போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் இறுதி செய்யப்படும்: அமைச்சர் சிவசங்கர் அறிவிப்பு

சென்னை: போக்குவரத்து பணியாளர்களின் கோரிக்கைகள் ஊதிய ஒப்பந்தத்தில் இறுதி செய்யப்படும் என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார். போக்குவரத்து பணியாளர்கள் அடிக்கடி விடுப்பு எடுப்பது ஓய்வுபெறும் காலத்தில் பாதிப்பை ஏற்படுத்தும். பேருந்துகளில் எவ்வித புகாருக்கும் இடமளிக்காமல் பணியாளர்கள் பணியாற்ற வேண்டும் என கூறினார்

மே 31-ல் பெட்ரோல், டீசல் கொள்முதல் நிறுத்தம்: பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு

சென்னை: மே 31 ஒரு நாள் மட்டும் பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்த பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் முடிவு செய்துள்ளது. ரூ.2 லட்சம் முதல் 10 லட்சம் வரை இழப்பு ஏற்பட்டதால் விற்பனையாளரின் நடப்பு மூலதனம் மிகவும் பாதிப்படைந்துள்ளதாக தெரிவித்தது. 

பாஜக நிர்வாகிகள் ஸ்டேஷனுக்குள் நுழைய தடை; உ.பி காவல் நிலையம் வெளியே பேனர் வைப்பு

மீரட்: மீரட் மருத்துவக் கல்லூரி காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள் காவல் நிலையத்திற்கு நுழைய தடை விதித்து பேனர் வைக்கப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டது.  உத்தரபிரதேச மாநிலம் மீரட்டில் உள்ள மருத்துவக் கல்லூரி  காவல் நிலையத்திற்கு வெளியே, பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் உள்ளே வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி பேனர் வைக்கப்பட்டுள்ளது. அந்த பேனரின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. வெளியே வைக்கப்பட்டுள்ள பேனரில் (இந்தியில் எழுதப்பட்டுள்ளது), ‘பாஜக நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் காவல் நிலையத்திற்குள் … Read more

கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவு

சென்னை: கோடையில் வரும் கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திர காலம் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. கோடை முடிந்து ஜூன் மாதத் தொடக்கத்தில் கேரளா பகுதியில் தென்மேற்கு பருவமழை வலுவடைந்து வருகிறது. கோடையின் நிறைவாக மே மாதத்தில் இதுவரை மாவட்ட வாரியாக பதிவான கூடுதல் மழை பொழிவு விவரங்களை வானிலை மையம் வெளியிட்டது. 

ஜம்மு காஷ்மீர் பகுதியில் பாதுகாப்புப் படைக்கும், பயங்கரவாதிகளுக்கும் துப்பாக்கிச் சண்டை; 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொலை

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் பகுதியில் தொடர்ந்து பாதுகாப்புப் படைக்கும் பயங்கரவாதிகளுக்கும் இடையே துப்பாக்கிச் சண்டை நடைபெற்று வருகிறது. ஜம்மு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தில் உள்ளூர் போலீசார், பாதுகாப்புப் படையினர் இணைந்து சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்புப் படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். பாதுகாப்புப் படையினர் நடத்திய பதில் தாக்குதலில் 2 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்ட பகுதியில் இருந்து ஆயுதங்கள், வெடிமருந்துகள் உள்பட ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன … Read more

கலைஞர் முழு உருவச்சிலை திறப்பு விழா: நடிகர் ரஜினிகாந்த் உட்பட ஏராளமானோர் பங்கேற்பு

சென்னை: கலைஞர் முழு உருவச்சிலை திறப்பு விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து பங்கேற்றனர். கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், சத்யராஜ், நாசர் உள்ளிட்டோரும் கலைஞர் சிலை திறப்பு விழாவில் பங்கேற்றனர்.

எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம்; மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நோட்டீஸ்.! நாடாளுமன்ற நெறிமுறை குழு தகவல்

புதுடெல்லி: சுயே ச்சை பெண் எம்பி நவ்நீத் ராணா கைது விவகாரம் தொடர்பாக வரும் ஜூன் 15ம் தேதி நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க வேண்டும் என்று மகாராஷ்டிரா தலைமை செயலருக்கு நாடாளுமன்ற நெறிக்குழு நோட்டீஸ் அனுப்பி உள்ளது. மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே வீட்டு வாசலில், ‘அனுமன் சாலிஸா’ பாடல் பாடப்போவதாக, சுயேச்சை பெண் எம்பி நவ்நீத் ராணாவும், அவரது கணவரும், சுயேச்சை எம்எல்ஏவுமான ரவி ராணாவும் அறிவித்தனர். இவர்களது அறிவிப்பு பதற்றத்தை ஏற்படுத்தியது. இதையடுத்து … Read more

நம்முடன் கலைஞர் நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது; அமைச்சர் துரைமுருகன் பேச்சு

சென்னை: நம்முடன் கலைஞர் நேரில் பேசுவது போல் சிலை வடிவமைக்கப்பட்டுள்ளது என அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். முடியாததை முடித்து காட்டுவதில் கலைஞருக்கு நிகர் கலைஞர் தான், ஸ்டாலினுக்கு நிகர் ஸ்டாலின் தான் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

லீவு விட்டாச்சு!: ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி திருமலையில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம்.. 4 கி.மீ. தூரம் நீளும் வரிசை..!!

ஆந்திரா: கோடை விடுமுறையையொட்டி திருப்பதி திருமலையில் பெருமாளை தரிசிக்க பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. ஏழுமலையானை தரிசிக்க நாள்தோறும் 300 ரூபாய் டிக்கெட்டுகளை தேவஸ்தானம் ஆன்லைன் வாயிலாக விநியோகித்து வருகிறது. இது தவிர இலவச தரிசனத்திலும் பக்தர்கள் ஆயிரக்கணக்கில் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் தேர்வுகள் முடிந்து கோடை விடுமுறை விடப்பட்டுள்ளதால் நாடு முழுவதிலும் இருந்து திருமலைக்கு வரும் பக்தர்களின் எண்ணிக்கை கூடுதலாகியுள்ளது. இதனால் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 31 அறைகளும் நிரம்பி வழிகின்றன. இதன் வெளியிலும் சுமார் 3 … Read more

அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர்; குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயடு பேச்சு

சென்னை: அடக்கப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக உழைத்தவர் கலைஞர் என குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயடு பேசியுள்ளார். இந்தியாவின் பெருமை மிக்க முதல்வர்களில் கலைஞரும் ஒருவர். கலைஞரின் சிலையை திறந்து வைப்பதில் பெரு மகிழ்ச்சி அடைகிறேன் எனவும் தெரிவித்துள்ளார். மிகச் சிறந்த நிர்வாகியாக விளங்கியவர்; நாட்டின் மிகச்சிறந்த பேச்சாளர்களில் கலைஞரும் ஒருவர் எனவும் அவர் பேசியுள்ளார்.