சென்னை: இந்திய ஸ்மார்ட்போன் சந்தையில் iQOO Neo 7 5ஜி ஸ்மார்ட்போன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த போனின் விலை மற்றும் சிறப்பு அம்சங்கள் குறித்து விரிவாக பார்ப்போம்.
சீன நாட்டின் ஸ்மார்ட்போன் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றுதான் iQOO. விவோவின் துணை நிறுவனம். இதன் நியோ 7 சீரிஸ் போன் வரிசையில் இப்போது iQOO Neo 7 5ஜி அறிமுகமாகி உள்ளது. இந்த போன் கேமிங் விளையாடும் பயனர்களுக்கு சிறந்த பயனர் அனுபவத்தை தரும் எனத் தெரிகிறது.
சிறப்பு அம்சங்கள்
- 6.78 இன்ச் AMOLED டிஸ்பிளே
- மீடியாடெக் டிமான்சிட்டி 8200 சிப்செட்
- பின்பக்கத்தில் மூன்று கேமரா. அதில் 64 மெகாபிக்சல் கொண்டுள்ளது பிரதான கேமரா
- 16 மெகாபிக்சல் கொண்டுள்ளது முன்பக்க கேமரா
- 5,000 mAh பேட்டரி
- ஆண்ட்ராய்டு 13 இயங்குதளம்
- 8ஜிபி ரேம் + 128ஜிபி ஸ்டோரேஜ் மற்றும் 12ஜிபி ரேம் + 256ஜிபி ஸ்டோரேஜ் என இரண்டு வேரியன்ட்
- 5ஜி சப்போர்ட்
- 8ஜிபி வேரியன்ட் போனின் விலை ரூ.29,999
- 12ஜிபி வேரியன்ட் போனின் விலை ரூ.33,999
- இந்த போனுக்கு அறிமுக சலுகையும் அறிவிக்கப்பட்டுள்ளது
Get ready to unlock your #PowerToWin with the Ultra Gaming of #iQOONeo7 5G! Take control of your every action with Motion Control of the Ultra Game Mode. Sale is live on @amazonIN at just ₹28,499!*
Buy Now: https://t.co/0dIXrodd1F#AmazonSpecials
*Inclusive of Bank Offers pic.twitter.com/tWp7qbjvoW— iQOO India (@IqooInd) February 16, 2023