செகன்ட் ஹேண்டில் வாங்க டாப் 5 பைக்குள் லிஸ்ட் இதுதான்! காசு மிச்சம், செலவும் குறைவு

இப்போதைய சூழலில் பைக்குகள் கூட லட்சம் ரூபாய் செலவழித்தால் தான் வாங்க முடியும் என்ற சூழல் உருவாகிவிட்டது. அதனால், செகண்ட் ஹேண்ட் பைக்குகளை நோக்கி இளைஞர்கள் நகரத் தொடங்கிவிட்டனர். 20 ஆயிரம் முதல் 50 ஆயிரம் ரூபாய் விலையில் நல்ல தரமான பைக்கையே வாங்கிவிட முடியும். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட் இப்போது லைம் லைட்டில் இருக்கும் நிலையில், எந்தெந்த பைக்குகளை செகண்ட் ஹேண்டில் வாங்கலாம் என்பதை பார்க்கலாம். 

ஸ்பிளெண்டர் பிளஸ்: இந்தியாவில் பிரபலமான பைக்குகளில் ஒன்று ஸ்பிளெண்டர் பிளஸ். இந்த பைக்கை இயக்குவது சுலபமான விஷயம். அதேநேரம் இந்த பைக்கின் மைலேஜ் அதிகமாக இருக்கும். புதிதாக பைக் வாங்கி பயன்படுத்த நினைக்கும் பலர் கியர் பைக்கை ஓட்ட இந்த பைக்கை செகண்ட் ஹேண்டில் வாங்கி பயன்படுத்தலாம். செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் ரூபாய் 20 ஆயிரம் முதல் இந்த பைக்கை வாங்கிவிடலாம். 

ஹோண்டா சிபி யூனிகான் 150: புதிதாக பைக் வாங்க நினைக்கும் பலர் இந்த ஹோண்டா சிபி யூனிகான் பைக் வாங்க அதிகம் விரும்புகிறார்கள். இதில் செகன்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் இந்த பைக்கை வாங்கினால் அதிக மைலேஜ் கிடைக்கும். அதே நேரம் குறைவான பராமரிப்பு செலவு இருக்கும். நீண்ட தூரம் பயணம் செய்யும் தேவையை கொண்டவர்கள் இந்த பைக்கை தேர்வு செய்யலாம்.

பஜாஜ் பல்சர் 200 எஃப்: நல்ல பவர்ஃபுல்லான பைக்கை ஓட்ட வேண்டும் என விரும்புபவர்களுக்கு பல்சர் நல்ல சாய்ஸ். பல்சர் 220 எஃப் மார்க்கெட்டில் குறைந்த விலையில் கிடைக்கிறது. பைக்கின் தரம் மற்றும் மற்ற விஷயங்களை கவனித்து இந்த பைக்கை வாங்கலாம். பல்சர் 220 பைக்கின் சிறப்பு என்னவென்றால் சிசி டிடிஎஸ்ஐ இன்ஜின் நல்ல ரன்னிங்கை கொடுக்கும்.

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஆர் 160: ஸ்போர்ட்டியான லுக் கொண்ட பைக்குகளை வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கும் இளைஞர்களுக்கு இந்த பைக் ஒரு நல்ல ஆப்ஷனாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். இந்த பைக் தெருக்களில் ஓட்டுவதற்கும் சரி, நகர்ப்புற சாலைகளில் ஓட்டுவதற்கும் சரி, ஏன் தேசிய நெடுஞ்சாலைகள் ஓட்டுவதற்கும் நல்ல ரைட்டிங் அனுபவத்தை தரக்கூடிய பைக் தான்.

ராயல் என்ஃபீல்டு கிளாசிக் 350: பல இளைஞர்களின் கனவு இந்த ராயல் என்ஃபீல்டு பைக்கை வாங்க வேண்டும் என்பதுதான் . ராயல் என்ஃபீல்டு பைக்கின் புதிய பைக் அதிக விலை இருப்பதால் இதை வாங்க தடுமாறி வருகிறார்கள். ஆனால் இந்த பைக்கை செகண்ட் ஹேண்ட் மார்க்கெட்டில் ரூ90ஆயிரம் முதல் ரூ1.5லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வருகிறது. இந்த பைக் நன்றாக பைக் ஓட்ட தெரிந்த பிறகு வாங்கக்கூடிய பைக்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.