கர்நாடகா நடைபயணத்தில் சினிமா பாடல் ராகுல் மீது வழக்குப்பதிவு

பெங்களூரு: காங்கிரசின் பாரத் ஜோடோ நடைபயணத்தின் போது, கன்னட திரைப்படமான கேஜிஎப் இசையை உரிய அனுமதி பெறாமல் பயன்படுத்தியதாக ராகுல் காந்தி உட்பட மூன்று மூத்த காங்கிரஸ் தலைவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, ‘இந்திய ஒற்றுமை யாத்திரை’ நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார். கர்நாடகாவில் நடைபயணம் மேற்கொண்ட போது, அனுமதியின்றி கேஜிஎப்-2 இந்தி   திரைப்படத்தின் இரண்டு பாடல்களைப் பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இந்த பாடல்களை ஜெய்ராம் ரமேஷ் தனது அதிகாரப்பூர்வ டிவிட்டர் பக்கத்தில் … Read more

தண்டவாளத்தில் பாறாங்கல் குமரியில் ரயிலை கவிழ்க்க சதியா?

கன்னியாகுமரி: கன்னியாகுமரி அருகே தண்டவாளத்தில் பாறாங்கல்லை வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடந்ததா? என நாகர்கோவில் ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். கன்னியாகுமரி ரயில் நிலையம் அருகே நேற்று முன் தினம் மாலை தண்டவாளத்தில் பாறாங்கல் இருந்தது. கன்னியாகுமரியில் இருந்து நாகர்கோவில் சென்ற ரயிலில் மோதி இந்த பாறாங்கல் தெறித்தது. ரயில் இன்ஜின் டிரைவர் இதுபற்றி நாகர்கோவில் ரயில்வே போலீசாருக்கு தெரிவித்துள்ளார். அதன்படி போலீசார் தண்டவாளத்தில் கல் வைத்து ரயிலை கவிழ்க்க சதி நடைபெற்றதா? என்பது … Read more

நவ-06: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24 – க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு 102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு 94.24 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

திருப்பதியில் கைசிக துவாதசி உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் அதிகாலை கைசிக துவாதசியையொட்டி ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில், திரளான பக்தர்கள் பங்கேற்றனர். திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கைசிக துவாதசியையொட்டி, நேற்று அதிகாலை ஸ்ரீதேவி பூதேவி சமேத உக்கிர சீனிவாச மூர்த்தி 4 மாடவீதியில் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார். இதையொட்டி சுப்ரபாத சேவை, தோமாலை சேவைக்கு பிறகு சூரிய உதயத்துக்கு முன்பாக அதிகாலை 4.30 மணியில் இருந்து 5.30 மணி … Read more

செய்யாறு அருகே நெல்வாய் கிராமத்தில் 9ம் நூற்றாண்டு அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் கண்டெடுப்பு

செய்யாறு: திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுகா நெல்வாய் கிராமத்தில் வரலாற்று ஆய்வாளர் எறும்பூர் செல்வக்குமார் ஆய்வு நடத்தியதில், வயல்வெளி நடுவில் செல்லியம்மன் கோயில் அருகே புதைந்து கிடந்த அய்யனார் சிலை, கருடாழ்வார் சிற்பம் பொறித்த கல்தூண், ஸ்தூபக்கல், சந்து தெருவில் கோமாரிக்கல் ஆகியவற்றை கண்டெடுத்தார். இதுகுறித்து செல்வகுமார் கூறியதாவது: அய்யனார் சிற்பம் 34 சென்டிமீட்டர் உயரமும், 22 சென்டிமீட்டர் அகலமும் உடையது. அய்யனாரின் தலையை அடர்ந்த ஜடா பாரம் அலங்கரிக்கிறது. காதில் பத்திர குண்டலமும், கழுத்திலும் கால்களிலும் … Read more

ஒன்டைம் செட்டில்மென்ட்டில் கால நீட்டிப்பு கேட்க உரிமை கோர முடியாது: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ‘ஒன்டைம் சென்ட்டில்மென்ட்டில் (ஒருமுறை தீர்வு திட்டம்) கடன் வாங்கியவர் கால நீட்டிப்பு கேட்பதற்கு உரிமை கோர முடியாது’ என உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தனியார் நிறுவனம் ஒன்று வாங்கிய கடனை திருப்பி செலுத்த எஸ்பிஐ வங்கியுடன் ஒன்டைம் செட்டில்மென்ட் செய்துள்ளது. இதன்படி, கடன் பாக்கியில் 25 சதவீதத்தை 2017ம் ஆண்டு டிசம்பர் 21ல் டெபாசிட் செய்வதாகவும், மீதமுள்ள தொகையை வட்டியுடன் சேர்த்து 6 மாதத்தில் செலுத்தி விடுவதாகவும் ஒப்பந்தம் செய்தது. ஆனால், அதன்பிறகு மீதமுள்ள தொகை … Read more

தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரி 3ம் ஆண்டு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

தர்மபுரி: சேலம் மாவட்டம், ஓமலூரைச் சேர்ந்தவர் கண்ணன் மகன் இளம்பரிதி(21). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில், 3ம் ஆண்டு எம்பிபிஎஸ் படித்து வந்தார். கல்லூரி வளாகத்தில் உள்ள மாணவர் விடுதியில் தங்கி படித்து வந்தார். நேற்று மாலை சக மாணவர்கள் வெளியே அழைத்த போது, அசைன்மென்ட் உள்ளதாகக்கூறி அறையிலேயே இருந்தார். வெளியே சென்ற மாணவர்கள், இரவு 7.30 மணியளவில் திரும்பி வந்த போது, இளம்பரிதி பேனில் டவலால் தூக்கிட்ட நிலையில் சடலமாக கிடந்தார். அதிர்ச்சியடைந்த அவர்கள் … Read more

உயர்பிரிவினருக்கு 10% இடஒதுக்கீடு வழக்கில் நாளை தீர்ப்பு

புதுடெல்லி: உயர் பிரிவினருக்கான 10 சதவீத இடஒதுக்கீட்டை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், உச்ச நீதிமன்றம் நாளை தீர்ப்பு அளிக்கிறது. பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் பிரிவினருக்கு ஒன்றிய அரசு கல்வி நிலையங்கள், வேலை வாய்ப்பில் 10 சதவீத இடஒதுக்கீட்டை பிரதமர் மோடி வழங்கினார். இதை எதிர்த்து பல்வேறு தரப்பினர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளனர். இதில், திமுகவும் ஒரு மனுதாரராக உள்ளது. இந்த வழக்கை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வழங்குவதாக அறிவித்துள்ளது. … Read more

2 குழந்தைகள் உள்பட இலங்கை தமிழர்கள் 10 பேர் தனுஷ்கோடிக்கு வருகை

ராமேஸ்வரம்: இலங்கையில் இருந்து 2 குழந்தைகள் உள்பட 10 பேர் தனுஷ்கோடிக்கு வந்தனர். இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடியால், அங்குள்ள தமிழர்கள், தமிழகத்திற்கு அகதிகளாக வந்தவண்ணம் உள்ளனர். கடந்த சில மாதங்களில் 200க்கும் மேற்பட்டோர் இங்கு வந்துள்ளனர். இலங்கையிலிருந்து நேற்று காலை 2 குழந்தைகள், 5 பெண்கள் உட்பட 10 தமிழர்கள், தனுஷ்கோடிக்கு வந்தனர். இவர்களை ராமேஸ்வரம் மரைன் போலீசார் மீட்டனர். விசாரணையில், இவர்கள் இலங்கை தலைமன்னார் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் (45), இவரது மனைவி யோகேஸ்வரி(42), … Read more

டெல்லியில் புதிய கலால் கொள்கை முறைகேடு துணை முதல்வரின் உதவியாளர் கைது: அமலாக்கத்துறை அதிரடி

புதுடெல்லி: புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக டெல்லி முதல்வர் சிசோடியாவின் உதவியாளரை அமலாக்கத்துறை கைது செய்து உள்ளது. டெல்லியில் நடைமுறைபடுத்தப்பட்டு திரும்ப பெறப்பட்ட புதிய கலால் கொள்கை முறைகேடு தொடர்பாக துணை முதல்வர் சிசோடிய உள்ளிட்ட 14 பேர் மீது சிபிஐ வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த விவகாரத்தில் சட்டவிரோத பணபரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறையும் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இதுதொடர்பாக துணை முதல்வர் சிசோடியா வீடு, வங்கி லாக்கர் உள்ளிட்ட … Read more