இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது நடத்திய தாக்குதல் தொடர்பான வீடியோவை வெளியிட்டது என்ஐஏ

புதுடெல்லி: இங்கிலாந்தில் உள்ள இந்திய தூதரகத்தின் மீது கடந்த மார்ச் மாதம் தாக்குதல் நடத்த முயன்ற காலிஸ்தான் ஆதரவாளர்களின் வீடியோ காட்சிகளை தேசிய புலனாய்வு (என்ஐஏ) முகமை வெளியிட்டுள்ளது. இவர்கள் குறித்த தகவலை தெரிவிக்குமாறு மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பஞ்சாபில் காலிஸ்தான் ஆதரவுதலைவர் அம்ரீத் பால் சிங்குக்கு எதிராக போலீஸார் நடவடிக்கை எடுத்தபோது, அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் லண்டனில் உள்ள இந்திய தூரகத்துக்கு முன்பு, காலிஸ்தான் ஆதரவாளர்கள் போராட்டம் நடத்தினர். அங்கிருந்த தேசியக் கொடியை ஒருவர் … Read more

செந்தில்பாலாஜி கைது | அமலாக்கத்துறை தன் கடமையை செய்துள்ளது – புதிய தமிழகம் தலைவர் கிருஷ்ணசாமி

பழநி: அமைச்சர் செந்தில் பாலாஜி கைது விவகாரத்தில் அமலாக்கத்துறை தன்னுடைய கடமையை செய்துள்ளது என்று, பழநியில் புதிய தமிழகம் கட்சியின் தலைவர் கிருஷ்ணசாமி தெரிவித்தார். திண்டுக்கல் மாவட்டம் பழநியில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அமலாக்கத்துறை சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுத்து வருகிறது. இதில் அரசியல் காழ்ப்புணர்ச்சி, பழிவாங்கும் நடவடிக்கை இருப்பதாக குற்றம் சொல்ல முடியாது. கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜி நெஞ்சுவலி வந்தது போல் நாடகமாடுகிறார். அவர் முறைகேடாக சம்பாதித்த கோடிக் கணக்கான … Read more

‘மோடி அரசின் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கை’: அமைச்சர் செந்தில்பாலாஜி கைது குறித்து கார்கே காட்டம்

புதுடெல்லி: தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி நள்ளிரவில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டிருப்பது மோடி தலைமையிலான அரசின் பழிவாங்கல் நடவடிக்கையே என்று காங்கிரஸ் தேசிய தலைவர் கார்கே தெரிவித்துள்ளார். இதுகுறித்து காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழக மின்சாரத்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் தெரிவிக்கிறேன். இது எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மோடி தலைமையிலான அரசு மேற்கொள்ளும் துன்புறுத்தல் மற்றும் அரசியல் பழிவாங்கல் நடவடிக்கையே அன்றி வேறொன்றும் இல்லை. இதுபோன்ற … Read more

அமித் ஷா தமிழகம் வந்ததற்கும் செந்தில்பாலாஜி கைதுக்கும் தொடர்பு இல்லை – பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன்

திருநெல்வேலி: அதிமுக – பாஜக கட்சிகளிடையே பேச்சளவில் கருத்து வேறுபாடு இருந்தாலும், கூட்டணியில் எந்த பாதிப்பும் இல்லை. அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான அமலாக்கதுறை நடவடிக்கைகள் பழிவாங்கும் நடவடைக்கையல்ல. வருமான வரித்துறையின் சோதனையின் அடிப்படையிலேயே இந்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தமிழக சட்டப் பேரவை குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். திருநெல்வேலி சட்டப் பேரவை தொகுதி அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: அமைச்சர் செந்தில்பாலாஜி மீது அமலாக்கத்துறை எடுத்துள்ள நடவடிக்கை பழிவாங்கும் நடவடிக்கை அல்ல. 3 ஆண்டுகளுக்கு … Read more

Cyclone Biparjoy | குஜராத்தின் கடலோரப் பகுதிகளுக்கு ரெட் அலர்ட்

அகமதாபாத்: பிப்பர்ஜாய் புயல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து குஜராத்தின் சவுராஷ்ட்ரா, கட்ச் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மைய தகவல்: “வட கிழக்கு அரபிக்கடலில் அதிதீவிர புயலாக உருமாறியுள்ள பிப்பர்ஜாய் புயல், மெதுவாக வட மேற்கு திசையில் கரையை நோக்கி நெருங்கி வருகிறது. காலை 11.30 மணி நிலவரப்படி, மணிக்கு 3 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் கரையை நெருங்கி வருகிறது. ஜாக்குவா போர்ட் பகுதியில் இருந்து 280 கிலோ மீட்டர் தொலைவிலும், தேவபூமி … Read more

தமிழத்தில் இனி சிபிஐ விசாரணைக்கு மாநில அரசின் முன் அனுமதி தேவை: தமிழக அரசு அதிரடி

சென்னை: சிலவகை வழக்குகளுக்கென சிபிஐ-க்கு வழங்கப்பட்டிருந்த பொதுவான முன் அனுமதியை தமிழக அரசு திரும்பப்பெற்றுள்ளது. இதன்படி மத்திய புலனாய்வுத் துறை, தமிழத்தில் இனி விசாரணை மேற்கொள்வதற்கு முன்பாக, தமிழக அரசின் முன் அனுமதியை பெற்று விசாரணையை மேற்கொள்ள வேண்டும். இது தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய புலனாய்வுத் துறை எந்த ஒரு மாநிலத்தில் விசாரணை மேற்கொள்வதாக இருந்தாலும், அந்தந்த மாநில அரசின் முன் அனுமதியைப் பெறவேண்டும் என டெல்லி சிறப்புக் காவல் அமைப்புச் … Read more

இறந்ததாக கருதப்பட்ட பிஹார் நபர் நொய்டாவில் மோமோஸ் சாப்பிட்டபோது அடையாளம் காணப்பட்ட சம்பவம்!

நொய்டா: பிஹார் மாநிலம் பாகல்பூர் பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் உயிரிழந்துவிட்டதாக கருதி கடந்த நான்கு மாத காலமாக அவரது குடும்பத்தினர் துயரத்தில் இருந்து வந்துள்ளனர். இந்தச் சூழலில் நொய்டாவில் செக்டார் 50-ல் அவர் உயிருடன் இருப்பதை அவரது உறவினர் ஒருவர் அடையாளம் கண்டுள்ளார். அந்த நபர் மோமோஸ் கடையில் அப்போது இருந்துள்ளார். அந்த நபரின் பெயர் நிஷாந்த் குமார் என தெரிகிறது. கடந்த ஜனவரி 31-ம் தேதி அவரை காணவில்லை என அவரது தந்தை சச்சிதானந்த் … Read more

விண்வெளியில் பூத்த பூ – நாசா பகிர்ந்த புகைப்படம்

வாஷிங்டன்: விண்வெளியில் பூத்த பூவின் படத்தை அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு அமைப்பான ‘நாசா’ பகிர்ந்துள்ளது. இது விண்வெளி வீரர்களுக்காக பரிசோதனை முயற்சியாக வளர்க்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. உலக நாடுகள் விண்வெளியில் தங்கள் ஆதிக்கத்தை செலுத்தும் நோக்கில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றன. பிற கிரகங்களில் மனிதர்கள் வாழும் சாத்தியக்கூறுகள் தொடங்கி அந்தக் கோள்களில் நீர் உள்ளதா என்பது வரையில் பல்வேறு ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக, செவ்வாய் கிரகத்தில் மனிதர்களை குடியேற்றும் ஆராய்ச்சிகளும் நடைபெற்று வருகிறது. அப்படி … Read more

செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் விசாரிக்க கோரிய அமலாக்கத் துறை மனு மீதான விசாரணை ஒத்திவைப்பு

சென்னை: செந்தில்பாலாஜியை 15 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கோரி அமலாக்கத் துறை தாக்கல் செய்த மனு மீதான விசாரணையை வியாழக்கிழமைக்கு (ஜூலை 15) ஒத்திவைத்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோத பண பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியை வரும் 28-ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி அல்லி உத்தரவிட்டார். இதைத் தொடர்ந்து, திமுக சார்பில் செந்தில்பாலாஜிக்கு வழங்கப்பட்ட நீதிமன்ற காவலை … Read more

செந்தில்பாலாஜி கைது: கார்கே முதல் கேஜ்ரிவால் வரை – பாஜகவுக்கு தேசிய அளவில் குவியும் கண்டனங்கள்

புதுடெல்லி: சட்டவிரோத பணப் பரிமாற்ற தடைச் சட்ட வழக்கில் அமலாக்கத் துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில்பாலாஜி, நெஞ்சுவலி காரணமாக சென்னை ஓமந்தூரார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், அவரது கைதுக்கு தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தங்களின் கண்டனங்களைப் பதிவு செய்து வருகின்றனர். மல்லிகார்ஜுன கார்கே: காங்கிஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி அமலாக்கத் துறையால் நள்ளிரவில் கைது செய்யப்பட்டிருப்பதற்கு கண்டனம் … Read more