இலங்கையில் மீண்டும் அவசரநிலை அமல்..!!

கொழும்பு, இலங்கையில் பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணாத ஆட்சியாளர்களுக்கு எதிராக பொதுமக்கள் கிளர்ச்சி செய்து வருகின்றனர். இதனால் அதிபர் கோத்தபய ராஜபக்சே சமீபத்தில் பதவி விலகினார். இதனால் பிரதமர் ரணில் விக்ரமசிங்கே, இடைக்கால அதிபராக பதவியேற்று உள்ளார். புதிய அதிபருக்கான தேர்தல் 20-ந்தேதி நடக்கிறது. கோத்தபய ராஜபக்சே பதவி விலகினாலும், எதிர்ப்பை கைவிடாத போராட்டக்காரர்கள் இடைக்கால அதிபர் ரணில் விக்ரமசிங்கேவுக்கு எதிராகவும் போராட்டத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். நாட்டின் ஒட்டுமொத்த அரசு அமைப்பையும் மாற்றும் வரை தங்கள் போராட்டம் … Read more

பாக்கெட் உணவு பொருட்களுக்கு இன்று முதல் ஜி.எஸ்.டி. வரி

புதுடெல்லி, மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் கடந்த மாதம் நடந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில் சில பொருட்கள் மற்றும் சேவைகளுக்கு ஜி.எஸ்.டி. விதிக்க முடிவு செய்யப்பட்டது. மேலும் சில பொருட்கள் மீதான ஜி.எஸ்.டி. விகிதமும் மாற்றியமைக்கப்பட்டது. இந்த புதிய வரி விதிப்பு நடவடிக்கைகள் அனைத்தும் இன்று (திங்கட்கிழமை) முதல் அமலுக்கு வருகின்றன. பாக்கெட் உணவுகள் இதில் முக்கியமாக பாக்கெட்டில் அடைக்கப்பட்ட மற்றும் லேபிள் ஒட்டி விற்கப்படும் இறைச்சி (உறைந்தது தவிர), மீன், பனீர், தேன், … Read more

பாபர் அசாம் சதம்: பாகிஸ்தான் அணி முதல் இன்னிங்சில் 218 ரன்னுக்கு ஆல் அவுட்

கல்லே, பாகிஸ்தான், இலங்கை அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இலங்கை அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அதன்படி, முதலில் ஆடிய இலங்கை அணி 222 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. அரை சதமடித்த சண்டிமால் 76 ரன்னில் அவுட்டானார். தீக்ஷனா 38 ரன்னும், பெர்னாண்டோ 35 ரன்னும் எடுத்தனர். பாகிஸ்தான் சார்பில் ஷஹீன் அப்ரிடி 4 விக்கெட்டும், ஹசன் அலி, யாசீர் ஷா ஆகியோர் தலா 2 விக்கெட் வீழ்த்தினர். … Read more

அமெரிக்காவில் வணிக வளாகத்தில் துப்பாக்கி சூடு: 4 பேர் உயிரிழப்பு; 2 பேர் காயம்

இண்டியானேபோலிஸ், அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் கிரீன்வுட் பகுதியில் உள்ள வணிக வளாகத்தில் உணவு விடுதிகள் அமைந்த பகுதியில் துப்பாக்கியுடன் வந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கி சூடு நடத்தி உள்ளார். இந்த சம்பவத்தில் 3 பேர் உயிரிழந்து உள்ளனர். 2 பேர் காயமடைந்து உள்ளனர். இதனை தொடர்ந்து, சத்தம் கேட்டு அந்த பகுதிக்கு வந்த மற்றொரு நபர், சம்பவம் பற்றி அறிந்தவுடன் தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மர்ம நபரை நோக்கி சுட்டார். … Read more

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடக்கம்

புதுடெல்லி, ‌ நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி விவாதிப்பதற்கு மத்திய அரசு சார்பில் டெல்லியில் நேற்று அனைத்துக்கட்சி கூட்டம் நடந்தது. பிரதமர் மோடி, அனைத்துக்கட்சி கூட்டத்தில் கலந்துகொள்ளவில்லை. மத்திய அரசின் சார்பில், மக்களவை பா.ஜ.க. துணைத்தலைவரும், ராணுவ மந்திரியுமான ராஜ்நாத் சிங், மாநிலங்களவை பா.ஜ.க. தலைவரும், மத்திய தொழில், வர்த்தக மந்திரியுமான பியூஷ் கோயல், நாடாளுமன்ற விவகாரங்கள் துறை மந்திரி பிரகலாத் ஜோஷி ஆகியோர் பங்கேற்றனர். அனைத்துக் கட்சி தலைவர்களான மல்லிகார்ஜூன கார்கே, … Read more

திருச்சி மண்டல அளவிலான கூடைப்பந்து போட்டி: தஞ்சாவூர், மயிலாடுதுறை அணிகள் வெற்றி

பெரம்பலூர் கூடைப்பந்து போட்டி தமிழ்நாடு கூடைப்பந்து கழகம் சார்பில் திருச்சி மண்டல அளவிலான 16-வயதுக்குட்பட்ட பள்ளி மாணவ-மாணவிகளுக்கான கூடைப்பந்து போட்டிகள் பெரம்பலூர் வெங்கடேசபுரத்தில் உள்ள கோல்டன்கேட்ஸ் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கடந்த 14-ந்தேதி தொடங்கி நேற்று வரை நடைபெற்றது. இதில் திருச்சி, கரூர், புதுக்கோட்டை, பெரம்பலூர், அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர் நாகப்பட்டினம், மயிலாடுதுறை மற்றும் திண்டுக்கல் ஆகிய 10 வருவாய் மாவட்டங்களில் இருந்து 240 மாணவ-மாணவிகள் பங்கேற்றனர். மாணவர்களுக்கு தனியாகவும், மாணவிகளுக்கு தனியாகவும் போட்டிகள் நடந்தன. தஞ்சாவூர், … Read more

சீனாவில் கடும் வெப்பம் அலை எச்சரிக்கை; 90 கோடி பேர் பாதிக்கப்பட வாய்ப்பு

பீஜிங், சீனாவில் கொரோனா பெருந்தொற்றால் அந்நாட்டின் பல பகுதிகள் சமீபத்தில் பெரும் பாதிப்புகளை சந்தித்தன. இந்நிலையில், சீனா முழுவதும் ஜூன் 13ந்தேதியில் இருந்து கடுமையான வெப்ப அலைகள் பாதிப்புகளை ஏற்படுத்த தொடங்கின. இந்த வெப்ப அலைகள் தொடர்ந்து, ஆகஸ்டு மாதம் 2வது வாரம் வரை நீடித்திருக்கும் என்று குளோபல் டைம்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. 2022ம் ஆண்டுக்கான வெப்ப அலை முன்பே வந்து விட்டது என அந்நாட்டு வானிலை ஆய்வு மையத்துடன் தொடர்புடைய தேசிய வானிலை … Read more

ஒடிசாவில் பெய்த பலத்த கனமழையால் நிலச்சரிவு

ஒடிசா, கஜபதி ஒடிசாவின் கஜபதி மாவட்டத்தில் நேற்று பெய்த கனமழையால் கும்மா தொகுதியின் மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த நிலச்சரிவின் காரணமாக இதுவரை உயிர்ச்சேதம் எதுவும் ஏற்படவில்லை. கும்மா தொகுதி மேம்பாட்டு அதிகாரி பாஸ்கர் சந்திர சாஹு கூறுகையில், “கனமழை காரணமாக கும்மா தொகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. மலைகளில் இருந்து வந்த நீரால் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. நிலச்சரிவால் ஏற்பட்ட பாதிப்பை ஆராய்ந்து வருகிறாம்” என்று அவர் கூறினார். தினத்தந்தி Related Tags : ஒடிசா … Read more

பெண்கள் டி20 கிரிக்கெட்: அயர்லாந்து அணியை 9 விக்கெட் வித்தியாசத்தில் வீழத்தியது ஆஸ்திரேலியா

பிரேடி, அயர்லாந்து, பாகிஸ்தான், ஆஸ்திரேலிய அணிகள் மோதும் முத்தரப்பு டி20 போட்டியானது அயர்லாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற இரண்டாவது போட்டியில் அயர்லாந்து- ஆஸ்திரேலிய அணிகள் மோதின. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வுசெய்தது. அதன்படி அயர்லாந்து அணி களமிறங்கியது. ஆஸ்திரேலிய அணியின் துல்லிய பந்துவீச்சை சமாளிக்கமுடியாமல் தவித்த அயர்லாந்து அணி 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 99 ரன்கள் எடுத்தது. அணியில் அதிகபட்சமாக ரெபேக்கா ஸ்டோகல் 22 ரன்கள் எடுத்தார். … Read more

பாகிஸ்தானில் கராச்சியில் கனமழை; மின்சாரம் தாக்கி ஒருவர் உயிரிழப்பு

கராச்சி, பாகிஸ்தான் நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால், பல நகரங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. இந்நிலையில், சிந்த் மற்றும் பலூசிஸ்தான் மாகாணத்தின் பல்வேறு மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யும் என்றும் அதனால், நகரங்களில் வெள்ளம் ஏற்படும் என்றும் அந்நாட்டு வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. அடுத்த 2 நாட்களுக்கு மழை இருக்கும் என கடந்த சனிக்கிழமை எச்சரிக்கை விடுத்து இருந்தது என டான் செய்தி நிறுவனம் தெரிவித்து உள்ளது. இதனை … Read more