குடிநீரில் மனித கழிவு கலந்த விவகாரம் விரிவான அறிக்கை விரைவில் அரசுக்கு சமர்ப்பிப்பு: கண்காணிப்பு குழு உறுப்பினர் பேட்டி

புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் முட்டுக்காடு ஊராட்சி வேங்கைவயலில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் கடந்த மாதம் 26ம்தேதி மனிதக்கழிவு கலந்தது தொடர்பாக புகார் வந்தது. இதுகுறித்து வெள்ளனூர் போலீசார், இறையூர் அய்யனார் கோயிலுக்குள் வேங்கைவயல் பகுதி மக்களை செல்ல விடாமல் தடுத்தது, இரட்டைக்குவளை முறை பின்பற்றப்பட்டது குறித்து 4 பேர் மீது வழக்குப்பதிவு செய்தனர். இந்த சம்பவத்தில் இரண்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.இந்நிலையில் நேற்று காலை தமிழ்நாடு அரசின் சமூகநீதி கண்காணிப்பு குழுவை சேர்ந்த உறுப்பினர்கள் சுவாமிநாதன் தேவதாஸ், … Read more

ரஜோரி வழக்கு விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைப்பு: அமித் ஷா அறிவிப்பு

ஜம்மு: ஜம்மு காஷ்மீர் மாநிலம் ரஜோரியில் பயங்கரவாதிகள் தாக்குதல் தொடர்பான விசாரணை என்ஐஏவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூறினார். ரஜோரி மாவட்டத்தில்   தீவிரவாதிகள்  தாக்குதல்களில் 2 குழந்தைகள் உட்பட மொத்தம் 7 பேர் பலியாகினர். தாக்குதல் நடந்து 13 நாட்களுக்கு பிறகு, ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா நேற்று ஒருநாள் பயணமாக ரஜோரியின் டோங்கிரி கிராமத்திற்கு சென்றார். அப்போது செய்தியாளர்களிடம் அமைச்சர் அமித் ஷா கூறியதாவது, “ரஜோரி தாக்குதல் தொடர்பான விசாரணை … Read more

காவல்துறையின் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் 105 ரவுடிகள் கைது

திருச்சி: காவல்துறையின் திருச்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட 9 மாவட்டங்களில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். போலீசார் நடத்திய தேடுதல் நடவடிக்கையில் 105 ரவுடிகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவில் சொந்த ஊர் செல்வதால் சென்னை மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல்

சென்னை: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மக்கள் அதிகளவில் சொந்த ஊர் செல்வதால் சென்னை மதுரவாயலில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. மதுரவாயல், போரூர் உள்ளிட்ட இடங்களில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. சென்னை கோயம்பேட்டில் இருந்து பூவிருந்தவல்லி வரை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில் 85 நபர்களிடம் வெளிப்படை தன்மையுடன் விசாரணை நடைபெற்றது: காவல்துறை தகவல்

புதுக்கோட்டை: புதுக்கோட்டை வேங்கைவையல் கிராமத்தில் நீர் தேக்க தொட்டியில் மனிதக்கழிவு கலக்கப்பட்ட விவகாரத்தில், 85 நபர்களிடம் வாக்கு மூலம் பெற்று வெளிப்படைத் தன்மையுடன் விசாரணை நடைபெற்று வருவதாக மாவட்ட காவல்துறை தகவல் அளித்துள்ளது. இறையூர் வேங்கைவயல் காலனி குடிநீர் மேல்நிலை நீர் தேக்க தொட்டியில் மலம் கலந்திருந்தது சம்பந்தமான வழக்கில் 85 சாட்சிகளை விசாரணை தொடர்பாக புதுக்கோட்டை மாவட்டம் திருக்கோகர்ணம் காவல் வட்டம் வெள்ளனூர் காவல் சரகத்திற்குட்பட்ட வேங்கைவயலில் கடந்த 26.12.22-ம் தேதி மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை … Read more

பள்ளிவாசல்கள் பராமரிப்பு நிதியாக ரூ.10 கோடி நிதி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா நன்றி

சென்னை: பள்ளிவாசல்கள் பராமரிப்பு நிதியாக ரூ.10 கோடி நிதி அறிவித்த தமிழ்நாடு அரசுக்கு ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு அரசுக்கு மனிதநேய மக்கள் கட்சி சார்பாகவும், இஸ்லாமிய சமூகத்தினர் சார்பாகவும் ஜவாஹிருல்லா நன்றி தெரிவித்தார்.   

பொங்கல் வியாபாரம் களைகட்டியது; கடை வீதிகளில் போலீஸ் கண்காணிப்பு: நாளை போகி பண்டிகை

நாகர்கோவில்: தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை மறுதினம் (15ம்தேதி) கொண்டாடப்படுகிறது. நாளை (14ம்தேதி) போகி பண்டிகை ஆகும். குமரி மாவட்டத்திலும் பொங்கல் பண்டிகை கொண்டாட்டங்கள் களை கட்டி உள்ளன. விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சிகள் உள்ளிட்டவை நடத்த ஏற்பாடுகள் செய்துள்ளனர். கிராமப்புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களிலும் பொங்கல் கொண்டாட்டங்களை கட்டி உள்ளன. பொங்கல் பண்டிகைக்கு முதல் நாள் போகி ஆகும். அதன்படி நாளை (14ம்தேதி) போகி பண்டிகை ஆகும். பழையன கழிதலும், புதியன புகுதலும் என்ற அடிப்படையில் … Read more

வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை

புதுக்கோட்டை: வேங்கைவயலில் குடிநீர் நீர்த்தேக்க தொட்டியில் மலம் கலந்த சம்பவத்தில் 85 சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. சம்பவம் தொடர்பாக வெள்ளனூர் காவல் நிலையத்தில் இதுவரை 85 சாட்சிகளிடம் சிறப்பு புலனாய்வு குழு விசாரணை நடத்தியுள்ளது.  

சென்னை தீவுத்திடலில் நடைபெறும் சென்னை சங்கமம் விழாவை சற்று நேரத்தில் தொடங்கி வைக்கிறார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!!

சென்னை: தீவுத்திடலில் நடைபெறும் சென்னை சங்கமம் விழாவை சற்று நேரத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் ஒருங்கிணைப்பில் சென்னை சங்கமம் விழா நடைபெற உள்ளது . தமிழ் வளர்ச்சி மற்றும் கலை பண்பாட்டுத்துறை, சுற்றுலாத்துறை சார்பில் சென்னை சங்கமம் விழா நடைபெற உள்ளது.

வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் போலீசாரின் சமத்துவ பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு: கலெக்டர், டிஐஜி, எஸ்பி பங்கேற்பு

வேலூர்: வேலூர் நேதாஜி ஸ்டேடியத்தில் போலீசாரின் சமத்துவ பொங்கல் விழா போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலகம் சார்பில் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில், வேலூர் மாவட்ட காவல்துறை சார்பில் சமத்துவ பொங்கல் விழா வேலூர் நேதாஜி ஸ்ேடடியத்தில் நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை பெண் போலீசாருக்கு கோலப்போட்டிகள்  நடந்தது. மாலை 4 மணிக்கு 24 காவல் நிலையங்கள் சார்பில் பொங்கல் பானை வைத்து … Read more