பாவம் ஆர்சிபி… நாடு திரும்பும் 'ராசியான வீரர்' – இனி ராஜஸ்தான், கேகேஆர் அணிகளுக்கும் சிக்கல் தான்!

IPL 2024 Latest News Updates: நடப்பு ஐபிஎல் தொடரின் லீக் சுற்று போட்டிகள் அதன் இறுதிக்கட்டத்தை நெருங்கி வரும் இந்த முக்கிய கட்டத்தில், இங்கிலாந்து வீரர்கள் நாடு திரும்ப தொடங்கிவிட்டதால் முன்னணியில் இருக்கும் அணிகளுக்கு இப்போதே பிரச்னை தொடங்கிவிட்டது எனலாம்.  

இங்கிலாந்து அணி டி20 உலக்க கோப்பை தொடருக்கு முன் தங்கள் நாட்டில் பாகிஸ்தான் அணியுடன் 4 போட்டிகள் கொண்ட டி20 தொடரை விளையாட உள்ளனர். இதன் காரணமாகவே இங்கிலாந்து வீரர்கள் ஐபிஎல் தொடர் நிறைவு பெறும் முன்னரே புறப்படுகின்றனர். டி20 உலகக் கோப்பை ஜூன் 1ஆம் தேதி அன்றே அமெரிக்காவில் தொடங்க உள்ளது. 

இந்த 8 வீரர்கள்…

அந்த வகையில் டி20 உலகக் கோப்பைக்கான இங்கிலாந்து அணியில் இடம்பெற்றுள்ள ஜாஸ் பட்லர் (கேப்டன்), வில் ஜாக்ஸ், ஜானி பேர்ஸ்டோவ், லியம் லிவிங்ஸ்டன், மொயின் அலி, பில் சால்ட், சாம் கரன், ரீஸ் டோப்லி ஆகியோர் தற்போது பல்வேறு அணிகளுக்காக ஐபிஎல் அணிகளில் விளையாடி வருகின்றனர். இவர்களின் சிலர் இன்றும், பெரும்பாலனோர் இந்த வாரத்திற்குள்ளும் நாடு திரும்ப உள்ளனர். 

பட்லருக்கு பதில் யாரு?

ஏற்கெனவே, பஞ்சாப் கிங்ஸ் வீரர் லியம் லிவிங்ஸ்டன் தனது கால் முட்டி காயத்தை சீராக்க நாடு திரும்பிவிட்ட நிலையில், ராஜஸ்தான் அணியின் நட்சத்திர வீரர் ஜாஸ் பட்லரும் அணியினரிடம் இருந்து இன்று விடை பெற்றுக்கொணடார். ராஜஸ்தான் அணியில் பட்லருக்கு பதில் மற்றொரு இங்கிலாந்து வீரர் கோஹ்லர்-காட்மோருக்கு வாய்ப்பளிக்கப்படலாம். இவர் அதிரடி பேட்டராக அறியப்படுகிறார். 

பஞ்சாப் அணிக்கு பெரிய பிரச்னை

பஞ்சாப் அணியின் பேர்ஸ்டோவ், சாம் கரன் ஆகியோர் நாளை மறுநாள் நடைபெறும் ராஜஸ்தான் – பஞ்சாப் போட்டிக்கு பின் விடைபெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. சாம் கரன் அந்த அணியின் கேப்டனாகவும் செயல்பட்டு வந்தார். பிளே ஆப் சுற்றுக்கு அந்த அணி தகுதிபெறாத நிலையில் கடைசி போட்டியான பஞ்சாப் – ஹைதராபாத் போட்டியில் தவாண் காயம் சரியாகவில்லை எனில் ஜித்தேஷ் சர்மா கேப்டனாக செயல்படுவார் எனலாம்.

கேகேஆர் அணிக்கு என்ன பாதிப்பு?

கொல்கத்தா அணிக்கு இந்தாண்டு சிறப்பான சீசனாக அமைந்ததற்கு முக்கிய காரணம், சுனில் நரைன் – பில் சால்ட் ஆகியோரின் அதிரடி தொடக்கம்தான். அந்த வகையில் பில் சால்ட் இன்றைய போட்டிக்கு பின் புறப்பட்டுவிடுவார் என எதிர்பார்க்கலாம். அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதிபெற்றுவிட்டாலும், விக்கெட் கீப்பிங் பேட்டரான பில் சால்ட் காம்பினேஷனில் இல்லாதது அவர்களுக்கு பின்னடைவுதான். எனவே, பில் சால்டுக்கு பதில் மற்றொரு விக்கெட் கீப்பிங் பேட்டரான குர்பாஸ் அகமதுக்கு வாய்ப்பளிக்கப்படலாம். 

சென்னைக்கும் சிக்கல்தான்…

சென்னை அணியில் மொயின் அலியும் இந்த வாரத்திற்கு இங்கிலாந்து செல்வார் என்பதால் கடைசி லீக் போட்டியில் அவர் இருக்க மாட்டார். அவர் தற்போது சிறப்பான பார்மில் இருப்பதால் அவருக்கு பதில் அந்த இடத்தில் பேட்டிங்கில் ஒருவரை தேர்வு செய்வது சிஎஸ்கேவுக்கு கடினம்தான். 

ஆர்சிபியின் லக்கி சார்ம்

ஆர்சிபி வீரர்களான வில் ஜாக்ஸ் மற்றும் ரீஸ் டோப்ளி ஆகியோரும் பட்லருடன் இன்று நாடு திரும்ப இருப்பதாக கூறப்படுகிறது. டோப்ளி ஆர்சிபியின் காம்பினேஷனில் இல்லாவிட்டாலும் வில் ஜாக்ஸ் வந்தபின் அந்த அணி 5 போட்டிகளை தொடர்ச்சியாக வென்றிருக்கிறது. எனவே, டோப்ளி இல்லாததும் ஆர்சிபிக்கு பின்னடைவுதான். அவருக்கு பதில் மேக்ஸ்வெல் மீண்டும் உள்ளே வரலாம். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.