இலங்கை அணியுடனான அபார வெற்றி; டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இந்திய அணியின் நிலை என்ன?

துபாய்,  இன்று நடைபெற்ற இந்தியா – இலங்கை  அணிகள் இடையிலான 2-வது டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் மற்றும் 222 ரன்கள் வித்தியாசத்தில் இலங்கை அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றது. இந்த நிலையில் இந்தியா -இலங்கை இடையிலான முதல் டெஸ்ட் போட்டிக்கு பிறகான  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசை பட்டியலை ஐசிசி  வெளியிட்டுள்ளது. அதன்படி 86 சதவீத வெற்றியுடன் ஆஸ்திரேலியா அணி முதல் இடத்தில்  உள்ளது. 75 சதவீத வெற்றியுடன் பாகிஸ்தான் அணி 2-வது இடத்திலும் … Read more

ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட 3 ஆயிரம் அமெரிக்கர்கள் விருப்பம்

நியூயார்க், ரஷியாவின் படையெடுப்பை எதிர்கொள்வதற்காக உக்ரைனின் சர்வதேச பாதுகாப்பு படையில் சேர வெளிநாட்டினருக்கு அதிபர் ஜெலன்ஸ்கி அழைப்பு விடுத்து வருகிறார். அந்த வகையில் அமெரிக்காவை சேர்ந்த 3 ஆயிரத்துக்கும் அதிகமான தன்னார்வலர்கள் ஜெலன்ஸ்கியின் அழைப்பை ஏற்று ரஷிய படைகளுக்கு எதிராக சண்டையிட விருப்பம் தெரிவித்துள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் ஈராக், போஸ்னியா ஆகிய நாடுகளில் போர் முனையில் சண்டையிட்ட அனுபவமுடையவர்கள் என்று கூறப்படுகிறது. அமெரிக்காவை தவிர, ஜார்ஜியா மற்றும் பெலாரஸ் போன்ற நாடுகளைச் சேர்ந்த தன்னார்வலர்களும் உக்ரைனின் சர்வதேச … Read more

இமாசலபிரதேசத்தில் கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரிப்பு

சிம்லா,  இமாசலபிரதேச மாநிலத்தில் சட்டசபை கூட்டத்தொடர் நடந்து வருகிறது. நேற்றைய கூட்டத்தொடரின்போது கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த முதல்-மந்திரி ஜெய் ராம் தாக்கூர், கொரோனா காலத்தில் தற்கொலைகள் அதிகரித்ததாக தெரிவித்தார். இதுபற்றி அவர் கூறுகையில், “கொரோனா தொற்றின்போது இமாசலபிரதேசத்தில் 1,552 தற்கொலை சம்பவங்களும், 144 தற்கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. இந்த சம்பவங்கள் அனைத்தும் மார்ச் 1, 2020 மற்றும் பிப்ரவரி 1, 2022-க்கு இடையிலான காலக்கட்டத்தில் நடந்துள்ளன” என்றார்.

டேவிஸ் கோப்பை டென்னிஸ்: உலக குரூப்-1 சுற்றில் நீடிக்கிறது இந்தியா..!

புதுடெல்லி, டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டியின் உலக குரூப்-1 பிளே-ஆப் சுற்றில் இந்தியா-டென்மார்க் அணிகள் மோதிய ஆட்டம் டெல்லியில் நடந்தது. இதில் முதல் நாளில் நடந்த ஒற்றையர் ஆட்டங்களில் இந்திய வீரர்கள் ராம்குமார், யுகி பாம்ப்ரி வெற்றி பெற்றனர்.  இந்த நிலையில் நேற்று நடந்த இரட்டையர் ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி 6-7 (3-7), 6-4, 7-6 (7-4) என்ற செட் கணக்கில் டென்மார்க்கின் பிரடெரிக் நீல்சன், மைக்கேல் டார்பேகார்ட் இணையை வீழ்த்தியது.  அடுத்து … Read more

உக்ரைன் மீதான போர்: ரஷியாவில் தனது சேவையை நிறுத்துவதாக விசா, மாஸ்டர்கார்டு அதிரடி முடிவு…!!

சான் பிரான்சிஸ்கோ, சோவியத் யூனியனின் அங்கமாக திகழ்ந்த உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து 10 நாட்கள் ஆகி விட்டன. அபார பலம் கொண்ட ரஷியா, உக்ரைன் நாட்டை உருக்குலைய வைத்து வருகிறது. இந்த 10 நாட்களில் அந்த நாட்டின் முக்கிய நகரங்கள் அத்தனையையும் ஏவுகணை வீச்சு, வான்தாக்குதல், பீரங்கி தாக்குதல் என நடத்தி உருக்குலைய வைத்து வருகிறது, ரஷியா. அதே நேரத்தில் உக்ரைனும், ஈடுகொடுத்து போராடி வருகிறது.  இந்நிலையில், “வரவிருக்கும் நாட்களில்” பரிவர்த்தனைகள் துண்டிக்கப்படும் என்று … Read more

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் மனு சுப்ரீம் கோர்ட்டில் நாளை விசாரணை

புதுடெல்லி,  முந்தைய அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் சென்னை, கோவை மாநகராட்சிகளில் பல்வேறு பணிகளுக்கு டெண்டர் வழங்கியதில் முறைகேடு நடந்துள்ளதாக கூறி தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி மற்றும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறைகேடுகள் தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என்றும், முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுக்களில் கோரப்பட்டிருந்தது. இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, லஞ்ச ஒழிப்புத்துறை சூப்பிரண்டு பொன்னி தலைமையில் விசாரணை … Read more

லியோன் டென்னிஸ் தொடரின் இறுதிப் போட்டியில் உக்ரைனின் யாஸ்ட்ரெம்ஸ்கா..!

பிரான்ஸ், உக்ரைன் நேட்டோ அமைப்பில் சேருவதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் 24-ந்தேதி அந்த நாட்டின் மீது ரஷியா போர் தொடுத்தது. உக்ரைன் மீதான ரஷியாவின் உக்கிரமான போர் நேற்று 10-வது நாளை எட்டியது.  இந்நிலையில் உக்ரைனின் துறைமுக நகரமான ஒடெசாவில் நடந்த தாக்குதலின் போது உக்ரேனிய டென்னிஸ் வீராங்கனையான தயானா யாஸ்ட்ரெம்ஸ்கா மற்றும் அவரது குடும்பத்தினரும் ரஷிய வெடிகுண்டு தாக்குதலில் இருந்து தப்ப நிலத்தடி கார் பார்க்கிங்கில் இரண்டு இரவுகள் தங்கியிருந்தனர். அதன் பின் அவரது … Read more

உக்ரைன் போர்: 3-ம் கட்ட பேச்சுவார்த்தை எப்போது? – ரஷியா பதில்

மாஸ்கோ, நேட்டோ அமைப்பில் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா போர் தொடுத்து வருகிறது. ரஷிய படைகள் பல முனைகளில் இருந்தும் உக்ரைன் மீது உக்கிரமான தாக்குதல்களை நடத்தி வரும் அதே வேளையில், போரை முடிவுக்கு கொண்டு வருவதற்கான சமரச பேச்சுவார்த்தைகளும் ஒருபுறம் நடந்து வருகிறது. கடந்த மாதம் 28-ந்தேதி உக்ரைன் மற்றும் ரஷிய அதிகாரிகள் இடையே பெலராஸ் நாட்டில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. பல மணி நேரம் நீடித்த பேச்சுவார்த்தை எந்தவித உடன்பாடும் எட்டப்படாமல் … Read more

“ஆபரேஷன் கங்கா” – சுலோவேகியாவில் இருந்து 154 இந்தியர்களுடன் டெல்லி வந்த சிறப்பு விமானம்..!!

புதுடெல்லி, ரஷிய படையெடுப்பின் கீழ் உள்ள உக்ரைன் நாட்டில் பல்லாயிரக்கணக்கான இந்திய மாணவர்கள் சிக்கி உள்ளனர். அந்த நாட்டின் வான்பரப்பு மூடப்பட்டு விட்டதால், அங்குள்ள இந்திய மாணவர்களை அண்டை நாடுகளான போலந்து, ருமேனியா, பெலாரஸ் போன்றவற்றின் வழியாக மீட்பதற்கு மத்திய அரசு ‘ஆபரேஷன் கங்கா’ திட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஆயிரக்கணக்கான மாணவர்கள் மீட்கப்பட்டு விட்டாலும், இன்னும் அங்கு ஏராளமானவர்கள் இருக்கிறார்கள். மத்திய அரசின் அயராத நடவடிக்கைகள் காரணமாக உக்ரைனின் அண்டை நாடுகளான ஹங்கேரி, ருமேனியா போன்ற நாடுகளில் … Read more

ரஞ்சி கோப்பை: தமிழகத்துக்கு எதிரான ஆட்டத்தில் ஜார்கண்ட் அணிக்கு 212 ரன்கள் இலக்கு..!

கவுகாத்தி,  ரஞ்சி கோப்பை கிரிக்கெட் போட்டியின் 3-வது சுற்றில் தமிழ்நாடு-ஜார்கண்ட் (எச் பிரிவு) அணிகள் மோதும் ஆட்டம் கவுகாத்தியில் நடந்து வருகிறது. இதில் முதல் இன்னிங்சில் தமிழ்நாடு 285 ரன்னும், ஜார்கண்ட் 226 ரன்னும் எடுத்தன.  59 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை ஆடிய தமிழக அணி 2-வது நாள் முடிவில் 2 விக்கெட்டுக்கு 14 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 3-வது நாள் ஆட்டம் நடந்தது. தொடர்ந்து ஆடிய தமிழக அணி 2-வது இன்னிங்சில் 54.2 … Read more