8 மாவட்டங்களில் ஆயுத படை சட்டம் நீட்டிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலத்தின் 8 மாவட்டங்களில் சிறப்பு ஆயுதப்படை அதிகாரச்சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது.  அமைதி குறைவான பகுதிகளாக கருதப்படும் தின்சுகியா, திப்ருகர், சாரைடியோ, சிவசாகர், ஜோர்ஹத், கோலகட், கார்பி ஆங்லாங் மற்றும் திமா ஹசோ ஆகிய 8 மாவட்டங்களில் மேலும் 6 மாதங்களுக்கு சிறப்பு ஆயுதப்படை அதிகார சட்டம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக மாநில உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிலி நாட்டில் பயங்கர நிலநடுக்கம்; ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு.!

சாண்டியாகோ : சிலி நாட்டின் தலைநகர் சாண்டியாகோவில் 6.2 ரிக்டர் அளவிலான பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. நேற்று இரவு 11 மணிக்கு மேல் இந்த நிலநடுக்கம் 10 கிமீ ஆழத்தில் தாக்கத்தை ஏற்படுத்தியதாக நிலநடுக்கத்திற்கான தேசிய மையம் தெரிவித்துள்ளது.

ஒரே நாளில் 3016 பேருக்கு கொரோனா

புதுடெல்லி: ஒன்றிய சுகாதார துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:  காலை 8 மணி வரையிலான 24 மணி நேரத்தில் புதிதாக 3,016 பேர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். மொத்த பாதிப்புக்கள் எண்ணிக்கையானது 13509ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி மட்டும் 3,375 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். 6 மாதங்களுக்கு பிறகு ஒரு நாள் தொற்று பாதிப்பு மூவாயிரத்தை கடந்துள்ளது. மகாராஷ்டிராவில் 3, டெல்லியில் 2 மற்றும் இமாச்சலப்பிரதேசத்தில் ஒருவரும் தொற்றினால் உயிரிழந்துள்ளனர். கேரளாவில் விடுபட்ட … Read more

கோயில் கிணற்றில் படிக்கட்டுகள் இடிந்த விபத்தில் பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரிப்பு : ராம நவமி விழாவில் சோகம்; நிவாரணம் அறிவிப்பு!!

இந்தூர்: மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் ராமநவமி விழாவில் படிக்கட்டு கிணறு சரிந்து விழுந்த விபத்தில்  பலி எண்ணிக்கை 35 ஆக அதிகரித்துள்ளது. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரில் படேல் நகரில் உள்ள பலேஷ்வர் மகாதேவ் ஜுலேலால் என்ற புகழ்பெற்ற பழமையான கோயிலில் ராமநவமி விழாவை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர். விழாவின் ஒருபகுதியாக நடைபெற்ற தீப சடங்கை முன்னிட்டு, அங்கிருந்த படிக்கிணற்றில் குளிக்க பக்தர்கள் முண்டியடித்து கொண்டு உள்ளே இறங்கினர். அப்போது பாரம் தாங்காமல் கிணற்றின் படிக்கட்டுகள் … Read more

கொரோனாவுக்கு உலக அளவில் 6,829,911 பேர் பலி

ஜெனீவா: உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 68.29 லட்சத்தை தாண்டியது. பல்வேறு நாடுகளை சேர்ந்த 6,829,911 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 683,722,041 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 656,688,762 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் 39,922 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒன்றிய அரசு பாரபட்சம் காட்டுவதாக புகார் மம்தா தர்ணா போராட்டம்

கொல்கத்தா:  மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் மேற்கு வங்க மாநிலத்திற்கு வழங்கவேண்டிய நிதியை ஒன்றிய அரசு விடுவிக்காமல் பாரபட்சம் காட்டுவதாக அம்மாநில முதல்வர் மம்தா பானர்ஜி தொடர்ந்து குற்றம்சாட்டி வந்தார். மேலும் ஓபிசி மாணவர்களுக்கான உதவித்தொகையை ஒன்றிய அரசு நிறுத்திவிட்டதாகவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்துக்கு எதிராக ஒன்றிய அரசு பாகுபாடு காட்டுவதற்கு கண்டனம் தெரிவித்து முதல்வர் மம்தா பானர்ஜி 2 நாள் தர்ணா போராட்டத்தை நேற்று முன்தினம் தொடங்கினார்.  … Read more

மார்ச்-31: பெட்ரோல் விலை ரூ. 102.63, டீசல் விலை ரூ.94.24

சென்னை: சென்னையில் 314-வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு  ரூ.94.24 -ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

உலகளாவிய ஊழல்வாதிகள் பிரதமரின் பாதுகாப்புக்கு வருகிறார்கள்: காங். சாடல்

புதுடெல்லி:    ஊழல் மற்றும் நிதி மோசடியுடன் தன்னை தொடர்புபடுத்தி பேசும் ராகுல் காந்திக்கு எதிராக இங்கிலாந்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்போவதாக லண்டனில் பதுங்கி உள்ள  ேமாசடி தொழிலதிபர் லலித்மோடி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக காங்கிரஸ் கட்சியின் பொதுசெயலாளர் கே.சி.வேணுகோபால்,‘‘ லலித் மோடி பல கோடி ரூபாய் மோசடியில் இருந்து கோழைத்தனத்தினால்  தப்பியோடியவர். பாஜவின் செயலற்ற தன்மை காரணமாக அவர் இப்போது வெளிநாட்டு வாழ்க்கையை அனுபவித்து வருகிறார். அவர் கூறுவதை யாராவது தீவிரமாக எடுத்துக்கொள்வார்கள் என்று அவர் நினைப்பது … Read more

தஹி சர்ச்சையில் பின் வாங்கியது ஒன்றிய அரசு: தயிர் என்றே விற்கலாம் என்று அறிவிப்பு

புதுடெல்லி: தஹி சர்ச்சையில் ஒன்றிய அரசின் உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் பின்வாங்கியுள்ளது.  ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் கடந்த 10ம் தேதி கர்நாடகா மற்றும் தமிழ்நாடு அரசு பால் கூட்டுறவு சங்கங்களுக்கு தயிர் பாக்கெட்டுக்களின் மீது தஹி என இந்தியில் எழுத வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தது.  ஆங்கிலத்தில் அச்சிட்டு அதன் கீழ் தஹி என அச்சிட வேண்டும் என்றும் வேண்டுமானால் அடைப்புக்குறிக்குள் பிராந்திய … Read more

புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் மோடி திடீர் ஆய்வு

புதுடெல்லி: புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை பிரதமர் மோடி நேற்று திடீர் ஆய்வு செய்தார். அங்கு அவர் 1 மணி நேரத்திற்கும் மேல் இருந்தார். நாடாளுமன்றத்திற்கு புதிய கட்டிடம் கட்ட கடந்த 2020 டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இந்த பணி ரூ.1000 கோடி மதிப்பீட்டில் நடந்து வருகிறது.  பிரதமர், அமைச்சர்கள், ஒன்றிய செயலாளர்களுக்கு என தனித்தனி வசதிகளுடன் இந்த கட்டிடம் தயாராகி வருகிறது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பணி முடிந்து விடும் என்று … Read more