போபால்-டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி..!!

போபால்: போபால்-டெல்லிக்கு வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி இன்று தொடங்கி வைக்கிறார். ராணி கமலாபதி ரயில் நிலையத்தில் நடக்கும் விழாவில் 11வது வந்தேபாரத் ரயில் சேவையை தொடங்கி வைக்கிறார். போபாலின் ராணி கமலாபதி-டெல்லியின் ஹஸ்ரத் நிஜாமுதீன் ரயில் நிலையங்களுக்கிடையே வந்தேபாரத் ரயில் இயக்கப்படவுள்ளது. 702 கி.மீ.பயணதூரத்தை 7.30 மணி நேரத்தில் கடக்கும் வந்தேபாரத் ரயிலின் அதிகபட்சவேகம் மணிக்கு 160 கி.மீ. பயணிக்கும்.

ரேஷன் பொருட்கள் வாங்க தினமும் 2 கிலோமீட்டர் நடந்து ஆற்றில் இடுப்பளவு தண்ணீரில் சென்று வரும் கிராம மக்கள்

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அடுத்த தோட்டக்கணவாய் கிராமத்தில் 180 க்கு மேற்பட்ட குடும்பங்கள் உள்ளது. இந்த கிராமத்தில் வசிக்கும் 180 மேற்பட்ட குடும்பத்தினர் அருகே உள்ள சிகரமாகனபள்ளி கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் ரேசன் பொருள்களை வாங்கி வருகின்றனர். சிகராமகானப்பள்ளி கிராமத்தில் இருந்து தோட்டக்கணவாய் கிராமத்திற்க்கு ரேசன் பொருட்களை வாங்க கிராம மக்கள் தினமும் சுமார் 2 கிலோமீட்டர் ஒத்தையடி பாதையில் நடந்து சென்று ரேஷன் பொருள்களை வாங்கி வருகின்றனர். அப்போது, கிராமத்தின் குறுக்கே உள்ள … Read more

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே மர்மமான முறையில் இளம்பெண் எரித்துக் கொலை..!!

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அருகே சித்தேரி கிராமத்தில் மர்மமான முறையில் இளம்பெண் எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். கொலை செய்யப்பட்ட பெண் யார் என்பது குறித்து நிகழ்விடத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து..!!

திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கோழிக்கோட்டில் உள்ள மிகப்பெரிய ஜவுளிக்கடையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. 20 வாகனங்களின் உதவியுடன் தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.

தனியார் பொறியியல் கல்லூரியில் மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு, பண்பாட்டு பரப்புரை: கலெக்டர் பங்கேற்பு

திருவள்ளூர்: பூந்தமல்லி, தனியார் பொறியியல் கல்லூரியில் மாவட்ட நிர்வாகம் சார்பாக மாபெரும் தமிழ் கனவு என்ற தமிழ் மரபு மற்றும் பண்பாட்டு பரப்புரை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமை தாங்கினார். கல்லூரி தலைவர் முனைவர் பி.சின்னதுரை, இயக்குநர்கள் முனைவர் சக்தி குமார், முனைவர் சரண்யாஸ்ரீ சக்தி குமார், கல்லூரி முதல்வர் முனைவர் கே.மணி, பூந்தமல்லி வட்டாட்சியர் ஆர்.மாலினி ஆகியோர் முன்னிலை வகித்தனர். இந்த நிகழ்ச்சியில் கவிஞர் மனுஷ்யபுத்திரன், ஊடகவியலாளர் … Read more

கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவிப்பு

சண்டிகர்: கிரத்பூர் சகாப்-சி அனந்த்பூர் சாகிப்-நங்கல்-உனா சுங்கச்சாவடிக்கு கட்டணம் கிடையாது என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் சுங்கக்கட்டணம் உயர்த்திய நிலையில் பஞ்சாப் முதல்வர் அதிரடி அறிவித்துள்ளார். சுங்கக்கட்டணம் வசூலிக்கும் நிறுவனம் ஒப்பந்தத்தை பலமுறை மீறியுள்ளது. மக்களின் பணத்தை சுங்கக்கட்டணம் என்ற பெயரில் கொள்ளையடிப்பதை ஏற்க முடியாது எனவும் கூறினார்.

அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவுகோலில் 4.0 ஆக பதிவு

போர்ட் பிளேர்: அந்தமான் நிக்கோபார் தீவில் திடீர் நிலநடுக்கம் உணரப்பட்டது. துருக்கி, சிரியாவில் கடந்த பிப்ரவரி 6ம் தேதி 3 சக்திவாய்ந்த நிலநடுக்கங்கள் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 50,000ஐ கடந்தது. இதனைத் தொடர்ந்து உலகின் பல பகுதிகளில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து நிலநடுக்க அதிர்வுகள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக நியூசிலாந்து, பிலிப்பைன்ஸ்,  இந்தோனேசியா, ஜப்பான், இலங்கை, ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் மிதமானதும் சக்திவாய்ந்த நிலநடுக்கமும் ஏற்பட்டு வருகின்றன. இதனிடையே இந்தியாவிலும் அவ்வப்போது நிலநடுக்கங்கள் … Read more

கள்ளக்குறிச்சி அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே மேட்டத்தூர் பகுதியில் சாலை ஓரம் நின்று கொண்டிருந்த மினி லாரி மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழந்தனர். மேலும் காயமடைந்த 2 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு சொத்து தகராறில் அண்ணனை கொன்ற தம்பி கைது

செங்கல்பட்டு: திருக்கழுக்குன்றம் பகுதியில் சொத்து தகராறில் அண்ணன் வெங்கடேஷை (30) சுட்டுக்கொன்ற தம்பி சந்திரன் கைது செயப்பட்டுள்ளார். அவரிடம் இருந்த துப்பாக்கியை போலீசார் தேடி வருகின்றனர்.

ம.பி. கோயில் விபத்தில் பலி எண்ணிக்கை 35ஆக அதிகரிப்பு

இந்தூர்: மத்தியப்பிரதேசத்தில் படிக்கட்டு கிணறு இடிந்து விழுந்த விபத்தில் பலியானோர் எண்ணிக்கை 35ஆக அதிகரித்துள்ளது.  மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பழமைவாய்ந்த பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் கோயிலில் ராமநவமி விழாவின்போது கிணற்றின் மீது இருந்த சிலாப் உடைந்து விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 40க்கும் மேற்பட்டோர் கிணற்றுக்குள் விழுந்தனர். தேசிய பேரிடர் மீட்பு குழுவினர், ராணுவ வீரர்கள் உதவியுடன் மீட்பு பணிகள் நடந்து வருகின்றது. இந்த சம்பவத்தில் 13 பேர் உயிரிழந்ததாக நேற்று முன்தினம் … Read more