நன்னிலம் தொகுதி வாஞ்சிநாத சுவாமி கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும்: பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவிப்பு

சென்னை: நன்னிலம் தொகுதி வாஞ்சிநாத சுவாமி கோயிலுக்கு விரைவில் குடமுழுக்கு நடத்தப்படும் என்று பேரவையில் அமைச்சர் சேகர்பாபு அறிவித்துள்ளார். வாஞ்சிநாத சுவாமி கோயிலில் குடமுழுக்கு பணிகள் மந்தமாக நடப்பதாக அதிமுக உறுப்பினர் காமராஜ் கூறினார். ரூ.1.40 கோடியில் 5 பணிகள் நடைபெற்று வருவதாகவும் விரைவில் குடமுழுக்கு நடைபெறும் என்று அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார். அவளிவநல்லூர் சட்டநாதர் கோயிலுக்கு குடமுழுக்கு நடத்த அதிமுக உறுப்பினர் காமராஜ் வலியுறுத்தினார்.

புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல்..!!

புதுச்சேரி: புதுச்சேரி அடுத்த சுல்தான்பேட்டையில் பெட்ரோல் பங்க் ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. சுல்தான்பேட்டையில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பெட்ரோல் நிரப்பிய 2 பேர் G Pay-ல் பணம் அனுப்புவதாக கூறியுள்ளனர். தங்களிடம் G-Pay இல்லை என்று கூறிய பங்க் ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சரமாரியாக தாக்கியுள்ளனர். ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தியவர்களை சிசிடிவி காட்சிகளை கொண்டு போலீசார் தேடி வருகின்றனர்.

ஸ்ரீரங்கம் கோயிலில் பங்குனி தேர் திருவிழா 4ம்நாள் தங்க கருட வாகனத்தில் நம்பெருமாள் வீதியுலா-நாளை உறையூரில் எழுந்தருளி சேர்த்தி சேவை

திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர் திருவிழாவின் 4ம் நாளான நேற்று நம்பெருமாள் தங்க கருட வாகனத்தில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சி அளித்தார். நாளை உறையூர் கமலவல்லி நாச்சியார் கோவிலில் நம்பெருமாளுக்கு எழுந்தருளி சேர்த்தி சேவை நடக்கிறது.திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் பங்குனி தேர்த் திருவிழா கடந்த 28ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. ஏப்ரல் 5ம் தேதி தாயார் சேர்த்தி சேவையும், 6ம் தேதி தேரோட்டமும் நடக்கிறது. பங்குனி … Read more

கோத்தகிரி அருகே ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய புகாரில் 2 இளைஞர்கள் கைது

நீலகிரி: நீலகிரி மாவட்டம் கோத்தகிரி அருகே ஆய்வுக்குச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய புகாரில் 2 இளைஞர்கள் கைது செய்யப்பட்டனர். நிலச்சரிவு அபாயம் உள்ளதால் அனுமதியின்றி பொக்லைன் இயந்திரங்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. தடையை மீறி கோத்தகிரி அருகே பொக்லைன் இயந்திரத்தை கொண்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததாக புகார் வந்தது. புகாரை அடுத்து நேரில் ஆய்வு செய்யச் சென்ற வருவாய்த்துறையினரை தாக்கிய வேம்புராஜ், தினேஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

திருப்பதியில் தீவன உற்பத்தி தொழிற்சாலை திறப்பு எஸ்.வி.கோசாலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்திக்கு திட்டம்-அறங்காவலர் குழு தலைவர் தகவல்

திருமலை :  திருப்பதி எஸ்.வி.கோசலையில் நாள்தோறும் 4,000 லிட்டர் பால் உற்பத்தி செய்ய திட்டமிட்டு உள்ளதாக அறங்காவலர் குழு தலைவர் சுப்பா  தெரிவித்தார்.திருப்பதி எஸ்.வி.கோசாலையில் புதிதாக கட்டப்பட்ட தீவன உற்பத்தி தொழிற்சாலை மற்றும் தேவஸ்தான கோயில்களில் சுவாமிக்கு பயன்படுத்தப்படும் பூக்களில் இருந்து அகர்பத்தி தயாரிக்கும் 2வது உற்பத்தி பிரிவை திருமலை திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு  தலைவர்  ஒய்.வி.சுப்பா, செயல் அதிகாரி ஏ.வி.தர்மா ஆகியோர் நேற்று திறந்து வைத்தனர்.பின்னர், அறங்காவலர் குழு  தலைவர்  ஒய்.வி.சுப்பா  கூறியதாவது: திருமலை … Read more

வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதை உயரம் 30 அடியாக அதிகரிப்பு

*மின்வாரியம் அதிரடி நடவடிக்கை அம்பை : வன விலங்குகளின் பாதுகாப்பு கருதி கல்லிடைக்குறிச்சி அருகே மேற்குத்தொடர்ச்சி மலையடிவாரத்தில் மின்பாதையின் உயரம் 30 அடியாக அதிகரிக்கப்பட்டு உள்ளது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு தாலுகா மாரண்டஹள்ளியில் சக்தி என்பவருக்கு சொந்தமான தோட்டத்தில் அமைக்கப்பட்டிருந்த மின்வேலியில் சிக்கி 3 யானைகள், கடந்த மார்ச் 7ம் தேதி பரிதாபமாக உயிரிழந்தது. இந்த பரபரப்பு அடங்குவதற்குள் கடந்த 18ம் தேதி பாலக்கோடு அருகே கெலவள்ளி அருகே உள்ள ஏரிக்கரையில் ஏற முயன்ற ஆண் யானை, … Read more

திருவள்ளூரில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் வழங்க நடவடிக்கை: அமைச்சர் ஐ.பெரியசாமி பதில்

சென்னை: திருவள்ளூரில் ஜல் ஜீவன் திட்டம் மூலம் குடிநீர் இல்லாத பகுதிகளுக்கு குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். மாதவரம் தொகுதி பரத் நகரில் ஆழ்துளை கிணறு, மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்க அரசு முன் வருமா என கேள்வி எழுப்பப்பட்டது. மாதவரம் சட்டமன்ற உறுப்பினர் சுதர்சனம் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் பதில் அளித்தார். திருவள்ளூர் மாவட்டத்தில் 1,069 குடிநீர்த் திட்டப்பணிகள் ரூ.58 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்படுகிறது.

இந்தியாவில் மெல்ல மெல்ல குறைய கொரோனா பாதிப்பு: கடந்த 24 மணி நேரத்தில் 2,995 பேருக்கு தொற்று உறுதி

டெல்லி: இந்தியாவில் 2 நாட்கள் 3 அயிரத்துக்கும் மேல் பதிவான ஒரு நாள் கொரோனா பாதிப்பு 2,995 ஆக குறைந்தது. நாட்டில் கொரோனா பாதிப்புகள் சீராக குறைந்து வந்த நிலையில், கடந்த சில வாரங்களாக தொற்று எண்ணிக்கை  கொஞ்சம்,கொஞ்சமாக அதிகரித்து வந்தது. சமீப நாட்களாக கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், நாட்டின் தினசரி கொரோனா பாதிப்பு நிலவரத்தை ஒன்றிய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி கடந்த 24 மணி நேரத்தில் 2,995 பேருக்கு கொரோனா தொற்று உறுதி … Read more

ராமேஸ்வரம் கோயில் மூலவர் படங்கள் இணையத்தில் ‘லீக்’

ராமேஸ்வரம் :  ராமேஸ்வரம் கோயில் மூலவர் படங்கள் இணையதளத்தில் வெளியானதால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர். தமிழக கோயில்களில் கர்ப்ப கிரகத்தில் வீற்றிருக்கும் சுவாமி, அம்பாளின் உருவங்களை படம் பிடிப்பதற்கு அனுமதி இல்லை. இது ஆன்மீக மரபாக காலம் காலமாக நடைமுறையில் உள்ளது. இந்நிலையில் ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோயில் கருவறையில் லிங்க வடிவில் வீற்றிருக்கும், ராமநாதசுவாமியின் புகைப்படம் இணையத்தில் வெளியாகியுள்ளது. இது பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்து கொண்டிருக்கும்போது மொபைல் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படம் போல் தெரிகிறது. இந்த படம் … Read more

தமிழ்நாட்டில் மேலும் 8 மாவட்டங்கள்?: பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில்

சென்னை: 8 மாவட்டங்களை உருவாக்குவது குறித்து முதலமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 8 மாவட்டங்களை புதிதாக உருவாக்க எம்.எல்.ஏ.க்கள், எம்.பி.க்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள். அதிமுக எம்.எல்.ஏ. சேவூர் ராமச்சந்திரன் கேள்விக்கு அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் பதில் அளித்தார். ஆரணியை தலைமையிடமாகக் கொண் புதிய மாவட்டம் உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கைக்கு அமைச்சர் பதில் கூறினார்.