May 9, 2024

மழையோ, பனியும் தொடர்ந்து பெய்யும்பட்சத்தில் அது இரண்டாவது பந்துவீச்சும் ஆர்சிபி அணியை பாதிக்கலாம். போட்டி முழுமையாக தடைப்பட்டால் இரு அணிகளும் தலா 1 புள்ளிகள் வழங்கப்படும். அதன் மூலம் இரண்டு அணிகளுமே வெளியேறும் ஏற்படும். எனவே, ஆட்டம் மோசமான வானிலையால் தடைப்பட்டால் ஓவர்கள் குறைக்கப்படலாமே ஒழிய போட்டிகள் முழுமையாக தடைப்படாது எனலாம். தற்போது ஆட்டம் மீண்டும் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. பஞ்சாப் அணி பந்துவீச்சில் கவேரப்பா 4 ஓவர்களை தொடர்ந்து வீசி 36 ரன்களை கொடுத்து 2 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.