இன்றும், நாளையும் பவுர்ணமி கிரிவலம் அண்ணாமலையார் கோயிலில் தரிசனத்துக்கு ஒற்றை வரிசை: கலெக்டர், எஸ்பி ஆய்வு

திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில், பவுர்ணமி கிரிவலம் மற்றும் கார்த்திகை தீபத்திருவிழா முன்னேற்பாடுகள் குறித்து கலெக்டர் மற்றும் எஸ்பி ஆகியோர் நேரடி ஆய்வு நடத்தினர். பக்தர்கள் விரைந்து தரிசனம் செய்ய ஒற்றை வரிசை ஏற்படுத்த கலெக்டர் அறிவுறுத்தினார். திருவண்ணாமலையில் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீபத்திருவிழா, வரும் 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்க உள்ளது. தொடர்ந்து 10 நாள் நடைபெறும் விழாவின் நிறைவாக, அடுத்த மாதம் 6ம் தேதி மகா தீப பெருவிழா நடைபெறும். அன்று அதிகாலை 4 … Read more

கெஜ்ரிவால் என்னிடம் ரூ.500 கோடி கேட்டார்: சுகேஷ் சந்திரசேகர் பரபரப்பு குற்றச்சாட்டு

புதுடெல்லி: ஆம் ஆத்மிக்கு தேர்தல் நிதிக்காக ரூ.500 கோடி திரட்ட கூறியதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் மீது சுகேஷ் சந்திரசேகர் குற்றம்சாட்டி உள்ளார். பெங்ளூருவை சேர்ந்த மோசடி மன்னன் சுகேஷ் சந்திரசேகர் மீது பல்வேறு மோசடி புகார்கள் உள்ளன. தற்போது டெல்லி மண்டோலி சிறையில் உள்ளார். இவர் டெல்லி துணைநிலை ஆளுனர் சக்சேனாவுக்கு கடிதம் எழுதினார். அதில், ஆம் ஆத்மியின் சார்பில் மாநிலங்களவை எம்பி பதவி பெறுவதற்காக நான் பல கோடி ரூபாய் கொடுத்துள்ளேன்,’என்று குறிப்பிட்டிருந்தார். … Read more

கோவையில் ஐஎஸ் தீவிரவாத ஆதரவு வாலிபர்கள் சிக்கினர்: உளவியல் ஆலோசனை வழங்க திட்டம்

கோவை: கோவை மாநகரில் ஐ.எஸ். தீவிரவாத அமைப்புக்கு ஆதரவான 60க்கும் மேற்பட்ட வாலிபர்கள் கண்டுபிடிக்கப்பட்டு, அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. கோவை உக்கடம் சங்கமேஸ்வரர் கோயில் முன்பு கடந்த 23ம் தேதி கார் வெடிப்பில் ஜமேஷா முபின் (23) பலியானார். கோவை மாநகர தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி சதித்திட்டம் தீட்டியதாக ஜமேஷா முபினின் உறவினர்கள் முகமது அசாருதீன், அப்சர்கான் உள்ளிட்ட 6 பேரை கைது செய்தனர். அவர்கள் கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு … Read more

மகள் ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் கவுரவ வேடத்தில் ரஜினி

சென்னை: ஐஸ்வர்யா இயக்கும் படத்தில் ரஜினிகாந்த் கவுரவ வேடத்தில் நடிக்கிறார். ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா, இதற்கு முன் 3, வை ராஜா வை ஆகிய படங்களை இயக்கியுள்ளார். இப்போது மூன்றாவதாக அவர் இயக்க …

மாணவர் விஷம் கொடுத்து கொலை போலீஸ் சீல் வைத்த மாணவியின் வீட்டு பூட்டு உடைப்பு: ஆதாரங்களை அழிக்க முயற்சியா?

திருவனந்தபுரம்: கல்லூரி மாணவரை விஷம் கொடுத்து கொன்ற மாணவி கிரீஷ்மாவின் வீட்டுக்கு போலீசார் சீல் வைத்திருந்த நிலையில், பூட்டு உடைக்கப்பட்டு இருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், நெய்யூர்  கல்லூரி மாணவர் ஷாரோன் கஷாயத்தில் விஷம் கலந்து கொடுத்து கொல்லப்பட்ட சம்பவத்தில், அவரது காதலி கிரீஷ்மா, தாய் சிந்து மற்றும் மாமா நிர்மல்குமார் ஆகியோர் தற்போது கேரள போலீஸ் காவலில் உள்ளனர். சிந்து, நிர்மல் குமாருக்கு 5 நாள் போலீஸ் காவலும், கிரீஷ்மாவுக்கு 7 நாள் … Read more

வனத்துறை ஊழியர்கள் 2 பேர் சஸ்பெண்ட்

திருவில்லிபுத்தூர்: விருதுநகர் மாவட்டம், திருவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரத்தை சேர்ந்தவர்கள் ராமர், லட்சுமணன். விவசாயிகளான இருவரையும் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு ஊழியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதை கண்டித்து, விவசாய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதையடுத்து, திருவில்லிபுத்தூர் வனத்துறை பாரஸ்டர் பாரதி மற்றும் ஜெயக்குமார் ஆகியோரை சஸ்பெண்ட் செய்து, திருவில்லிபுத்தூர் – மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குனர் திலீப்குமார் உத்தரவிட்டார்.

இந்தி படத்தில் நடிக்க யாஷ் மறுப்பு

பெங்களூர்: இந்தி படங்களில் நடிக்க வந்த வாய்ப்பை நடிகர் யாஷ் மறுத்துள்ளார். ‘கே.ஜி.எஃப்’, ‘கே.ஜி.எஃப் 2’ படங்களின் மூலம் இந்தியா முழுவதும் ரசிகர்களைப் பெற்றவர், கன்னட நடிகர் யாஷ். இந்தப் படத்துக்குப் பிறகு அவருக்குப் …

வாழ்க்கையில் 34 முறை ஓட்டு போட்டவர் நாட்டின் முதல் வாக்காளர் மரணம்: பிரதமர் மோடி உள்ளிட்டோர் இரங்கல்

சிம்லா: இந்தியாவின் முதல் வாக்காளர் ஷியாம் சரண் நேகி நேற்று காலமானர். இவரது மறைவுக்கு பிரதமர் மோடி, இமாச்சல் முதல்வர் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இமாச்சலப் பிரதேசம் மாநிலம், கின்னூரை சேர்ந்தவர் ஷியாம் சரண் நேகி (106). இவர் இந்தியாவின் முதல் வாக்காளர் என்ற பெருமைக்குரியவர். இதுவரை 34 முறை தபால் வாக்கு மூலம் வாக்காளித்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் விளம்பர பிரதிநிதியாக இருந்துள்ளார். கடந்த சில தினங்களாக உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நேகி நேற்று காலமானார். … Read more

கச்சா எண்ணெய் விலை பெருமளவு குறைந்தும் வீட்டு உபயோக சிலிண்டர் விலையை குறைக்காத எண்ணெய் நிறுவனங்கள்: 6 மாதமாக ரூ.1100க்கு விற்பனை; இல்லத்தரசிகள் கடும் பாதிப்பு

சேலம்: நாடு முழுவதும் பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய், காஸ் சிலிண்டர் உள்ளிட்ட எரிபொருட்களை, ஒன்றிய பொதுத்துறை நிறுவனங்களான இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் ஆகிய 3 நிறுவனங்களும் சப்ளை செய்கிறது. இந்நிறுவனங்களின் கூட்டமைப்பு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை, இறக்குமதி செலவு, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றை கணக்கில் கொண்டு, பெட்ரோல், டீசல், காஸ் சிலிண்டர் விலையை நிர்ணயம் செய்கிறது. இதில், பெட்ரோல், டீசல் விலையை தினமும் மாற்றி … Read more

மூன்றாம் மனிதர் வேண்டாம்: ராதிகா ஆப்தே அட்வைஸ்

சென்னை: தம்பதியோ, காதலரோ உங்கள் பிரச்னையை தீர்க்க மூன்றாம் மனிதரின் உதவியை நாட வேண்டாம் என்றார் நடிகை ராதிகா ஆப்தே. கபாலி படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் ராதிகா ஆப்தே. இந்தியில் பல படங்களில் …