பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் நள்ளிரவு 1 மணிக்கு திறப்பு: பக்தர்கள் குவிந்தனர்

திருச்செந்தூர்: பொங்கல் பண்டிகையையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் நள்ளிரவு (15ம் தேதி) 1 மணிக்கு நடை திறக்கப்படுகிறது. இதையொட்டி பக்தர்கள் குவிந்த வண்ணம் உள்ளனர். அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து சுவாமி தரிசனம் செய்து செல்கின்றனர். வருடத்தில் குறிப்பிட்ட சில மாதங்கள் தவிர ஆண்டு முழுவதும் திருவிழா களைகட்டும். இதையொட்டி திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சுவாமி தரிசனம் செய்வதற்காக கடந்த சில … Read more

காரில் இழுத்து செல்லப்பட்ட இளம்பெண் அலட்சியமாக இருந்த 11 போலீசார் சஸ்பெண்ட்

புதுடெல்லி: காரில் இளம்பெண் சடலம் இழுத்துச் செல்லப்பட்டு கொடூரமாக பலியான விவகாரத்தில் 11 போலீசாரை டெல்லி காவல்துறை சஸ்பெண்ட் செய்துள்ளது. புத்தாண்டு தினத்தில் டெல்லியில் 20 வயது இளம்பெண் மீது மோதிய கார், அவரது உடலை சுல்தான்புரியிலிருந்து கஞ்சவாலா பகுதி வரை 12 கி.மீ. தூரத்திற்கு இழுத்துச் சென்றது.   இந்த விபத்து தொடர்பாக காரில் இருந்தவர்கள் உட்பட 7 பேரை போலீசார் கைது செய்து விசாரிக்கின்றனர். இந்நிலையில், விபத்து நடந்த சமயத்தில் சம்பந்தப்பட்ட கார் சென்ற வழித்தடத்தில் … Read more

முகூர்த்தக்கால் நடப்பட்டது நாளை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு

மதுரை: அவனியாபுரம் ஜல்லிக்கட்டு நாளை நடக்க உள்ள நிலையில், ஐகோர்ட் கிளை உத்தரவின்பேரில் 16 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.பொங்கல் விழாவையொட்டி, மதுரை அவனியாபுரத்தில் நாளை ஜல்லிக்கட்டு நடக்க உள்ளது. காலை 8 மணியளவில் துவங்கும் போட்டிக்காக வாடிவாசல் அமைக்கும் பணிக்கான முகூர்த்தக்கால் நடும் விழா நேற்று நடைபெற்றது. மாநகராட்சி மேயர் இந்திராணி  பொன்வசந்த், மதுரை வருவாய் கோட்டாட்சியர் பிர்தெளஸ் பாத்திமா, தாசில்தார்  முத்துப்பாண்டி, மண்டலத் தலைவர் சுவிதா விமல், உதவி ஆணையர் முகமது கலாம்  முஸ்தபா … Read more

சட்டீஸ்கரில் ஐஏஎஸ் அதிகாரி வீட்டில் சோதனை

ராய்ப்பூர்: சட்டீஸ்கரில் நிலக்கரி சுரங்க ஒதுக்கீடு முறைகேடு தொடர்பாக ஐஏஎஸ் அதிகாரி வீடு மற்றும் பல்வேறு இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். ராய்ப்பூர், கோர்பா, துர்க் ஆகியே இடங்களில் நேற்று அதிரடி சோதனை நடத்தப்பட்டது. இதேபோல் ஜார்கண்டின் ராஞ்சி மற்றும் கர்நாடகா மாநிலத்தின் பெங்களூருவிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். நீர்வளத்துறை செயலாளர் அன்பழகனுக்கு சொந்தமான இடங்களில் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். சில அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் மற்றும் நிலக்கரி வியாபாரிகளுக்கு சொந்தமான வீடுகள் மற்றும் அலுவலகங்களில் அமலாக்கத்துறை … Read more

பொள்ளாச்சியில் 8 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா துவக்கம்: ஆகாயத்தில் பறந்த சுற்றுலா பயணிகள் வியப்பு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் 8 நாடுகள் பங்கேற்கும் சர்வதேச பலூன் திருவிழா நேற்று துவங்கியது. ஆகாயத்தில் பறந்த சுற்றுலா பயணிகள் வியப்படைந்தனர். கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே ஆழியார், வால்பாறை, டாப்சிலிப் உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா பகுதிகள் உள்ளதால், அங்கு உள்ளூர் மட்டுமின்றி வெளியூர் சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது. இங்கு தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில், முதல் முறையாக வெப்ப காற்றழுத்த பலூன் திருவிழா நடத்த முடிவு செய்யப்பட்டது. இதற்காக, கோவை ரோடு ஆச்சிப்பட்டியில் உள்ள … Read more

திருப்பதியில் ஓராண்டில் ரூ.1,450 கோடி உண்டியல் காணிக்கை

திருமலை: திருமலை திருப்பதி தேவஸ்தான தலைமை செயல் அதிகாரி தர்மா நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: வைகுண்ட ஏகாதசியையொட்டி  சொர்க்கவாசல் வழியாக 6.6 லட்சம் பக்தர்கள்   தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.39.40 கோடி காணிக்கையாக கிடைத்தது. 2022   ஜனவரி முதல் டிசம்பர் வரை 2.37 கோடி பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர். உண்டியலில் ரூ.1,450.41 கோடி காணிக்கை கிடைத்தது. 11.54 கோடி  லட்டு விற்கப்பட்டது. 4.77 கோடி பக்தர்களுக்கு அன்னப்பிரசாதம் வழங்கப்பட்டது.  இவ்வாறு, அவர் கூறினார்.

அதிமுகவை வெட்ககேடாக நினைக்கிறேன்: பிரேமலதா காட்டம்

கோவை: கோவை கணபதியில் தேமுதிக சார்பில் நடைபெற்ற பொங்கல் விழாவில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் கலந்து கொண்டு பேசியதாவது: நான் கிராமத்தில் இருந்து வந்து தான் தலைவர் மனைவியாக உங்கள் அண்ணியாக நிற்கிறேன். சின்ன கவுண்டர், வானத்தைப்போல படங்களில் கொங்கு மண்டலத்தை காட்டியது கேப்டன். 40 வருடம் மக்களுக்காக வாழ்ந்தவர் கேப்டன். தேமுதிக நேர்மையான கட்சி. நல்லவர் ஆரம்பித்த கட்சி. என்றும் தவறான வழியில் தேமுதிக செல்லாது. அதிமுகவை வெட்ககேடாக நினைக்கிறேன். தமிழ்நாட்டில் எங்கும் பொங்கல் … Read more

ஜன. 30,31ல் வங்கி ஊழியர்கள் ஸ்டிரைக்

கொல்கத்தா: பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வங்கி ஊழியர்கள் தொழிற்சங்க அமைப்பான யுனைடட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன் சார்பில் 2 நாள் வேலைநிறுத்தத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. வாரத்தில் 5 நாட்கள் மட்டுமே பணி நாள், ஊதிய உயர்வு, ஓய்வூதிய முறை புதுப்பிப்பு, தேசிய ஓய்வூதிய முறையை ரத்து செய்தல், ஊதிய உயர்வு தொடர்பான பேச்சுவார்த்தையை உடனே தொடங்குதல் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஜனவரி 30, 31 தேதிகளில் நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக … Read more

வேர்க்கடலை தொண்டையில் சிக்கி ஒன்றரை வயது குழந்தை பலி

உளுந்தூர்பேட்டை: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அருகே எஸ்.மலையனூர் கிராமத்தை சேர்ந்தவர் குமார். இவருடைய ஒன்றரை வயது குழந்தை தீபக் வேர்க்கடலை சாப்பிட்டுள்ளான். இது தொண்டையில் சிக்கிக்கொண்டு மூச்சு திணறல் ஏற்பட்டதால் பெற்றோர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். பின்னர் அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தும் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான். இதுகுறித்து எலவனாசூர் போலீசில் உறவினர் ராமசாமி கொடுத்த புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் வழக்கு பதிந்து விசாரணை செய்து … Read more

5 ஆண்டுகளாக ஆப்சென்ட் 64 மருத்துவர்கள் டிஸ்மிஸ்

பாட்னா: தொடர்ந்து பணிக்கு வராமல் இருந்த 64 அரசு மருத்துவர்கள்   ஒரே நேரத்தில் டிஸ்மிஸ் செய்யப்பட்டனர். பீகார்  அரசு மருத்துவமனை மருத்துவர்கள் பலர் முறையான விடுப்பு எடுக்காமல் மாதக்கணக்கில் பணிக்கு வராமல் உள்ளதாக புகார்கள் வந்தன. இந்நிலையில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில்  மாநில அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்தில் 5 ஆண்டுகளுக்கும் மேலாக பணிக்கு வராத 64  மருத்துவர்களை டிஸ்மிஸ் செய்வது என முடிவு செய்யப்பட்டது.