மீண்டும் பிஸியாகிறார் நித்தி அகர்வால்

மிகப்பெரிய இடத்துக்கு வருவார் என்று கணிக்கப்பட்டு பின்னர் காணாமல் போனவர் நித்தி அகர்வால். அறிமுகமே 'முன்னா மைக்கேல்' என்ற பாலிவுட் படத்தில்தான். அதன்பிறகு தெலுங்கிற்கு வந்த அவர் அங்கு மளமளவென நடித்தார். 'ஈஸ்வரன்' படத்தின் மூலம் தமிழுக்கு வந்தர், 'பூமி' படத்தில் நடித்தார், கடைசியாக 'கலக தலைவன்' படத்தில் நடித்தார். இதற்கு இடையில் ஒரு இளம் தமிழ் நடிகருடன் லிவிங் டு கெதராக வாழ்கிறார். தெலுங்கு தொழில் அதிபர் ஒருவரை திருமணம் செய்து விட்டார் என பல … Read more

'கல்கி'யில் அஸ்வத்தாமாவாக நடிக்கும் அமிதாப்

நாக் அஸ்வின் இயக்கத்தில் பிரபாஸ் ஹீரோவாக நடிக்கும் படம், 'கல்கி 2898 ஏடி'. இதில் கமல்ஹாசன் வில்லனாக நடிக்கிறார். அமிதாப் பச்சன், தீபிகா படுகோன், திஷா பதானி உட்பட பலர் நடிக்கின்றனர். சந்தோஷ் நாராயணன் இசை அமைக்கிறார். வைஜெயந்தி மூவிஸ் தயாரித்து வரும் இந்தப் படம், பான் இந்தியா படமாகவும் இரண்டு பாகங்களாகவும் தயாராகிறது. மகாபாரதத்தை தழுவி உருவாகும் இப்படத்தின் கதை 6000 ஆண்டுகள் நடக்கும் விஷயங்களை கொண்டதாக அமைகிறது. இந்த நிலையில், இப்படத்தில் அமிதாப் பச்சனின் … Read more

விக்ரம் படத்தில் இணைந்த மற்றொரு மலையாள நடிகர்

சித்தா பட இயக்குனர் அருண்குமார் இயக்கத்தில் விக்ரம் தனது 62வது படமான 'வீர தீர சூரன்' வில் நடிக்கவுள்ளார். இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த படத்தில் முதலாவதாக இரண்டாம் பாக கதையை ரெடியாகிறது. இதில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ்(மலையாள நடிகர்), துஷரா விஜயன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். சிபு தமின்ஸ் தயாரிக்க, ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கின்றார். சமீபத்தில் இதன் டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. இந்த நிலையில் இப்படத்தில் மலையாள நடிகர் சித்திக் நடிக்கின்றார் என … Read more

'மார்க் ஆண்டனி' வெற்றியைத் தக்க வைப்பாரா 'ரத்னம்'?

ஹரி இயக்கத்தில் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள 'ரத்னம்' படம் இந்த வாரம் ஏப்ரல் 26ம் தேதி வெளியாக உள்ளது. இந்த வாரம் வெளியாக உள்ள நான்கு படங்களில் ஒரே பெரிய படம் இந்தப் படம்தான். இப்படத்திற்கு முன்பாக விஷால் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மார்க் ஆண்டனி' படம் பெரிய வெற்றிப் படமாக அமைந்தது. 100 கோடி வசூலையும் கடந்தது. அந்தப் படத்தில் விஷால் கதாநாயகன் என்றாலும் வில்லனாக நடித்த எஸ்ஜே சூர்யாவின் நடிப்பும் படத்தின் வெற்றிக்கு … Read more

பிளாஷ்பேக் : ஜானகியை காத்த ராமன்

இந்திய சினிமாவின் மிக முக்கியமான முன்னணி பாடகிகளில் ஒருவர் எஸ்.ஜானகி. வயதுக்கேற்ற குரலில் பாடும் திறன் படைத்தவர். குழந்தைகள் போன்றும் பாடுவார், முதிய பெண் போன்றும் பாடுவார். 1957ம் ஆண்டு முதல் 17 மொழிகளில் 48 ஆயிரம் பாடல்களை பாடி உள்ளார். அவருக்கு இன்று 86வது பிறந்த நாள். ஜானகியின் பெருமை உலகம் அறிந்தது. ஆனால் அந்த ஜானகியை இசை உலகிற்கு தந்து கடைசி வரை அவரை பாதுகாத்து காப்பாற்றியது அவரது கணவர் வி.ராம்பிரசாத் என்கிற ராமு. … Read more

'விக்ரம், லியோ, கூலி' – டைட்டில் டீசர் வீடியோ, எது பெஸ்ட்?

படத்திற்கான தலைப்பு அறிவிப்புகளை ஒரு போஸ்டரில் வெளியிட்டு வேலையை முடித்துவிடுவார்கள். ஆனால், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் 'விக்ரம்' படத் தலைப்பு அறிவிப்புக்கு ஒரு வீடியோவை வெளியிட்டு புது டிரெண்ட்டை உருவாக்கினார். 2020 நவம்பரில் வெளியான 'விக்ரம்' பட தலைப்பு டீசர் கமல்ஹாசனின் நடிப்பாலும், உருவாக்கத்தால் அதிக வரவேற்பைப் பெற்றது. அந்த டீசர் இதுவரையிலும் 40 மில்லியன் பார்வைகளைக் கடந்துள்ளது. அதற்கடுத்து லோகேஷ் இயக்கத்தில் விஜய் நடித்த 'லியோ' படத்தின் தலைப்பு அறிவிப்பு டீசர் கடந்த வருடம் வெளியானது. … Read more

ஜன கன மன 2 எப்போது? – இயக்குனர் தகவல்

கடந்த சில வருடங்களுக்கு முன்பு மலையாளத்தில் பிரித்விராஜ் நடிப்பில் வெளியான படம் ஜன கன மன. போலி என்கவுண்டர் விவகாரத்தை மையப்படுத்தி உருவாக்கப்பட்டு இருந்த இந்த படம் என்கவுண்டரின் பின்னணியில் உள்ள அரசியலை அப்பட்டமாக வெளிப்படுத்தி இருந்தது. கடந்த சில வருடங்களுக்கு முன் ஆந்திராவில் இளம்பெண் ஒருவர் சில கயவர்களால் கொடூரமாக பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டார். மறுநாளே, சஜ்ஜனார் என்கிற போலீஸ் அதிகாரி தலைமையில் குற்றவாளிகள் அனைவரும் என்கவுன்டரில் கொல்லப்பட்ட சம்பவமும் சஜ்ஜனாரை ரியல் ஹீரோ … Read more

ஆவேசம் படத்துக்கு சமந்தா பாராட்டு

மலையாளத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு பஹத் பாசில் நடிப்பில் வெளியான படம் ஆவேசம். காமெடி கேங்ஸ்டர் படமாக வெளியான இந்த படத்தில் தாதாவாக நகைச்சுவை கலந்த தாதா கதாபாத்திரத்தில் மிக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார் பஹத் பாசில். கல்லூரி ராக்கிங்கில் இருந்து தப்பிப்பதற்காக தங்களுக்கு ஆதரவாக ஒரு தாதாவை கண்டுபிடிக்கும் சில மாணவர்கள் அதன்பின் அவரின் அன்புப்பிடியில் சிக்கிக் கொண்டு படும் அவஸ்தைகள் தான் மொத்த படமும். கலகலப்பான இந்த படத்தை இயக்குனர் ஜித்து மாதவன் … Read more

அயோத்தியில் இடம் வாங்கிய அமிதாப்பச்சன்

அயோத்தியில் புதிய ராமர் கோயில் கட்டிய பிறகு இந்தியாவின் மிக முக்கிய நகரங்களில் ஒன்றாக மாறிவிட்டது. வட இந்திய திருத்தலங்களில் இந்து மக்கள் அதிகமாக வந்து வழிபடும் ஒரு கோயிலாக ராமர் கோயில் உள்ளது. அயோத்தியில் பல சினிமா பிரபலங்கள், அரசியல் பிரபலங்கள் இடங்களை வாங்க அதிக ஆர்வம் காட்டி வருவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கின்றன. பாலிவுட்டின் மூத்த நடிகரான அமிதாப்பச்சன் அயோத்தியின், சரயு நதிக்கரையில் 'த சரயு என்கிளேவ்' என்ற இடத்தில் இடம் வாங்கியுள்ளாராம். ராமர் … Read more

சைக்கிளில் சென்று ஓட்டு போட்டது ஏன் : விஷால்

ஹரி இயக்கத்தில் விஷால், பிரியா பவானி சங்கர், சமுத்திரகனி உள்ளிட்டோர் நடித்துள்ள படம் ‛ரத்னம்'. ஏப்., 26ல் திரைக்கு வருகிறது. விஷால் அளித்த பேட்டி : ‛‛இயக்குனர் ஹரியிடம் நான் தான் போய் வாய்ப்பு கேட்டேன். இந்த கதை பிடித்ததால் நடித்தேன். படத்தில் ஒரு சஸ்பென்ஸ் உள்ளது. 15 ஆண்டுகளுக்கு முன் எப்படி இருந்தேனோ அதேமாதிரி 15 கிலோ எடையை குறைத்து ஹரி முன்னாடி வந்து நின்றேன். துப்பறிவாளன் 2வில் நடித்துக் கொண்டே இயக்க போகிறேன். நான் … Read more