தண்ணீரில் போட்டாலும் தாக்குப்பிடிக்கும் மொபைல்கள்… மூன்று மாடல்கள் இதோ!

Water Resistant IP68 Smartphones: கோடை காலம் அதன் இறுதிக்கட்டத்தை எட்டியிருக்கிறது. கத்திரி வெயில் நடைபெற்று வரும் இந்த சூழலில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் மழையும் பெய்து வருகிறது. இந்தாண்டு தென்மேற்கு பருவமனை முன்கூட்டியே தொடங்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. வெயிலால் வாடி வதங்கி போன மக்கள் மழையால் தற்போது ஆசுவாசமடைந்துள்ளனர். இதன்மூலம் என்ன தெரிகிறது மழை காலம் நம்மை நெருங்கிவிட்டது.

மழை காலம் நெருங்கிவிட்ட இந்த சூழலில் பலரும் மொபைல் வாங்கும் போது வாட்டர் ரெஸிஸ்டன்ட் பாதுகாப்பு உள்ள மாடல்களையே வாங்க நினைப்பார்கள். மழை மட்டுமின்றி வாட்டர் ரெஸிஸ்டன்ட் போன் வாங்க வேண்டும் என்பதற்கு பலருக்கும் பல காரணங்கள் இருக்கும். மொபைலை கீழே போட்டால் உடையக் கூடாது என்பதற்காக கொரில்லா வகை டிஸ்ப்ளே உள்ள ஸ்மார்ட்போன்களை வாங்குவது போன்று ஒரு கூடுதல் பாதுகாப்புக்காகவும் இதுபோன்ற வாட்டர் ரெஸிஸ்டன்ட் மொபைல்களை வாடிக்கையாளர்கள் விரும்புகின்றனர். 

வாட்டர் ரெஸிஸ்டன்ட்

நிச்சயம் IP68 ரேட்டிங் கொண்ட வாட்டர் ரெஸிஸ்டன்ட் மொபைல்கள் உங்களுக்கு நல்ல சாய்ஸாக இருக்கும். இந்த ரேட்டிங்கில் இருந்தால் முழுவதுமாக வாட்டர் புரூஃப் இருக்கும் என அர்த்தம் கிடையாது, ஆனால் மற்ற மொபைல்களை போன்று தண்ணீரில் விழுந்தால் மொத்தமாக காலியாகும் என்று கிடையாது. இது உங்களின் மொபைலை ஓரளவுக்கு பாதுகாக்கும், மீண்டும் உபயோகிக்க அதிக வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுக்கும்.

சாம்சங், ஆப்பிள் போன்ற நிறுவனங்கள் IP68 ரேட்டிங்கில் தங்களது சில தயாரிப்புகளை வழங்கி வருகின்றன. இந்த மொபைல்களில் கேமராவும் தரமாக இருக்கும். அந்த வகையில், வாட்டர் ரெஸிஸ்டன்ட் உள்ள மொபைல்களை வாங்க நினைத்தால் இந்த மூன்று ஸ்மார்ட்போன்களும் நிச்சயம் நல்ல சாய்ஸ்தான். இவை குறித்து விரிவாக இங்கு காணலாம். 

Samsung Galaxy S24 Ultra

சாம்சங்கின் இந்த மாடலில் IP68 ரேட்டிங் உள்ளது. இந்த மொபைலை நீங்கள் 1.5 ஆழம் கொண்ட நீரில் போட்டால் அரைமணி நேரம் வரை தாக்குப்பிடிக்கும். அந்தளவிற்கு இந்த மொபைல் வாட்டர் ரெஸிஸ்டன்ட் கொண்ட சாதனமாகும். இதில் 6.8 இன்ச் OLED டிஸ்ப்ளே உள்ளது. ஸ்னாப்டிராகன் 8 Gen 3 பிராஸஸரில் இது செயல்படுகிறது. இதில் நான்கு கேமரா அமைப்பு கொண்டதாகும். முன்பக்க கேமராவும் 12 MP கொண்டதாகும். இந்த மொபைல் 12 ஜிபி RAM மற்றும் 1 TB இன்டர்நல் ஸ்டோரேஜ் உடன் வரும். இதன் விலை 1 லட்சத்து 59 ஆயிரத்து 999 ஆகும். 

iPhone 14

ஐபோன் 14 சீரிஸில் உள்ள அனைத்து மாடல்களும் IP68 ரேட்டிங் உடன் வருகிறது. இது 6 அடி நீரில் அரைமணி நேரம் தாக்குப்பிடிக்கும். இதில் 6.1 இன்ச் OLED டிஸ்ப்ளே உள்ளது. ஆப்பிளின் A15 சிப்செட் மூலம் இது இயங்குகிறது. பின்பக்கம் இரட்டை கேமரா அமைப்புடன் வருகிறது. செல்ஃபி கேமரா 12MP கொண்டுள்ளது. இந்த மொபைலின் விலை ரூ.58,999 இல் இருந்து தொடங்குகிறது. 

Motorola Edge 50 Pro 5G

5ஜி ஸ்மாட்போனா இதுவும் IP68 ரேட்டிங் உடன் வருகிறது. இதில் 8 ஜிபி RAM உள்ளது. கூடுதலாக 8 ஜிபி நீட்டித்துக்கொள்ளலாம். இந்த 8 ஜிபி RAM மற்றும் 256 ஜிபி இன்டர்நல் ஸ்டோரேஜ் கொண்ட வேரியண்ட் 32 ஆயிரத்து 295 ரூபாய் ஆகும். இதில், 6.7 இன்ச் டிஸ்ப்ளே, 1.5K டிஸ்ப்ளே உள்ளது, ரெப்ரேஷ் ரேட் 144Hz ஆகும். 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.