மராட்டியத்தில் 7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று உறுதி

புனே: மராட்டியத்தில் முதன்முறையாக 7 பேருக்கு புதிய வகை ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மராட்டிய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. BA4 வகை தொற்றால் 4 பேரும், BA5 வகை தொற்றால் 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர். புதிய வகை ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட்ட 7 பேரில் 2 பேர் தென்னாப்பிரிக்கா, பெல்ஜியம் சென்று திரும்பியவர்கள் ஆவர்.

சென்னையில் வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது

சென்னை: சென்னை பள்ளிக்கரணை ஓம்சக்தி நகரில் கடை மற்றும் வீடு ஒன்றில் பதுக்கி வைத்திருந்த 500 கிலோ குட்கா பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மளிகைக்கடை உரிமையாளர் ஜெயராம் என்பவரை போலீசார் கைது செய்து ஆலந்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.

இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை: ஒன்றிய சுகாதாரத்துறை தகவல்

டெல்லி: இந்தியாவில் குரங்கு அம்மை நோய் இதுவரை கண்டறியப்படவில்லை என ஒன்றிய சுகாதாரத்துறை தகவல் தெரிவித்துள்ளது.  குரங்கு அம்மை நோய் தொடர்பாக உலக சுகாதார அமைப்பின் அறிவுரைகளை இந்தியா தொடர்ந்து பின்பற்றி வருகிறது என ஒன்றிய அரசு தெரிவித்துள்ளது.

மே-29: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24-க்கு விற்பனை

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

கொரோனாவுக்கு உலக அளவில் 63,10,242 பேர் பலி

ஜெனீவா:உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 63.10 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 63,10,242 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 53,12,22,652 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 50,17,81,957 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 37,640 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 8 ஆண்டு ஆட்சிக் காலத்தில் மக்களை தலைகுனிய வைக்கவில்லை: குஜராத்தில் பிரதமர் மோடி பேச்சு

ராஜ்கோட்: ‘கடந்த 8 ஆண்டுகால பாஜ ஆட்சியில், பொதுமக்களை தலைகுனிய வைக்கும் அளவுக்கு எந்த தவறும் செய்யவில்லை’ என குஜராத்தில் பிரதமர் மோடி பேசினார். குஜராத் மாநிலத்தில் நடந்த பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் மோடி நேற்று பங்கேற்றார். ராஜ்கோட் மாவட்டத்தில் அமைக்கப்பட்ட பன்னோக்கு சிறப்பு மருத்துவமனையை நேற்று திறந்து வைத்து அவர் பேசியதாவது: பாஜ  அரசு, நாட்டிற்கு சேவை செய்ய துவங்கி 8 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டுகளில், ஏழைகளுக்கு சேவை, சிறந்த நிர்வாகம் மற்றும் … Read more

விடுமுறையால் பக்தர்கள் கூட்டம் அதிகரிப்பு ஏழுமலையானை தரிசிக்க 13 மணி நேரம் காத்திருப்பு: 3 கிமீ தூரத்துக்கு வரிசை

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் விடுமுறையால் பக்தர்களின் கூட்டம் அதிகரித்துள்ளது. இதனால் 13 மணிநேரம் காத்திருந்து தரிசனம் செய்து வருகின்றனர். பல மாநிலங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. இதனால், ஆந்திராவில் உள்ள திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு திரளான பக்தர்கள்  சுவாமி தரிசனம் செய்ய வருகின்றனர். இதற்காக திருமலை திருப்பதி தேவஸ்தானமும் தினமும் 30 ஆயிரம் ரூ.300 சிறப்பு தரிசன டிக்கெட்டுகள் ஆன்லைனில் ஆகஸ்ட் மாதம் வரை விற்பனை செய்து உள்ளது. … Read more

யாசின் மாலிக்கின் செயலை நியாயப்படுத்த வேண்டாம்: ஓஐசி.க்கு இந்தியா கண்டனம்

புதுடெல்லி: யாசின் மாலிக்கிற்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதை விமர்சித்த இஸ்லாமிய நாடுகள் அமைப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.  தீவிரவாத செயல்களுக்கு நிதி உதவி அளித்த வழக்கில் ஜம்மு காஷ்மீர் பிரிவினைவாத தலைவர் யாசின் மாலிக்கிற்கு  ஆயுள் தண்டனை விதித்து  என்ஐஏ சிறப்பு நீதிமன்றம் கடந்த 19ம் தேதி தீர்ப்பளித்தது. இவருக்கு தண்டனை அளிக்கப்பட்டதை இஸ்லாமிய ஒத்துழைப்பு அமைப்பின்( ஓஐசி) மனித உரிமைகள் ஆணையம் விமர்சித்து இருந்தது. இதற்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.இது குறித்து ஒன்றிய வெளியுறவு … Read more

உக்ரைன் போரால் சலுகை விலையில் தருவதால் ரஷ்யாவின் கச்சா எண்ணெயை வாங்கிக் குவிக்கிறது இந்தியா: சீனாவும் போட்டா போட்டி

புதுடெல்லி: உக்ரைன் போர் காரணமாக, சலுகை விலையில் கச்சா எண்ணெய் தருவதால் ரஷ்யாவிடம் இருந்து பேரல் பேரலாக கச்சா எண்ணெயை இந்தியாவும், சீனாவும் இறக்குமதி செய்து குவிக்கின்றன. உக்ரைன் மீது போர் தொடுத்ததால் ரஷ்யா மீது அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் பல்வேறு பொருளாதார தடை விதித்துள்ளன. இந்த ஆண்டு இறுதிக்குள் ரஷ்யாவிடம் இருந்து அனைத்து வகையான கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு உள்ளிட்ட அனைத்து இறக்குமதிகளையும் நிறுத்த ஐரோப்பிய நாடுகள் முடிவு செய்துள்ளன.இதனால், ஐரோப்பிய சந்தைக்கு மாற்றாக … Read more

ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி முதல்வருக்கு மனைவி மனு

சென்னை: புழல் சிறையிலுள்ள ராபர்ட் பயஸ்க்கு 30 நாள் விடுப்பு வழங்கக் கோரி அவரது மனைவி முதல்வருக்கு மனு அளித்தார். நன்னடத்தை, சிறைவாசம் போன்றவற்றை கருத்தில்கொண்டு ராபர்ட் பயஸ்க்கு விடுப்பு தரக்கோரி மனைவி பிரேமா மனு கொடுத்தார்.