வீட்டில் பதுக்கி வைத்த ரூ.1.72 லட்சம் மதுபானம் சிக்கியது

யாதகிரி: கர்நாடக சட்டசபை தேர்தலையொட்டி நேற்று மாலை 5 மணி முதல் நாளை மறுநாள் (11-ந்தேதி) அதிகாைல 6 மணி வரை மதுபானம் விற்பனை செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது. அதுபோல் ஓட்டு எண்ணிக்கையை முன்னிட்டு 13-ந்தேதி அதிகாலை 6 மணி முதல் 14-ந்தேதி அதிகாலை 6 மணி வரை 24 மணி நேரத்திற்கும் மதுபானம் விற்பனை செய்யக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. இதனால் பலரும் மதுபானங்களை கூடுதல் விலைக்கு விற்கும் நோக்கி பதுக்கி வைத்திருப்பதாக சொல்லப்படுகிறது. இந்த … Read more

ராணா, ரசல் அதிரடி: கடைசி பந்தில் கொல்கத்தா அணி திரில் வெற்றி..!!

கொல்கத்தா, நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதின. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் ஆனார். பின்னர் களமிறங்கிய … Read more

அமெரிக்காவில் பயங்கரம்: துப்பாக்கிச்சூட்டில் தெலுங்கானா நீதிபதியின் மகள் உயிரிழப்பு

ஐதராபாத், டெக்சாஸ் மாகாணத்தின் டல்லாஸ் நகரின் வடக்கே 20 மைல் தொலைவில் உள்ள அலேன் நகரத்தில் 120-க்கும் மேற்பட்ட கடைகளுடன் வணிக வளாகம் அமைந்துள்ளது. விடுமுறை நாளான நேற்று, பொருள்களை வாங்க ஏராளமான மக்கள் அங்கு குவிந்தனர். இந்தநிலையில் வணிக வளாகத்துக்கு மாலை 3.30 மணியளவில் காரில் வந்த மர்ம நபர், கடைகளின் வெளியே நடைபாதையில் சென்றுகொண்டிருந்த பொதுமக்களை நோக்கி துப்பாக்கியால் சரமாறியாக சுடத் தொடங்கினார். துப்பாக்கியால் சுடும் சப்தம் கேட்டதும், அதே வளாகத்துக்கு மற்றொரு பாதுகாப்பு … Read more

ஜனதா தளம்(எஸ்) மீதான நம்பிக்கையை மீண்டும் மக்கள் நிரூபிப்பார்கள்; குமாரசாமி பேச்சு

பெங்களூரு: தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூருவில் நேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் மூத்த தலைவரும், முன்னாள் முதல்-மந்திரியுமான குமாரசாமி பிரசாரம் மேற்கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:- முஸ்லிம்களை காங்கிரஸ் வாக்கு வங்கியாக மட்டுமே பயன்படுத்துகிறது. காங்கிரஸ் தீவிரமாக இந்து தலைவர்களை தங்கள் கட்சிக்கு வரவேற்று ஜனதா தளம்(எஸ்) கட்சியை குறை சொல்கிறது. எங்கள் கட்சி மீது குற்றம்சாட்டுகிறது. பா.ஜனதாவுடன் ஜனதா தளம்(எஸ்) கட்சிக்கு இருக்கும் நல்லுறவை காங்கிரஸ் கடுமையாக விமர்சிக்கிறது. காங்கிரஸ் மற்றும் … Read more

கொல்கத்தாவுக்கு எதிரான ஆட்டத்தில் பஞ்சாப் 179 ரன்கள் குவிப்பு…!

கொல்கத்தா, நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்று வரும் 53வது லீக் ஆட்டத்தில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் – பஞ்சாப் கிங்ஸ் மோதுகின்றன. இப்போட்டியில் டாஸ் வென்ற பஞ்சாப் முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. இதையடுத்து, பஞ்சாப் தொடக்க வீரர்களாக கேப்டன் ஷிகர் தவான், பிரப்சிம்ரன்சிங் களமிறங்கினர். 8 பந்துகளை சந்தித்து 12 ரன்கள் எடுத்த பிரப்சிம்ரன்சிங் கேட்ச் மூலம் அவுட் ஆனார். அடுத்துவந்த பனகா ரன் எதுவும் எடுக்காமல் (0) கேட்ச் முலம் அவுட் … Read more

காங்கோவில் கனமழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 400-ஐ கடந்தது

கலிஹி, மத்திய ஆப்பிரிக்க நாடான காங்கோ குடியரசின் பல்வேறு மாகாணங்களில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. கனமழை காரணமாக பல ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், பல இடங்களில் நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அந்நாட்டில் பெய்து வரும் கனமழையால் ஏற்பட வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 401 ஆக அதிகரித்துள்ளது. மேலும், படுகாயமடைந்தோர் எண்ணிக்கை 200-ஐ கடந்துள்ளது. அதேவேளை, வெள்ளம், நிலச்சரிவில் சிக்கியவர்களை மீட்க தேசிய பேரிடம் மீட்புக்குழுவினர், ராணுவம் களமிறக்கப்பட்டு மீட்பு … Read more

2 தொகுதிகளில் போட்டியிடுவது குதூகலமாகவும், ஆதங்கமாகவும் இருக்கிறது மந்திரி சோமண்ணா பேட்டி

மைசூரு- 2 தொகுதிகளில் போட்டியிடுவது குதூகலமாகவும், ஆதங்கமாகவும் இருக்கிறது என்று மந்திரி சோமண்ணா கூறினார். சட்டசபை தேர்தல் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையிலான மந்திரிசபையில் வீட்டு வசதி துறை மந்திரியாக இருந்து வருபவர் சோமண்ணா. நடைபெற இருக்கும் சட்டசபை தேர்தலில் இவர் பா.ஜனதா சார்பில் வருணா தொகுதியிலும், சாம்ராஜ்நகர் தொகுதியிலும் போட்டியிடுகிறார். இதில் அவர் வருணா தொகுதியில் முன்னாள் முதல்-மந்திரியும், தற்போதைய எதிர்க்கட்சி தலைவருமான சித்தராமையாவை எதிர்த்து களம் காண்கிறார். நேற்று அவர் வருணா தொகுதியில் பிரசாரம் … Read more

ஐ.பி.ஏ. ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி; இந்திய வீரர் ஹுஸாமுதீன் கால்இறுதிக்கு முன்னேற்றம்

தாஷ்கண்ட், உஸ்பெகிஸ்தானில் ஐ.பி.ஏ. ஆண்கள் குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் 51 கிலோ எடைப்பிரிவு ஆட்டத்தில் இந்திய வீரர் தீபக், கஜகஸ்தானைச் சேர்ந்த பிபாசினோவ் உடன் மோதினார். டோக்கியோ ஒலிம்பிக்கில் வெண்கலம் வென்றுள்ள பிபாசினோவ், 2021 உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றவர் ஆவார். தொடக்கத்தில் சற்று தடுமாறிய தீபக், பின்னர் ஆட்டத்தை தன்வசப்படுத்தினார். இந்த ஆட்டத்தில் 5-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று கால்இறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தீபக் முன்னேறியுள்ளார். அதே சமயம் மற்ற … Read more

இங்கிலாந்து கவுன்சிலர் தேர்தலில் வெற்றி பெற்ற முன்னாள் அதிமுக எம்.எல்.ஏவின் மகன்

லண்டன், திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த வெற்றியழகன் என்பவர் இங்கிலாந்தில் நடைபெற்ற உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட்டு கவுன்சிலராக வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளார். குடவாசல் அருகே பெரும்பண்ணையூர் கிராமத்தை சேர்ந்தவர் பாப்பா சுப்ரமணியன். அவர் எம்.ஜி.ஆர் முதல்-அமைச்சராக இருந்த போது குத்தாலம் தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். அவரது மூத்த மகன் வெற்றியழகன் என்பவர் பொறியியல் பட்டதாரி ஆவார். லண்டனில் பணிபுரிந்து வரும் அவர் கடந்த 15 வருடங்களாக அங்கு குடும்பத்துடன் வசித்து வருகிறார். இங்கிலாந்து குடியுரிமை பெற்ற … Read more

பா.ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் அசாம் முதல்-மந்திரி பேச்சு

மங்களூரு- சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கட்சி 150 இடங்களுக்கு மேல் வெற்றி பெறும் என அசாம் மாநில முதல்-மந்திரி கூறினார். ஆட்சியை பிடிக்க தீவிரம் கர்நாடக சட்டசபை தேர்தலுக்கு இன்னும் 2 நாட்களே உள்ளன. இதையொட்டி பா.ஜனதா வேட்பாளர்களை ஆதரித்து பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா, மத்திய மந்திரிகள் ராஜ்நாத்சிங், நிர்மலா சீதாராமன், ஸ்மிருதி இரானி, மற்றும் உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உள்பட தலைவர்களும், காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து அகில இந்திய காங்கிரஸ் தலைவர் … Read more