முதல்முறையாக இந்திய தூதரகம் சென்ற கூகுள் சுந்தர் பிச்சை.. என்ன காரணம் தெரியுமா?

முதன்முறையாக, கூகுள் சிஇஓ சுந்தர் பிச்சை இந்திய தூதரகத்திற்கு வருகை தந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த சுந்தர் பிச்சை கடந்த பல ஆண்டுகளாக கூகுள் நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் நிலையில் முதல்முறையாக அமெரிக்காவில் உள்ள இந்திய தூதரகத்திற்கு சென்றுள்ளார். இதுகுறித்து சுந்தர் பிச்சை தனது ட்விட்டரில் பதிவு செய்துள்ள நிலையில் அந்த ட்விட் தற்போது வைரலாகி வருகிறது. கூகுள் பே, போன்பே-க்கு செக்.. வாய்ப்பை தட்டி செல்லும் ஸ்விக்கி, சோமேட்டோ..! கூகுள் சி.இ.ஓ சுந்தர் பிச்சை … Read more

டிஷ் டிவி தலைவர் ஜவஹர்லால் கோயல் திடீர் ராஜினாமா.. இனி என்ன ஆகும் நிறுவனம்?

ஒளிபரப்பு செயற்கைக்கோள் சேவை வழங்குநரான டிஷ் டிவியின் தலைவரான ஜவஹர்லால் கோயல் அந்நிறுவனத்தின் குழுவில் இருந்து விலகினார். ஜவஹரின் பதவி விலகல் யெஸ் பேங்க் வாடிக்கையாளர்களுக்கு கிடைத்த வெற்றி என கூறப்படுகிறது. மேலும் ஜவஹர் லால் கோயல் விலகிய பிறகு அந்த இடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கும் திட்டமில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மக்களே உஷார்.. டிவி, பிரிட்ஜ், ஸ்மார்ட்போன் எதையும் வாங்காதீங்க..! டிஷ் டிவி இயக்குனர் டிஷ் டிவி நிறுவனத்தின் இயக்குநர் ஜவஹர் லால் கோயல் நேற்று … Read more

ரூ.20,000 கோடி அரச குடும்பத்து சொத்து.. 30 வருட வழக்கு.. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு என்ன?

அரச குடும்பத்தை சொத்தான 20 ஆயிரம் கோடி மதிப்புள்ள சொத்தை பெறுவதற்காக கடந்த 30 ஆண்டுகளாக அரச குடும்பத்தின் வாரிசுகள் சட்ட போராட்டம் நடத்தி உள்ளனர். தற்போது இந்த வழக்கின் தீர்ப்பு வெளியானதை அடுத்து இது குறித்த செய்திகள் ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வழக்கின் முழு விவரங்கள் குறித்தும் இந்த வழக்கின் தீர்ப்பு குறித்து தற்போது பார்ப்போம். மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ பழிவாங்கிய Metaverse கனவு.. 9 மாதத்தில் மொத்த கதையும் மாறியது..! ரூ.20 ஆயிரம் … Read more

இந்தியாவில் $300 பில்லியன் மதிப்பில் எலக்ட்ரானிக்ஸ் உற்பத்தி.. அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தகவல்!

இந்தியா கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரானிக்ஸ் பொருட்களின் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை அதிகரித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். அந்தவகையில் 2025-26 ஆம் ஆண்டுக்குள் 300 பில்லியன் டாலர் மதிப்பிலான எலக்ட்ரானிக் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியை இந்தியா எட்டும் என்று அமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் அவர்கள் தெரிவித்துள்ளார் அவரது இந்த பேச்சு இந்திய எலக்ட்ரானிக் சந்தையில் ஒரு புதிய புரட்சி ஏற்பட போகிறது என்பதை உறுதி செய்துள்ளது. ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 … Read more

மார்க் ஜூக்கர்பெர்க்-ஐ பழிவாங்கிய Metaverse கனவு.. 9 மாதத்தில் மொத்த கதையும் மாறியது..!

பலர் நிஜ வாழ்க்கையைத் தேடி அலைந்துகொண்டு இருக்கும் வேளையில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் மட்டும் டிஜிட்டல் உலகான மெட்டாவெர்ஸ்-ஐ தேடிச் சென்றார்.. இதன் விளைவு என்ன தெரியுமா..? 2022 ஆம் ஆண்டுத் துவக்கத்தில் இருந்து அமெரிக்க டெக் நிறுவனங்களுக்கும், டெக் நிறுவன தலைவர்களுக்கு மோசமான காலம் என்றாலும் மார்க் ஜூக்கர்பெர்க் மட்டும் அதிகப்படியான சரிவையும் பாதிப்பையும் எதிர்கொண்டு உள்ளார். இதனாலேயே மார்க் ஜூக்கர்பெர்க்-ன் வீழ்ச்சி வர்த்தகத் துறையில் தனித்துவமாகத் திகழ்கிறது. மெட்டா நிறுவனத்திற்கும், மார்க் ஜூக்கர்பெர்க்-க்கும் … Read more

3 வருடத்தில் 9 லட்சம் சேமிக்கனுமா? இதோ உங்களுக்கான முத்தான மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள்!

மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்வதற்கு முன், ஒருவர் தங்கள் முதலீட்டு எல்லை, ரிஸ்க் எடுக்கக் கூடிய திறன் போன்றவற்றைக் கருத்தில் கொள்ள வேண்டும். ஈக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் ஒரு முதலீட்டு போர்ட்ஃபோலியோவை பல் வகைப்படுத்துவதற்கான சிறந்த வழியாகும். மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், ஈக்விட்டி ஃபண்டுகள் பணவீக்கத்தை முறியடித்து அதிக வருமானம் தரும் திறனைக் கொண்டுள்ளன மியூச்சுவல் ஃபண்ட் முதலீடு.. எல்லா நாட்களும் பணத்தை எடுக்க முடியுமா? குறைந்த காலத்தில் அதிக லாபம் மியூச்சுவல் ஃபண்டு திட்டங்கள் … Read more

மோடி எடுக்கப்போகும் முக்கிய முடிவு.. மக்களுக்கு பாதிப்பா..?

மத்திய அரசுக்கு சுமார் 44 பில்லியன் டாலர் செலவாகும் இலவச உணவுப் பொருட்கள் வழங்கும் திட்டத்தை நீட்டிப்பதா அல்லது அரசாங்க நிதி மற்றும் உணவு விநியோகத்தில் உள்ள அழுத்தத்தைக் குறைப்பதா என்பதைப் பிரதமர் நரேந்திர மோடி கையில் தான் உள்ளது. கொரோனா தொற்றுக் காலத்தில் முறையாகக் கட்டுப்பாடுகளை விதிக்காமலும், போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்காலும், சாமானிய மற்றும் நடத்தர மக்கள் அதிகளவிலான பாதிப்புகளை எதிர்கொண்ட நிலையில், பல கோடி பேர் வேலைவாய்ப்புகளை இழந்தனர். இந்த நிலையில் வருமானம் … Read more

கூகுள் பே, போன்பே-க்கு செக்.. வாய்ப்பை தட்டி செல்லும் ஸ்விக்கி, சோமேட்டோ..!

இந்தியாவில் மட்டும் அல்ல உலகில் பல நாடுகளில் UPI சேவை பயன்படுத்தத் திட்டமிட்டும் அதற்கான பணிகளைச் செய்து வரும் இந்நிலையில் இந்தியாவில் முக்கியமான ஒரு பிரச்சனை உருவாகியுள்ளது. இந்திய UPI சேவை தளத்தில் சில நிறுவனங்கள் மட்டுமே பெரிய அளவிலான ஆதிக்கத்தைச் செலுத்தி வருகிறது ஆரம்பம் முதல் மத்திய அரசுக்கும், UPI தளத்தை நிர்வாகம் செய்யும் NPCI அமைப்புக்கும் பிரச்சனையாகவே இருந்தது. அதிலும் குறிப்பாக வெளிநாடு நிறுவனங்கள் மோனோபோலியாக இருப்பதைக் கடுமையாக எதிர்கிறது. இந்தக் கேப்-ஐ பயன்படுத்தி … Read more

ரூ.600 கோடி நன்கொடை அளித்த பிரபல தொழிலதிபர்.. எதற்காக தெரியுமா?

பல முன்னணி தொழிலதிபர்கள் மக்களின் முன்னேற்றத்திற்காக கோடிக்கணக்கில் நன்கொடை அளித்து வருகின்றனர் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் கனடா நாட்டின் மிகப்பெரிய தொழில் அதிபர்களில் ஒருவரான சிப் வில்சன் என்பவர் 76 மில்லியன் டாலர் அதாவது ரூ.600 கோடி நன்கொடை அளித்துள்ளார். அவர் கனடாவில் உள்ள வன நிலத்தை பாதுகாப்பதற்காக இந்த தொகையை நன்கொடையாக அளித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஸ்டார் ரேட்டிங்கில் டாப் 3 ஃபண்ட்ஸ்.. அட்டகாசமான 3 மியூச்சுவல் ஃபண்ட்ஸ்.. நீங்க முதலீடு? … Read more

சீனா வேலையை காட்ட துவங்கியது.. மாட்டிக்கொண்ட கம்போடியா..!!

சீனா தனது கடன் வலையில் பல நாடுகளைச் சிக்க வைத்து வரும் நிலையில், தற்போது மிகப்பெரிய திட்டத்தைக் கம்போடியா-வில் பாதியிலேயே விட்டுவிட்டு வெளியேற முடிவு செய்துள்ளது சீன நிறுவனம். சீனா பல ஆப்பிரிக்க மற்றும் தென் கிழக்கு நாடுகளில் தனது வர்த்தகத்தையும் ஆதிக்கத்தையும் நிலைநாட்டப் பெரிய திட்டங்களுக்கு நிதி உதவி செய்வதை வழக்கமாகக் கொண்டு உள்ளது. இது மட்டும் அல்லாமல் அத்தகைய பெரு முதலீட்டில் செய்யும் திட்டத்தைப் பெரும்பாலும் சீன நிறுவனங்களால் கட்டமைக்கப்படும் வழக்கத்தையும் கொண்டு உள்ளது. … Read more