கனடா பிரதமரை ஹிட்லருடன் ஒப்பிட்ட எலான் மஸ்க்..!

ஒட்டாவா, கனடாவில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் லாரி டிரைவர்கள் கட்டாயம் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் மற்றும் அமெரிக்காவில் இருந்து கனடா திரும்பும் லாரி டிரைவர்களும் கட்டாயம் தடுப்பூசி செலுத்தி இருக்க வேண்டும் என கனடா அரசு அறிவித்தது. இதை எதிர்த்து கனடாவில் தலைநகர் ஒட்டாவாவில் லாரி டிரைவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.  போராட்டத்தின் ஒரு பகுதியாக கனடா – அமெரிக்காவை இணைக்கும் முக்கிய பாலமான தி அம்பாசிடர் பாலத்தை போராட்டக்காரர்கள் முடக்கினர். அதன்பின்னர், அந்த மேம்பாலம் மூடப்பட்டது. இதனால் … Read more

இந்தியாவில் கொரோனாவால் 37 லட்சம் பேர் இறப்பா..? – மத்திய அரசு விளக்கம்

புதுடெல்லி,  இந்தியாவில் கடந்த நவம்பர் வரையில் 37 லட்சம் பேர் வரையில் கொரோனாவால் இறந்திருக்கக்கூடும் என்ற ஆய்வுத்தகவல் அடிப்படையிலான ஊடக அறிக்கைகளை மத்திய அரசு மறுத்துள்ளது. இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் வரையில் கொரோனா தொற்றால் 4.6 லட்சம்பேர் இறந்ததாக அரசு புள்ளி விவரங்கள் கூறுகின்றன. ஆனால் 32 லட்சம் முதல் 37 லட்சம் வரையிலானோர் கொரோனாவால் இறந்திருக்கலாம் என்ற ஆய்வுக்கட்டுரை ஒன்றின் அடிப்படையில் சில ஊடகங்களில் அறிக்கைகள் வெளியாகி உள்ளன. இந்த தகவல்களை மறுக்கும் விதத்தில் … Read more

புரோ கபடி லீக்: பாட்னா அணியை வீழ்த்தியது டெல்லி..!

பெங்களூரு,  8-வது புரோ கபடி லீக் போட்டிகள் பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்று இரவு 9.30 மணிக்கு நடைபெற்ற 3-வது ஆட்டத்தில் தபாங் டெல்லி மற்றும் பாட்னா பைரட்ஸ் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் தபாங் டெல்லி அணி 26-23 என்ற புள்ளி கணக்கில் பாட்டா பைரட்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. இது டெல்லி அணியின் 11 வது வெற்றியாகும். புள்ளிகள் பட்டியலில் பாட்னா பைரட்ஸ் 81 புள்ளிகளுடன் முதலிடத்திலும் தபாங் டெல்லி … Read more

தந்தையின் பிறந்தநாள் விழா: மக்களை உறையும் குளிரில் நிற்க வைத்து தனக்கு மட்டும் ரகசிய ஹூட்டர்கள் வைத்துக் கொண்ட கிம் ஜாங் உன்?

சியோங், வடகொரியாவின் அதிபரான கிம் ஜாங் உன்னின் தந்தை கிம் ஜாங் 2-வின் பிறந்த தினம் (பிப்ரவரி 16) ஆண்டுதோறும் விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் கிம் ஜாங் 2 பிறந்த தினத்தை முன்னிட்டு கடந்த செவ்வாய்கிழமை (பிப்ரவரி 15) அன்று சமிஜியோன் நகரில் சிறப்பு கூட்டம் நடந்தது. கொரோனா பெருந்தொற்றின் காரணமாக கடந்த ஜூலை 2019-க்குப் பிறகு வடகொரியாவில் நடந்த முதல் தேசிய கூட்டம் இதுவாகும். தந்தைக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் சம்ஜியோன் நகரம் … Read more

ராஜஸ்தானில் லேசான நிலநடுக்கம்…!

ஜெய்ப்பூர், ராஜஸ்தான் மாநிலத்தில் இன்று காலை 8.01 மணியளவில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது. அம்மாநிலத்தின் ஜெய்ப்பூரில் இருந்து வடமேற்கே 92 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  இது ரிக்டர் அளவில் 3.8 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கத்தால் பொருட் சேதங்கள், உயிரிழப்பு போன்ற எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.  

ஆசிய பேட்மிண்டன் போட்டி: இந்திய அணிக்கு முதல் வெற்றி

ஷா ஆலம், ஆசிய அணிகள் பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி மலேசியாவில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் (ஏ பிரிவு) இந்திய அணி, ஹாங்காங்கை எதிர்கொண்டது. விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் இந்தியா 3-2 என்ற கணக்கில் ஹாங்காங்கை வீழ்த்தியது.  ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர்கள் லக்‌ஷயா சென், மிதுன் மஞ்சுநாத் ஆகியோரும், இரட்டையர் பிரிவில் இந்தியாவின் ஹரிகரன் அம்சகருணன்-ரூபன் ரத்தினசபாபதி குமார் ஜோடியும் வெற்றி கண்டனர். ஒற்றையர் பிரிவில் கிரண் … Read more

போர் தொடுக்காமல் இருந்தால் அடுத்த வாரம் ரஷியாவுடன் பேச்சுவார்த்தை – அமெரிக்கா தகவல்

வாஷிங்டன், உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வருகிறது.  அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை சேர்ப்பதற்கும் எதிர்ப்பு தெரிவிக்கும் வகையிலேயே ரஷியா இந்த நடவடிக்கையை மேற்கொண்டதாக தகவல் வெளியானது. ரஷியா படையெடுக்கும்பட்சத்தில் உக்ரைனுக்கு ஆதரவு அளிப்போம் என அமெரிக்கா, நேட்டோ படைகள் தெரிவித்தன. மேலும், உக்ரைனுக்கு … Read more

தானே- திவா இடையே புதிதாக 2 ரெயில் பாதைகள் – பிரதமர் மோடி இன்று திறந்து வைக்கிறார்

மும்பை, மத்திய ரெயில்வே வழித்தடத்தில் கல்யாண் முக்கியமான சந்திப்பு ரெயில் நிலையமாக உள்ளது. இதில் கல்யாண் – சி.எஸ்.எம்.டி. இடையே 4 ரெயில் பாதைகள் உள்ளன. இதில் 2 பாதையில் ஸ்லோ மின்சார ரெயில்கள் இயக்கப்படுகின்றன. மற்ற 2 பாதையில் விரைவு மின்சார ரெயில்களுடன், எக்ஸ்பிரஸ் ரெயில்களும் இயக்கப்படுகின்றன.  பெரும்பாலான நேரங்களில் எக்ஸ்பிரஸ் ரெயில், நீண்ட தூர ரெயில்களால் மின்சார ரெயில்களை தாமதமாக இயக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இதை தடுக்கும் வகையில் தானே – … Read more

வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான தொடரை கைப்பற்றும் ஆவலில் இந்தியா

20 ஓவர் கிரிக்கெட் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வரும் வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 3 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. தொடக்க ஆட்டத்தில் இந்தியா 6 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இந்த நிலையில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான 2-வது 20 ஓவர் போட்டி கொல்கத்தா ஈடன்கார்டனில் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. தொடக்க ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் நிர்ணயித்த 158 … Read more

உக்ரைன் மீது குண்டு வீச்சு தாக்குதல் – தொடங்குகிறதா 3-ம் உலகப்போர்?

கிவ், ரஷியாவுக்கும் உக்ரைனுக்கும் இடையே பல ஆண்டுகளாக எல்லைப்பிரச்சினை உள்ளது. உக்ரைனின் கிரிமியா தீபகற்பத்தை 2014-ம் ஆண்டு ரஷியா கைப்பற்றியது. இதனை தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையான மோதல் அதிகரித்து வருகிறது.  உக்ரைன் எல்லையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் ரஷியா தனது படைகளை குவித்தது. 1 லட்சத்திற்கும் அதிகமான வீரர்களை உக்ரைன் எல்லையில் ரஷியா குவித்தது. இதனால், உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கலாம் என்ற அச்சம் நிலவி வந்தது. அமெரிக்கா தலைமையிலான நேட்டோ அமைப்பில் உக்ரைனை … Read more