வெளிநாடுகளில் தொற்று அதிகரிப்பதால் முன்னெச்சரிக்கை சளி, காய்ச்சல் இருந்தால் பரிசோதனை: மாநிலங்களுக்கு ஒன்றிய அரசு உத்தரவு

புதுடெல்லி: சளி, காய்ச்சல் மற்றும் சுவாச தொற்றினால் பாதிக்கப்படுவோரை கண்காணிக்கும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குமாறு ஒன்றிய அரசு வலியுறுத்தி உள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்துள்ளது. புதிதாக தொற்றினால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வெகுவாக குறைந்ததை தொடர்ந்து, தீவிர கொரோனா பரிசோதனைகள் சமீபத்தில் நிறுத்தப்பட்டன. இந்நிலையில் தென்கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பாவின் சில பகுதிகளில் கொரோனா தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால், அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு ஒன்றிய … Read more

உயிரினங்கள் தோன்றியது எப்படி? கடலில் 20,000 அடி ஆழத்தில் ரகசியம் தேடும் விஞ்ஞானிகள்: வேற லெவலுக்கு போகிறது இந்தியா

புதுடெல்லி: உலகில் உயிரினங்கள் உருவான ரகசியத்தை அறிய, கடலுக்கு அடியில் 20 ஆயிரம் அடி  ஆழத்துக்கு சென்று இந்திய விஞ்ஞானிகள் ஆராய்ச்சி நடத்த உள்ளனர். பல்வேறு துறைகளில் இந்தியா தனது ஆராய்ச்சியை விரிவுப்படுத்தி வருகிறது. நிலவுக்கு விண்கலனை அனுப்பி ஆராய்ச்சி செய்து வரும் அது, தற்போது ஆழ்கடலில் 6 கிமீ ஆழத்துக்கும் சென்று உயிரினங்கள் தோன்றிய ரகசியத்தை கண்டறியும் அடுத்த முயற்சியில் ஈடுபட உள்ளது.இது குறித்து ஒன்றிய புவி அறிவியல் அமைச்சக செயலாளர் ரவிசந்திரன் கூறுகையில், ‘‘உயிரினங்களின் … Read more

அரசியலுக்கும், கட்சிக்கும் ஊடகம் அப்பாற்பட்டவை: பிரதமர் மோடி கருத்து

கோழிக்கோடு: கேரள மாநிலம், கோழிக்கோட்டில் மலையாள பத்திரிகை மாத்ருபூமியின் நுாற்றாண்டு விழாவை பிரதமர் மோடி இணையவழியாக நேற்று துவக்கி வைத்து பேசியதாவது: மக்களின் வாழ்க்கையை மாற்றுவதில் ஊடகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. ஊடகங்களால் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நான் கண்டிருக்கிறேன். அதற்கு சிறந்த உதாரணமாக தூய்மை இந்தியா திட்டத்தை கூற முடியும். ஒவ்வொரு ஊடகமும் இந்த திட்டத்தை மிகுந்த நேர்மையுடன் எடுத்துச் சென்றது. மேலும் யோகா, உடற்பயிற்சி மற்றும்  ‘பெண் குழந்தையை காப்போம், பெண் … Read more

உக்ரைனில் கொல்லப்பட்டகர்நாடக மாணவர் சடலம் நாளை மறுதினம் வருகை

புதுடெல்லி: உக்ரைனில் ரஷ்யாவின் தாக்குதலில் கொல்லப்பட்ட கர்நாடக மாணவரின் சடலம், நாளை மறுதினம் (வரும் 21ம் தேதி) இந்தியா கொண்டு வரப்படுகிறது. கர்நாடகாவை சேர்ந்தவர் நவீன் சேகரப்பா (23). உக்ரைனில் உள்ள கார்கிவ் நகரில் செயல்படும் மருத்துவ கல்லூரியில் 4ம் ஆண்டு படித்து வந்தார். இந்நிலையில், கடந்த மார்ச் 1ம் தேதி சூப்பர் மார்க்கெட்டில் பொருட்கள் வாங்க சென்றபோது, ரஷ்ய படைகள் நடத்திய தாக்குதலில் பலியானார். இவருடைய சடலம் அங்கேயே பதப்படுத்தி வைக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில், இவருடைய சடலத்தை … Read more

செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் பராமரிப்புப் பணி நிறைவு: பாலத்தின் வழியே வாகனங்கள் செல்ல அனுமதி

சென்னை: பராமரிப்புப் பணி நிறைவடைந்ததை அடுத்து செங்கல்பட்டு பாலாறு பாலத்தில் வாகனங்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. சென்னையை நோக்கி வரும் வாகனங்கள் செங்கல்பட்டு பாலாறு பாலம் வழியே செல்ல அனுமதி வழங்கப்பட்டது.  

21 உலக மொழிகளில் தந்தை பெரியார் நூல்களை அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட்: கி.வீரமணி பாராட்டு

சென்னை: தந்தை பெரியார் நூல்களை 21 உலக மொழிகளில் அச்சிட்டு வெளியிடும் பட்ஜெட் அறிவிப்புக்கு கி.வீரமணி வரவேற்பு அளித்தார். மிகச் சிக்கலான இந்த நேரத்தில் அருமையான வரவு- செலவு திட்டத்தை அறிவித்துள்ளதாக கி. வீரமணி பாராட்டு தெரிவித்தார். உலகம் பெரியார் மயமாகும் என்று கூறத்தக்க வகையில் அவரது நூல்களை 21 மொழிகளில் அச்சிட உள்ளது பாராட்டுக்குரியது என தெரிவித்தார்.   

கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள் நாளை பணிக்கு வர உத்தரவு: கல்லூரிக் கல்வி இயக்குநர் சுற்றறிக்கை

சென்னை: கல்லூரி முதல்வர்கள், பணியாளர்கள், கல்லூரிக் கல்வி இணை இயக்குநர்கள் நாளை பணிக்கு வர உத்தரவிடப்பட்டது. பட்ஜெட் கூட்டத்தொடருக்கு தேவையான தரவுகளை ஒப்படைக்க தவறாது பணிக்கு வரவேண்டும் எனவும், நாளை அனைவரும் பணிக்கு வரவேண்டும் என கல்லூரிக் கல்வி இயக்குநர் பூரணசந்திரன் சுற்றறிக்கை வெளியிட்டார்.   

கோடை காலத்தில் உடல் நலம் பேண பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழக அரசு வேண்டுகோள்

சென்னை: கோடை காலத்தில் உடல் நலம் பேண பாரம்பரிய உள்ளூர் பானங்களை பருக தமிழ்நாடு அரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. இளநீர், நீரா, பதநீர் போன்ற பானங்களை பருகுவதால் உடல் நலத்துக்கும் நல்லது, விவசாயிகளின் வருமானமும் உயரும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

ஹிஜாப் அணிய தடை; தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம்

ஸ்ரீவில்லிபுத்தூர்: பள்ளி, கல்லூரிகளில் ஹிஜாப் அணிய தடை விதித்த கர்நாடக பாஜக அரசை கண்டித்து தமிழகத்தின் பல்வேறு பகுதியில் இஸ்லாமியர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தி வருகின்றனர். ஸ்ரீவில்லிபுத்தூர், திருவாடானை, குடியாத்தம், வாணியம்பாடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் தொடங்கியது. சென்னை அறிவாலயத்தில் நடைபெறும் கூட்டத்தில் பட்ஜெட் தொடரில் திமுக எம்எல்ஏக்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என ஆலோசனை நடைபெறுகிறது.