ஐபிஎல் மெகா ஏலம் 2025… 'இந்த' வீரர்களுக்கு தான் அதிக மவுசு இருக்கும் – ஏன் தெரியுமா?

IPL Latest Updates: இந்தியன் பிரீமியர் லீக் (Indian Premier League) எனப்படும் ஐபிஎல் தொடரின் 17ஆவது சீசன் (IPL 2024) இன்றுடன் நிறைவடைகிறது. இன்று நடைபெறும் இறுதிப்போட்டியில் (IPL Final 2024) கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – சன்ரைசர்ஸ் ஹைதராபாத் (KKR vs SRH) அணிகள் மோதுகின்றன. புள்ளிப்பட்டியலில் முதலிரண்டு இடங்களை பிடித்த இந்த அணிகள்தான் இறுதிப்போட்டியிலும் கோப்பைக்காக சமர் செய்ய உள்ளன. 

நடப்பு ஐபிஎல் தொடரில் லீக் சுற்றில் மட்டும் 70 போட்டிகள் நடைபெற்றன. 10 அணிகளும் தலா 14 லீக் போட்டிகளை விளையாடின. இதில் மற்ற அணிகளை விட கொல்கத்தா மற்றும் ஹைதராபாத் அணிகள் பல்வேறு அடுக்குகளில் வித்தியாசமாக செயல்பட்டு தற்போது கோப்பையை நெருங்கியுள்ளன. குறிப்பாக, இரண்டு அணிகளின் பேட்டிங்கை நாம் குறிப்பிட்டாக வேண்டும்.

புதிதில்லை ஆனால்…

இந்த சீசனில் இரு அணிகளுக்கும் சிறப்பாக வொர்க்-அவுட்டான பார்முலா என்றால் அது ஓப்பனிங்கில் கிடைத்த அதிரடி ஹிட்டர்கள்தான். இது ஒன்றும் டி20க்கு புதிதில்லை என்றாலும் அதை தொடர்ச்சியாக செய்தால் கிடைக்க வேண்டிய பலன்கள் கிடைத்தே தீரும் என்பதை இந்த இரு அணிகளும் நமக்கு உணர்த்தின எனலாம்.

பவர்பிளேவில் பவர்ஹிட்டர்கள்

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியில் டிராவிஸ் ஹெட் – அபிஷேக் சர்மா (Travis Head – Abisheik Sharma) ஆகியோர் இதனை ஆரம்பித்து வைத்தனர். கொல்கத்தா அணியில் சுனில் நரைன் – பில் சால்ட் (Sunil Narine – Phil Salt) ஜோடியும் எவ்வித தயக்கமும் இன்றி பவர்பிளேவில் பொளந்து எடுத்தன. இதனால் இரு அணிகள் தற்போது இறுதிப்போட்டி வரை தகுதிபெற்றுவிட்டன. பேட்டர்கள் மட்டுமின்றி அந்த அணிகளின் பந்துவீச்சாளர்களும் அவர்களின் முக்கிய காரணக் கர்த்தாவாக இருந்துள்ளனர்.

சொதப்பிய அணிகள்

இந்த பார்முலாவை டெல்லி, பஞ்சாப் அணிகளும் முயற்சித்தன. டெல்லிக்கு அணிக்கு இரண்டாம் பாதியில் அது பிரேஸர் மெக்கர்க் மூலமாக நல்ல பலன் கிடைத்தது. பெங்களூரு அணியும் கூட விராட்டுக்கு பதில் டூ பிளெசிஸிற்கு பதில் வில் ஜாக்ஸை ஓப்பனிங்கில் இறக்கி ஒரு பரிசோதனையை செய்திருக்கலாம். ஆனால் மற்ற அணிகளோ இதில் சிரத்தையே காட்டவில்லை. ஆடுகளத்திற்கு ஏற்ப விளையாட வேண்டும் என்றாலும் பவர்பிளேவில் பவர் ஹிட்டர்களை முயற்சித்து பார்ப்பது நிச்சயம் நீண்ட கால பலன்களை தரும். அதற்கு உதாரணமாக, கேகேஆர், எஸ்ஆர்ஹெச் தற்போது உள்ளது.

ஐபிஎல் மெகா ஏலம் 2025

எனவே, அடுத்தாண்டு மெகா ஏலத்தில் (IPL Mega Auction 2025) பவர்ஹிட்டர்களுக்கு நல்ல விலை கிடைக்கும் எனலாம். அவர்களை பினிஷிங்கிற்கு பதுக்கி வைப்பது பழைய டிரெண்டாகிவிட்டது. ஓப்பனிங்கிலும் அதே போன்ற ஹிட்டர்கள் இன்றைய காலகட்டத்திற்கு தேவைப்படுகிறார்கள். சிஎஸ்கே, மும்பை அணிகள் விரைவாகவே இந்த பிளானுக்கு வர வேண்டும். இன்னும் பழைய பிளான்களையே பின்பற்றுவது வரும் ஆண்டுகளிலும் ஐபிஎல் தொடரை கட்டியாண்ட அணிகளுக்கு பின்னடைவாக அமையலாம். 

மேலும் படிக்க | KKR vs SRH: கோப்பையை வெல்லப்போவது யார்…? ஐபிஎல் வரலாறு சொல்லும் பதில் இதுதான்!
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.