ஐபிஎல் 2024 ப்ளேஆஃப் வாய்ப்புகள்: பஞ்சாப், மும்பை அவுட்! ஆர்சிபி, சிஎஸ்கே, டெல்லி, லக்னோ யாருக்கு வாய்ப்பு

ஆர்சிபி, பஞ்சாப் அணிகளின் போட்டிக்குப் பிறகு ஐபிஎல் 2024 பாயிண்ட்ஸ் டேபிளில், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 11 போட்டிகளில் 16 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது. 16 புள்ளிகளுடன் இருக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் ரன்ரேட் அடிப்படையில் 2வது இடத்தில் இருக்கிறது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 14 புள்ளிகளுடன் 3வது இடத்தில் உள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ், டெல்லி கேப்பிட்டல்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் அனைத்தும் தற்போது 12 புள்ளிகளுடன் அடுத்தடுத்த இடங்களில் இருக்கின்றன. 

ஆர்சிபி அணி பாயிண்ட்ஸ் டேபிள்

தர்மசாலாவில் நடைபெற்ற பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு 60 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஆர்சிபி அணி பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் நீடிக்கிறது. அதேநேரத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணி ஐபிஎல் 2024 பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பில் இருந்து வெளியேறியது. ஏற்கனவே மும்பை இந்தியன்ஸ் அணி பிளே ஆஃப் வாய்ப்பை இழந்துவிட்ட நிலையில், 2வது அணியாக பஞ்சாப் இந்தப் பட்டியலில் இணைந்துள்ளது. தற்போது புள்ளிப் பட்டியலில் மும்பை இந்தியன்ஸ் 8வது இடத்திலும், பஞ்சாப் 9வது இடத்திலும் இருக்கின்றன. 

IPL 2024 RCB பிளேஆஃப் லேட்டஸ்ட் அப்டேட்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கான பிளேஆஃப் இடத்திற்கான வாய்ப்பு கொஞ்சம் கடினம் என்றாலும், இன்னும் வாய்ப்பு இருக்கிறது. RCB தனது கடைசி ஆட்டத்தில் பெற்ற வெற்றி மூலம் கம்பேக் கொடுத்திருக்கிறது. இப்போது 10 புள்ளிகளுடன் 7வது இடத்தில் உள்ளது. டெல்லி கேப்பிடல்ஸ் மற்றும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்கு எதிராக விளையாடும் இரண்டு போட்டிகளிலும் ஆர்சிபி வெற்றி பெற வேண்டும். அதேநேரத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் எஞ்சிய போட்டிகளில் தோற்க வேண்டும், லக்னோ மும்பைக்கு எதிரான போட்டியில் தோற்க வேண்டும். இதன் மூலம் ஆர்சிபி அணியின் பிளே ஆப் வாய்ப்பை உறுதி செய்யும்.

IPL 2024 KKR பிளேஆஃப் வாய்ப்பு

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் எல்.எஸ்.ஜி.க்கு எதிரான அபார வெற்றியைப் பெற்றது. இதன் மூலம் அந்த அட்டவணையில் முதலிடத்திற்கு சென்றது. இந்த வெற்றியின் அர்த்தம் KKR இப்போது 11 போட்டிகளில் 8 வெற்றிகளைப் பெற்று புள்ளிப்பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. அடுத்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் முதல் இரண்டு இடங்களை நெருங்கிவிடுவார்கள். இப்போதைக்கு, நைட் ரைடர்ஸ் பிளேஆஃப் சுற்றுக்கு மிக அருகில் உள்ளது.

IPL 2024 RR பிளே ஆஃப் வாய்ப்பு

ராஜஸ்தான் ராயல்ஸ் அணி (RR) 11 ஆட்டங்களில் இருந்து 16 புள்ளிகளுடன் ஐபிஎல் 2024 புள்ளிப் பட்டியலில் 2வது இடத்தில் இருக்கிறது. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியைப் போல் அடுத்த இரண்டு போட்டிகளில் வெற்றி பெற்றால் முதல் இரு இடங்களை உறுதி செய்யும். ஒரு வெற்றி பெற்றால் கூட பிளே ஆஃப் வாய்ப்பு உறுதி, ஆனால் முதல் இரண்டு இடமா? அல்லது அடுத்த இரண்டு இடமா? என்பது மட்டும் கேள்விக்குறியாக இருக்கும்.

IPL 2024 CSK பிளே ஆஃப் வாய்ப்பு

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 11 ஆட்டங்களில் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. அடுத்த மூன்று போட்டிகளில் ஒரு போட்டியில் வென்றால் கூட பிளே ஆஃப் சுற்றுக்கான வாய்ப்பை ஏறத்தாழ உறுதி செய்துவிடலாம். சிஎஸ்கேயின் அடுத்த மூன்று போட்டிகள் ஜிடி மற்றும் ஆர்சிபி மற்றும் ராஜஸ்தான் ராயல்ஸுடன் விளையாடுவார்கள். 

IPL 2024 LSG பிளே ஆஃப் வாய்ப்பு

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் 12 போட்டிகளில் 12 புள்ளிகள் பெற்றுள்ளது. எல்எஸ்ஜி அடுத்த இரண்டு போட்டிகளில் கட்டாயம் வெற்றி பெற வேண்டும். சிஎஸ்கே அல்லது சன்ரைசர்ஸ் அணிகள் தங்களுக்கான போட்டிகளில் தோல்வியடைய வேண்டும்.

IPL 2024 SRH பிளே ஆஃப் வாய்ப்பு

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 12 ஆட்டங்களில் 14 புள்ளிகளுடன் உள்ளது. எஞ்சியிருக்கும் இரண்டு போட்டிகளில் ஒன்றில் கட்டாயம் வென்றாக வேண்டிய நிலையில் அந்த அணி இருக்கிறது. ஒரு போட்டியில் வென்றால் பிளே ஆஃப் வாய்ப்பை அந்த அணி உறுதி செய்துவிடும்.

IPL 2024 GT பிளே ஆஃப் வாய்ப்பு

குஜராட் டைட்டன்ஸ் இப்போது புள்ளிப் பட்டியலில் 10வது இடத்தில் இருந்தாலும் அடுத்து விளையாட இருக்கும் மூன்று போட்டிகளிலும் கட்டாயம் வெல்ல வேண்டிய இடத்தில் உள்ளது. சிஎஸ்கே, டெல்லி கேப்பிட்டல்ஸ் அணிகளின் முடிவு குஜராத் அணிக்கு சாதகமாக இருக்க வேண்டும். 

IPL 2024 DC பிளே ஆஃப் வாய்ப்பு

12 போட்டிகளில் 12 புள்ளிகளுடன் டெல்லி கேபிடல்ஸ் இன்னும் பிளே ஆஃப் வாய்ப்பில் நீடிக்கிறது. அந்த அணிக்கு RCB மற்றும் LSG அணிகளுடன் இன்னும் இரண்டு போட்டிகள் மட்டுமே உள்ளன. அந்த இரண்டிலும் டெல்லி கட்டாயம் வெற்றி பெற வேண்டும். இந்த இரண்டு போட்டிகளிலும் வெற்றி பெற்றால் கூட ஹைதராபாத், எல்எஸ்ஜி உள்ளிட்ட அணிகளின் முடிவுகள் சாதகமாக இருக்க வேண்டும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.