Hardik Pandya : பாய் பெஸ்டியுன் ஊர் சுற்றும் ஹர்திக் பாண்டியா மனைவி! அப்போ ஹர்திக்?

இந்திய கிரிக்கெட்டின் நட்சத்திர தம்பதியாக வலம் வந்த ஹர்திக் பாண்டியா – நடாசா ஸ்டான்கோவிச் இடையே இப்போது விரிசல் ஏற்பட்டிருப்பதாக தெரிகிறது. இருவரும் அண்மைக்காலமாக பிரிந்து வாழ்ந்து வருவதாக கூறப்படும் நிலையில், ஸ்டான்கோவிச் தன்னுடைய பாய் பெஸ்டி அலெக்சாண்டர் அலெக்ஸ் இலிக் உடன் டேட்டிங் செய்து வருகிறார். இருவரும் ரெஸ்டாரன்டுக்கு ஜோடியாக சென்ற வீடியோ இப்போது வெளியாகியிருக்கிறது. அப்போது பத்திரிக்கையாளர் ஒருவர் ஹர்திக் பாண்டியாவுடன் விவாகரத்து செய்துவிட்டீர்களா? என கேட்க, அதற்கு சிரித்தபடி தேங்க் யூ வெரி மச் என்று பதிலளித்துவிட்டு சென்றார் நடாசா. அதாவது, விவாகரத்து குறித்து எந்த விளக்கமும் அவர் கொடுக்கவில்லை.

May 26, 2024

அதேநேரத்தில் ஐபிஎல் போட்டிகளின்போது ஹர்திக் பாண்டியா விளையாடுவதை நேரில் வந்து பார்க்காத நடாசா, பாய் பெஸ்டியுடன் ஊர் சுற்றுவது இருவருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டு இருப்பதை உறுதிபடுத்துவதாகவே அமைந்திருக்கிறது. மார்ச் 4 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடிய நடாசாவுக்கு பாண்டியா எந்த வாழ்த்தும் தெரிவிக்கவில்லை. அதன்பிறகு பாண்டியா என்ற குடும்ப பெயரை நடாசா தன்னுடைய சோஷியல் மீடியா பக்கங்களில் இருந்து நீக்கினார். இதனால், பாண்டியா – நடாசா தம்பதி விவாகரத்து ஏறத்தாழ உறுதியாகிவிட்டதாகவும், இப்போது சொத்து சார்ந்த பிரச்சனைகளை தீர்ப்பது குறித்து சுமூக பேச்சுவார்த்தை இருவருக்கும் இடையே நடைபெற்றுக் கொண்டிருப்பதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

நடாசா – பாண்டியா தம்பதியின் மூன்று வயது மகன் அகஸ்த்தியா இப்போது ஹர்திக்கின் சகோதரர் குருணால் பாண்டியா வீட்டில் வசித்து வருகிறார். பாண்டியா 20 ஓவர் உலக கோப்பையில் பங்கேற்க அமெரிக்க சென்றிருப்பதால், இந்த தொடர் முடிந்த பிறகே இருவருக்கும் இடையிலான விரிசல் குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாக வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. அதுவரை அமைதி காக்கலாம் என பாண்டியா நினைத்திருந்த நேரத்தில் நடாசா திடீரென பொதுவெளியில் பாய் பெஸ்டி அலெக்ஸூடன் சுற்ற ஆரம்பித்திருப்பது ஹர்திக் பாண்டியாவுக்கு மேலும் சங்கடத்தை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. இருப்பினும் இந்த விரிசலை சுமூக பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க அவர் முயற்சி செய்து வருவதாகவும் கிரிக்கட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. நட்சத்திர தம்பதி இடையே ஏற்பட்டிருக்கும் இந்த விரிசல் ரசிகர்களுக்கு சோகத்தை ஏற்படுத்தியிருக்கிறது. 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.