ஜூன் மாதத்துக்கான 9.19 டிஎம்சி தண்ணீரை கர்நாடகம் முழுமையாக தரவில்லை: துரைமுருகன் குற்றச்சாட்டு

சென்னை: காவிரியிலிருந்து தமிழகத்துக்கு ஜூன் மாதம் தர வேண்டிய 9.19 டிஎம்சி தண்ணீரை முழுமையாக கர்நாடக அரசு வழங்கவில்லை என்று தமிழக நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் குற்றம்சாட்டியுள்ளார். சென்னை கோட்டூர்புரத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் செவ்வாய்க்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது காவிரி நதிநீர் பங்கீடு மற்றும் மேகேதாட்டு விவகாரம் குறித்து கர்நாடக மாநில துணை முதல்வர் சிவக்குமார் பேச்சு குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர் கூறியது: “உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி, கர்நாடகம் தமிழகத்துக்கு … Read more

டெல்லி மின்சார ஒழுங்குமுறை ஆணையத் தலைவர் பதவி ஏற்பை ஒத்திவைத்து உச்ச நீதிமன்றம் அதிரடி

புதுடெல்லி: டெல்லியின் மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் தலைவராக ஓய்வுபெற்ற நீதிபதி உமேஷ் குமாரின் பதவி ஏற்பை ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ள உச்ச நீதிமன்றம், இது தொடர்பாக மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. உமேஷ் குமாரின் நியமனத்தை எதிர்த்து டெல்லி அரசு தொடர்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளது. மேலும், இந்த வழக்கின் அடுத்த விசாரணை ஜூலை 11-ம் தேதி நடைபெறும். அது வரை உமேஷ் குமாருக்கு பதவிப் பிரமாணம் செய்துவைக்கும்படி டெல்லி அரசை துணைநிலை ஆளுநர் … Read more

320 ஆண்டுகள், 12 அதிபர்கள், 10 பேரரசர்கள், 2 குடியாட்சிகள்… – அச்சில் மூடுவிழா காணும் Wiener Zeitung பத்திரிகை!

வியன்னா: ஆஸ்திரியா நாட்டின் மிகவும் பிரபலமான பத்திரிகையும், உலகின் மிகப் பழமையான செய்தித்தாளுமான ‘வெய்னர் ஜெய்துங்’ (Wiener Zeitung ) இனி அச்சேறாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 320 ஆண்டு கால வரலாறு கொண்ட பத்திரிகையின் அச்சுப் பதிப்பின் மூடுவிழா அந்நாட்டு மக்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பத்திரிகையின் கடைசி அச்சுப் பிரதியில் வாசகர்கள் விவரம் அறிந்து கொள்ளும்விதமாக ஒரு விவரக் குறிப்பு இணைக்கப்பட்டிருந்தது. ஜூன் 29, 2023 அன்று வெளியான பத்திரிகையில் அந்தச் சுருள் இணைக்கப்பட்டிருந்தது. … Read more

சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார் முதல்வர் மு.க. ஸ்டாலின்

சென்னை: மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் நேற்று அனுமதிக்கப்பட்ட முதல்வர் ஸ்டாலின், சிகிச்சை முடிந்து இன்று வீடு திரும்பினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது வழக்கமான மாதாந்திர மருத்துவப் பரிசோதனைக்காக நேற்று (ஜூலை 3) சென்னை கிரீம்ஸ் சாலையில் உள்ள அப்போலோ மருத்துவமனைக்குச் சென்றார். முன்னதாக, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நேற்று தலைமைச் செயலகத்தில், தமிழகத்தில் நடைபெற்று வரும் சாலை மற்றும் பாலப் பணிகள் முன்னேற்றம் குறித்த ஆய்வுக் … Read more

அந்நியச் செலாவணி வழக்கு | அமலாக்கத்துறை விசாரணைக்கு அனில் அம்பானி மனைவி ஆஜர்

மும்பை: அந்நியச் செலாவணி சட்ட மீறல் வழக்கில் Reliance ADA குழுமத் தலைவரான தொழிலதிபர் அனில் அம்பானியிடம் அமலாக்கத் துறையினர் நேற்று விசாரணை மேற்கொண்ட நிலையில், அவரது மனைவி டீனா அம்பானி இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு ஆஜரானார். நேற்றைய விசாரணையின்போது அமலாக்கத்துறை அனில் அம்பானியின் வாக்குமூலங்களை பதிவு செய்தது. இந்த வாரத்தின் பின் பகுதியில் அவர் மீண்டும் ஆஜராக வேண்டியிருக்கும் என்று தெரிகிறது. கணக்கில் காட்டப்படாத வெளிநாட்டு சொத்துகள் மற்றும் சில வெளிநாட்டுப் பணப் பரிவர்த்தனைகள் தொடர்பாக … Read more

லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த கடாஃபியின் மகன் கவலைக்கிடம்..!

பெய்ரூட்: லிபியாவின் முன்னாள் அதிபர் கடாஃபியின் மகன் ஹன்னிபால் கடாஃபி, லெபனான் சிறையில் உண்ணாவிரதம் இருந்து வந்த நிலையில் தற்போது உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். கடந்த 1969 முதல் 2011 வரை லிபியாவின் சர்வாதிகாரியாக செயல்பட்டவர் முகமது கடாபி. கடந்த 2011-ல் அவருக்கு எதிராக மக்கள் புரட்சி வெடித்து ஆட்சி கவிழ்க்கப்பட்டது. சொந்த ஊரான சிர்டேவில் பதுங்கியிருந்த கடாபியைப் புரட்சிப் படை வீரர்கள் சுட்டுக் கொன்றனர். முகமது கடாபியின் ஐந்தாவது மகன் ஹன்னிபால் கடாபி. … Read more

ட்விட்டருக்கு மாற்றாக நாளை மறுநாள் அறிமுகமாகிறது மெட்டாவின் த்ரெட்ஸ்

கலிபோர்னியா: ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக மெட்டா நிறுவனம் ‘த்ரெட்ஸ்’ என்ற பெயரில் புதிய சமூக வலைதளத்தை வரும் 6-ம் தேதி அறிமுகம் செய்ய உள்ளது. இது ட்விட்டர் தளத்திற்கு மாற்றாக அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியா உட்பட உலக அளவில் வரும் 7-ம் தேதி த்ரெட்ஸ் பயன்பாட்டுக்கு கிடைக்கும் என தெரிகிறது. கடந்த மே மாதம் முதல் ட்விட்டருக்கு மாற்றாக புதிய தளத்தை மெட்டா உருவாக்கி வருகிறது என சொல்லப்பட்டு வந்தது. இந்த சூழலில் தற்போது … Read more

செந்தில் பாலாஜி மனைவி தொடர்ந்த வழக்கில் நீதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு

சென்னை: தனது கணவர் செந்தில் பாலாஜியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தக்கோரி அவரது மனைவி எஸ்.மேகலா, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுமீது நீதிபதிபதிகள் மாறுபட்ட தீர்ப்பு வழங்கியுள்ளனர். இதனால் வழக்கு மூன்றாவது நீதிபதி யார் என்பதை தேர்வு செய்ய தலைமை நீதிபதி அமர்வுக்கு மாற்றப்பட்டுள்ளது. சட்டவிரோத பணப்பரிமாற்ற தடைச்சட்டத்தின் கீழ் அமைச்சர் செந்தில்பாலாஜியை அமலாக்கத்துறையினர் கடந்த ஜூன் 14 அன்று கைது செய்தனர். அப்போது அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால், சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், உயர்நீதிமன்ற … Read more

தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு மும்பையில் புதிய அலுவலகம் தொடங்குகிறார் அஜித் பவார்

மும்பை: தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுபட்டுள்ள நிலையில், மும்பையில் மந்த்ராலயா-வுக்கு எதிரே கட்சிக்கு புதிய அலுவலகத்தை அஜித் பவார் இன்று தொடங்குகிறார். தேசியவாத காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரும் கட்சித் தலைவர் சரத் பவாரின் அண்ணன் மகனுமான அஜித் பவார், நேற்று முன்தினம் பாஜக கூட்டணியில் இணைந்தார். இதையடுத்து, அன்றைய தினமே அவர் மகாராஷ்டிராவின் துணை முதல்வராக பதவியேற்றார். அவரோடு, தேசியவாத காங்கிரஸ் எம்எல்ஏக்கள் 8 பேர் அமைச்சர்களாக பதவி ஏற்றனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய … Read more

இனி வெரிஃபைடு கணக்குள்ள பயனர்கள் மட்டுமே TweetDeck பயன்படுத்த இயலும்: ட்விட்டரின் அடுத்த அதிரடி

சான்பிரான்சிஸ்கோ: ட்விட்டரின் ட்வீட்டெக் (TweetDeck) சேவையை இனி சரிபார்க்கப்பட்ட (வெரிஃபைடு) கணக்கு உள்ள பயனாளர்கள் மட்டுமே பயன்படுத்த முடியும் என்று ட்விட்டர் நிறுவனம் அறிவித்துள்ளது. ஸ்பேஸ் எக்ஸ் மற்றும் டெஸ்லா நிறுவனத்தின் தலைவர் எலான் மஸ்க், கடந்தாண்டு ட்விட்டரை விலைக்கு வாங்கினார். அதன்பின் தொடர்ச்சியாக பல அதிரடி மாற்றங்களை அவர் கொண்டுவந்த வண்ணம் இருக்கிறார். மாஸ் லேஆஃப் ஆரம்பித்து ப்ளூ டிக் கட்டண முறை வரை பல மாற்றங்களைக் கொண்டு வந்தார். தற்போது ட்விட்டர் பயன்படுத்துவோருக்கு பலவித … Read more