பாறை இடுக்கில் சிக்கி தவித்த இளைஞர் பத்திரமாக மீட்பு| Dinamalar

பாலக்காடு: கேரளாவை சேர்ந்த இளைஞர் ஒருவர் பாறை இடுக்கில் சிக்கி தவித்து வந்த நிலையில், அவரை ராணுவ உதவியுடன் பத்திரமாக மீட்டனர். கேரள மாநிலம் பாலக்காடு மலம்புழா மலையில் ஏறிய பாபு என்ற 23 வயது இளைஞர் தனது மூன்று நண்பர்களுடன் குரும்பாச்சி மலைக்கு சென்றுள்ளார். மலையேற்றத்தின் போது நடுவழியில் கால் தவறியதில் பாபு உருண்டு விழுந்து, அதிர்ஷ்டவசமாக பாறை இடுக்கில் இருந்த சிறிய குகையில் சிக்கி கொண்டார். இதில் அவரது கால்களில் சிராய்ப்பு ஏற்பட்டது. அவரை … Read more

ஆஸ்கர் விருது – நாமினேஷன் பட்டியல் இன்று மாலை அறிவிப்பு

உலக அளவில் வழங்கப்படும் திரைப்பட விருதுகளில் முதன்மை விருதாகக் கருதப்படுவது அமெரிக்காவில் வழங்கப்படும் ஆஸ்கர் விருது. இந்த வருடத்திற்கான 94வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா மார்ச் 27ம் தேதி நடைபெற உள்ளது. விருதுகளுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ள படங்கள், நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரது கடைசி கட்ட நாமினேஷன் பட்டியல் இன்று மாலை 6.30 மணிக்கு ஆஸ்கரின் அதிகாரப்பூர்வ டுவிட்டர், பேஸ்புக், யு டியூப் தளங்கள் மூலம் அறிவிக்கப்பட உள்ளது. சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான போட்டியில் இந்தியாவின் … Read more

ஐ.எஸ்., – கொராசன் தலைவர் பற்றி தகவல் தருவோருக்கு ரூ.75 கோடி

வாஷிங்டன்: ஆப்கனில் இயங்கும் ஐ.எஸ்., – கொராசன் பயங்கரவாத அமைப்பின் தலைவர் சனாவுல்லா கபாரி குறித்து ரகசிய தகவல் தருவோருக்கு, 75 கோடி ரூபாய் பரிசு வழங்குவதாக அமெரிக்கா அறிவித்துள்ளது. தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானின் தலைநகர் காபூல். இங்குள்ள சர்வதேச விமான நிலையத்தில், 2021 ஆக., 26ல் ஐ.எஸ்., – கொராசன் பயங்கரவாத அமைப்பு மனித வெடிகுண்டு தாக்குதல் நடத்தியது.இதில், அமெரிக்காவைச் சேர்ந்த 13 பேர் உட்பட, 185 பேர் பலியாகினர். இந்த தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட … Read more

நுாறுநாள் வேலை திட்டத்திற்கு கூடுதல் நிதி

புதுச்சேரி : புதுச்சேரியில் நுாறு நாள் வேலைத் திட்டத்தை சரியாக நடைமுறைப் படுத்த வேண்டும் என விழுப்புரம் எம்.பி., ரவிக்குமார் வலியுறுத்தி உள்ளார்.அவரது அறிக்கை:புதுச்சேரி மாநிலத்தில் ஒரு லட்சத்து 56 ஆயிரம் பேர், நுாறுநாள் வேலை திட்டம் எனப்படும் தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் வேலை கேட்டுப் பதிவு செய்துள்ளனர். அவர்களில், 66 ஆயிரத்து 628 பேர் தொடர்ந்து வேலை செய்து வருகின்றனர்.இவ்வளவு குறைந்த எண்ணிக்கையில் தொழிலாளர்கள் இருப்பதால், அவர்களுக்கு 100 நாட்களுக்கு வேலை … Read more

ஹிட் சீரியலில் ஹீரோவாகும் விஷ்ணுகாந்த்

ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ஹிட் சீரியல்களில் ஒன்றான 'என்றென்றும் புன்னகை' தொடரில் ஹீரோவாக நடித்து வந்த தீபக்குமார் தொடரை விட்டு விலகினார். இதனையடுத்து சித்து கதாபாத்திரத்தில் சீரியல் நடிகர் விஷ்னுகாந்த் நடிக்கவுள்ளார். விஷ்னுகாந்த் ஜீ தமிழ் தொலைக்காட்சியின் 'ஒரு ஊருல ஒரு ராஜகுமாரி', 'கோகுலத்தில் சீதை' ஆகிய தொடர்களில் ஏற்கனவே நடித்து வருகிறார். 'என்றென்றும் புன்னகை' தொடரின் மூலம் விஷ்னுகாந்த் சின்னத்திரையில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. 'என்றென்றும் புன்னகை' தொடர் திங்கள் முதல் சனி … Read more

இந்தியாவிடம் இருந்து 3 லட்சம் டன் அரிசி வாங்க இலங்கை அரசு திட்டம்| Dinamalar

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள் கொழும்பு: மக்களின் தேவையை பூர்த்தி செய்ய இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன் அரிசியை இறக்குமதி செய்ய இலங்கை அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து, இலங்கை வர்த்தக அமைச்சகத்தின் கூடுதல் செயலர் கில்மா தகநாயக்க கூறியதாவது: இலங்கையில் அரிசி விலை கடும் உச்சத்தில் இருக்கிறது. மக்களுக்கு நியாயமான விலையில் அரிசி வழங்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. அதற்காக, இந்தியாவில் இருந்து 3 லட்சம் டன், மியான்மரில் இருந்து ஒரு … Read more

தொடரை வெல்ல இந்தியா ரெடி; இன்று இரண்டாவது சவால்| Dinamalar

ஆமதாபாத்: புதிய கேப்டன் ரோகித் சர்மா தலைமையில் இந்திய அணி அசத்துகிறது. இன்று நடக்கும் இரண்டாவது ஒருநாள் போட்டியில் வென்று, தொடரை கைப்பற்ற காத்திருக்கிறது. இந்தியா, விண்டீஸ் அணிகள் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில்மோதுகின்றன. முதல்சவாலில் இந்தியா சுலபமாக வென்றது. இன்று இரண்டாவது போட்டி(பகலிரவு), உலகின் பெரியஆமதாபாத் மைதானத்தில்நடக்க உள்ளது. இது இந்தியாவின் 1001 வது போட்டி. வருகிறார் ராகுல்: இந்திய அணியின் ‘பேட்டிங்’ வலுவாக உள்ளது. கடந்த போட்டியில் ரோகித் சர்மா(60), இளம் இஷான் … Read more

லதா மங்கேஷ்கரின் பல கோடி சொத்துக்கள் யாருக்கு?

இந்தியத் திரையுலகின் குரலாக கடந்த 75 வருடங்களுக்கும் மேலாக ஒலித்து வந்த பின்னணிப் பாடகி லதா மங்கேஷ்கர் சில தனங்களுக்கு முன்பு காலமானார். திருமணமே செய்து கொள்ளாமல் வாழ்ந்து மறைந்தவர் லதா. இத்தனை வருடங்களாக அவர் சம்பாதித்து சேர்த்த சொத்துக்களின் மதிப்பு 200 கோடி ரூபாய்க்கும் மேல் இருக்கும் என்கிறார்கள். அவர் சொந்தமாக வாங்கிய வீடுகள், நிலங்கள், வாடகைக்கு விடப்பட்டுள்ள இடங்கள், சேர்த்து வைத்துள்ள தங்கம் என அதில் அடங்குமாம். மேலும், அவர் பாடிய பாடல்களுக்காக ஒரு … Read more