அரசு பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்து தரப்படும்: மாவட்ட கலெக்டர் தகவல்

சிக்கமகளூரு: பசவனஹள்ளி அரசு மகளிர் பள்ளியில் அனைத்து வசதிகளும் செய்துகொடுக்கப்படும் என மாவட்ட கலெக்டர் ரமேஷ் தெரிவித்துள்ளார். சிக்கமகளூரு டவுன் பசவனஹள்ளியில் அரசு மகளிர் பள்ளி உள்ளது. இந்த மகளிர் பள்ளியில் சுமார் 500 அதிகமான  மாணவிகள் படித்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை பள்ளிக்கு சென்ற மாவட்ட கலெக்டர் ரமேஷ் மற்றும் நகரசபை தலைவர் வேணுகோபால் இருவரும் பள்ளி மாணவ மாணவிகளிடம் ஆலோசனை கூட்டம் நடத்தினர். அப்போது மாவட்ட கலெக்டர் ரமேஷ்  பள்ளிக்கு தேவையான … Read more

இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு

சென்னை: இந்தியாவில் நீதித்துறை சிறப்பாக இல்லை என அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். நிர்வாகமும், சட்டம் ஒழுங்கும் சரியாக இருந்தால் பொருளாதாரம் உயரும் என்பதுதான் உண்மை என தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார் கவுன்சில் சார்ந்த நிகழ்ச்சியில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியுள்ளார்.

பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்பு..!!

சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளது. பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் கடந்த 16ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

தஞ்சையில் காவலர்களின் மெத்தனம்; கைவிலங்குடன் தப்பிய கைதி: 6 பேரை பணியிடை நீக்கம் செய்து ஐ.ஜி அதிரடி உத்தரவு

தஞ்சை: தஞ்சை செங்கிப்பட்டி அருகே வளம்பக்குடியில் கைவிலங்குடன் கைதி தப்பிய சம்பவத்தில் 4 காவலர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டனர். எஸ்.எஸ்.ஐ. கலியமூர்த்தி, காவலர்கள் மணிகண்டன், விஜயகுமார், ஜகலதலப்பிரதாபன் ஆகியோர் இடைநீக்கம் செய்யப்பட்டனர். சாராயம் கடத்திய ஹரிஹரன் என்பவர் இறந்த சம்பவத்தில் எஸ்.எஸ்.தனசேகரன், காவலர் பார்த்திபன் ஆகியோரை இடைநீக்கம் செய்து ஐ.ஜி.பாலகிருஷ்ணன் உத்தரவிட்டார்.      

ஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்பு

சண்டிகர்: பஞ்சாப் தலைநகர் சண்டிகரில் பகவந்த் மான் தலைமையிலான ஆம் ஆத்மி அரசின் அமைச்சரவை நாளை பதவியேற்கவுள்ளது. பஞ்சாபில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி கட்சி 92 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்துள்ளது. பஞ்சாப் முதல்வராக பகவந்த் மான் கடந்த 16ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.

விருதுநகர் அருகே பேருந்து – கார் மோதி விபத்து: 3 பேர் சம்பவ இடத்திலேயே பலி

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் – தென்காசி சாலையில் கல்லூரி பேருந்தும், காரும் மோதிய விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர். தனியார் கல்லூரி பேருந்தும், காரும் மோதிக்கொண்ட விபத்தில் ஓட்டுநர் உட்பட 3 பேர் பேர் சம்பவ இடத்திலேயே பலியாயினர். 

போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் நிவாரண பொருட்கள்; இந்தியா உறுதி

நியூயார்க்: போரினால் பாதிக்கப்பட்டுள்ள உக்ரைனுக்கு மேலும் நிவாரண பொருட்கள் அனுப்பப்படும். இதில் இந்தியா உறுதியாக இருப்பதாக ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் இந்தியாவுக்கான நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி கூறினார். உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து வருகிறது. இதுகுறித்து விவாதிக்க வேண்டும் என அமெரிக்கா, இங்கிலாந்து, பிரான்ஸ், அல்பேனியா, அயர்லாந்து மற்றும் நார்வே உள்ளிட்ட நாடுகள் விடுத்த கோரிக்கையை அடுத்து ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் அவசர கூட்டம் நடந்தது. இதில், இந்தியாவின் நிரந்தர உறுப்பினர் டி.எஸ்.திருமூர்த்தி பேசியதாவது: உக்ரைனில் … Read more

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய சிறந்த நிதிநிலை அறிக்கை: காங். எம்.பி. திருநாவுக்கரசர் வரவேற்பு

சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும், தமிழக மக்களின் மேம்பாட்டிற்கும் உதவக்கூடிய சிறந்த நிதிநிலை அறிக்கை என்று தமிழ்நாடு பட்ஜெட்டுக்கு காங்கிரஸ் எம்.பி. திருநாவுக்கரசர் வரவேற்பு தெரிவித்துள்ளார். 2022-23ம் நிதியாண்டுக்கான பட்ஜெட் தமிழக சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.   2022-23ம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை காகிதமில்லா பட்ஜெட்டாக தாக்கலானது.

திருப்பதியில் ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட் 21 முதல் 23-ம் வரை வழங்கப்படும்..: தேவஸ்தானம் அறிவிப்பு

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சுவாமி தரிசனம் செய்வதற்கான ஏப்ரல், மே மற்றும் ஜூன் மாதங்களுக்கான ரூ. 300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்டுகள்  21-ம் தேதி முதல் தொடர்ந்து மூன்று நாட்களுக்கு ஆன்லைனில் வழங்கப்பட உள்ளது என்று தேவஸ்தானம் அறிவித்துள்ளது. இதில் ஏப்ரல் மாதத்திற்கான டிக்கெட்  21-ம் தேதியும், மே மாதத்திற்கான டிக்கெட்  22-ம் தேதியும், ஜூன் மாத டிக்கெட் மார்ச் 23-ம் தேதியும் ஆன்லைனில் வெளியிடப்பட உள்ளது. ரூ.300 சிறப்பு நுழைவு தரிசன டிக்கெட்கள் … Read more

தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை: பாமக நிறுவனர் ராமதாஸ்

சென்னை: தமிழ்நாடு அரசின் 2022-23ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் குறிப்பிடப்பட்ட கல்விக்கான திட்டங்கள் வரவேற்கத்தக்கவை என்று பாமக நிறுவனர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்திருக்கிறார். தனியார் பள்ளிகளில் பயின்று வந்த மாணவர்கள், அரசு பள்ளிகளுக்கு மாறி வரும் நிலையில், பள்ளிக்கல்வித்துறைக்கான ஒதுக்கீடு ரூ.32,599 கோடியில் இருந்து, ரூ.36,895 கோடியாக உயர்த்தப்பட்டிருப்பது மிகவும் சரியான நடவடிக்கை என்றும் ராமதாஸ் குறிப்பிட்டிருக்கிறார்.