2024 ஆம் ஆண்டிற்கான பஜாஜ் பல்சர் 220F விலை மற்றும் வசதிகள்

பஜாஜ் ஆட்டோவின் செமி ஃபேரிங் செய்யப்பட்ட பிரபலமான மாடலான பல்சர் 220F பைக் டீலர்களுக்கு வர துவங்கியுள்ளதால் விரைவில் நாடு முழுவதும் டெலிவரி வழங்கப்பட உள்ளது.
சமீபத்தில் அனைத்து பஜாஜின் பல்சர் பைக்குகளிலும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் ஆனது கொடுக்கப்படுகின்றது.

அந்த வகையில் இந்த மாடலுக்கும் டிஜிட்டல் கிளஸ்ட்டர் கொடுக்கப்பட்டு கனெக்ட்டிவிட்டி சார்ந்து அம்சங்கள்,யூஎஸ்பி சார்ஜிங் போர்ட்  பெறுகின்றது. டன்-பை-டர்ன் நேவிகேஷன் மற்றும் கூடுதலாக ஸ்மார்ட்போன் சார்ந்த இணைப்புகளை ஏற்படுத்துகின்றது.

மற்றபடி இன்ஜின், மெக்கானிக்கல் சார்ந்த எந்த ஒரு மாற்றங்களும் ஏற்படுத்தப்படவில்லை. தொடர்ந்து 220cc சிங்கிள் சிலிண்டர் ஏர்-கூல்டு எஞ்சின் பயன்படுத்தப்படுகின்றது. இந்த என்ஜின் அதிகபட்சமாக 20.5 ps பவர் மற்றும் 18.55Nm டார்க் வெளிப்படுத்துகின்ற மாடலில் ஐந்து வேக கியர்பாக்ஸ் கொடுக்கப்பட்டிருக்கின்றது.

bajaj Pulsar 220f

முந்தைய பல்சரில் இருந்து மாறுபட்டதாக புதிய பாடி கிராபிக்ஸ் மற்றும் பெரிய எழுத்துருவில் 220F பேட்ஜ் ஆனது கொடுக்கப்பட்டிருக்கின்றது. இரு பக்க டயரிலும் டிஸ்க் பிரேக் வழங்கப்பட்டு டூயல் சேனல் ஏபிஎஸ் பெறுகின்ற மாடலில் முன்புறத்தில் டெலிஸ்கோபிக் ஃபோர்க் மற்றும் பின்புறத்தில் ட்வீன் ஷாக் அப்சார்பர் உள்ளது.

2024 பஜாஜ் பல்சர் 220F பைக்கின் விலை ரூ.1.41 லட்சத்தில் (எக்ஸ்ஷோரூம்) நிர்ணயம் செய்யப்படலாம்.

image source – youtube/ramaswami

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.